எக்ஸெல் : அதிக பைல்களை ஒரே நேரத்தில் திறக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 அக்
2010
00:00

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அனைத்திலும், ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்கும் வசதி உள்ளது. நம்மில் பலர், இரண்டு கோப்புகளைத் திறந்து பணியாற்ற வேண்டும் என்றாலும், ஒவ்வொன்றாகத் தான் திறக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறோம்.  இது தேவையில்லை. எடுத்துக்காட்டாக வேர்ட் தொகுப்பில் மூன்று கோப்புகளைத் திறக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம்.  முதலில் File  மெனுவில் Open  கட்டளை யில் கிளிக் செய்திடவும். இப்போது  My Documents  போல்டர் திறக்கப்படும். இந்த கோப்புகள் உள்ள போல்டருக்கு மாறிக் கொள்ளவும். இந்த கோப்புகள் பதியப்பட்டுள்ள   ட்ரைவ் அல்லது போல்டரில், இவை வரிசையாக இருந்தால், ஷிப்ட் கீ அழுத்தி இவற்றைத் தேர்ந்தெடுத்து Open  கட்டத்தில் கிளிக் செய்தால், இந்த மூன்றும் திறக்கப்படும். இல்லையேல், கண்ட்ரோல் கீ அழுத்தியவாறு, நாம் திறக்க விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Open  கட்டத்தில் கிளிக் செய்திடலாம்.
சரி, இவை அனைத்தையும்  ஒரே நேரத்தில் திரையில் தெரியுமாறு வைத்து எடிட் செய்திட என்ன செய்திடலாம்? இவை அனைத்தையும் திறந்த பின்னர், ஒரு கோப்பு தான் திரையில் காட்டப்படும். ஆனால், பின்னணியில் அனைத்து கோப்புகளும் எடிட் செய்திடத் தயாராகவே இருக்கும். இனி, மெனு பாரில் விண்டோவில் கிளிக் செய்தால், சிறிய ஆப்ஷன் பட்டியல் மெனு கிடைக்கும். இதில் கீழாக நீங்கள் திறந்திருக்கும் அனைத்து பைல்களும் காட்டப்படும். மேலாக உள்ள கோப்பின் பெயரில் மட்டும் ஒரு டிக் அடையாளம் தெரியும்.
இனி, இதில் உள்ள ஆப்ஷன்களைப் பார்க்கவும். புதிய விண்டோ (New Window) , அனைத்தையும் ஒழுங்கு படுத்து (Arrange All), அருகே அருகே வைத்து காண (Compare Side by Side with), , பிரித்து வைத்துக் காண (Split)  என ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். இவற்றில் எந்த வகையில் அனைத்து கோப்புகளும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வகையைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து கோப்பு களும் காட்டப்படும். கோப்புகளின் எண்ணிக்கைக் கேற்ப, ஒவ்வொரு கோப்பிற்கும், திரையில் சமமாக இடம் ஒதுக்கப்படும். நீங்கள் விரும்பினால், குறிப்பிட்ட கோப்பின் எல்லைக் கோட்டருகே, கர்சரைக் கொண்டு சென்று, கோட்டை இழுத்து, அதன் இடத்தைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். இது வேர்ட் தொகுப்பிற்கு மட்டுமல்ல; அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் பயன்படுத்தலாம்.
எக்ஸெல்: செல் அகலத்தினைச் சரி செய்திட  எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், செல் ஒன்றில் வேல்யூவிற் கான டேட்டா அமைக்கையில், டேட்டா செல்லின் அகலத்தைக் காட்டிலும் பெரியதாக இருந்தால், தொடர்ந்து ஹேஷ் (#) அடையாளம் காட்டப்படும். இதனைச் சரி செய்திட, செல்லின் ஹெடர் சென்று, அதன் வலது புற பார்டரில், டபுள் கிளிக் செய்தால் போதும். அந்த நெட்டு வரிசையில் மிக அதிகமாக உள்ள டேட்டாவிற்கு ஏற்றபடி, எக்ஸெல் அந்த வரிசையின் அகலத்தினைச் சரி செய்திடும். இந்த டிப்ஸ் ஏற்கனவே கொடுக்கப்பட்டது.
இதில் கூடுதலாக இன்னொரு வசதியும் உள்ளது. பல செல்களில் இது போல, செல் அகலம் போதவில்லை என்று தெரியவந்தால் என்ன செய்வது? அதற்கும் இதே வழிதான். ஆனால், சற்று முன்னேற்பாடாக சில வேலைகள் செய்திட வேண்டும். ஒன்றுமில்லை, எந்த செல்களில் இந்த அகலப்படுத்தும் வேலை தேவையோ, அவை அனைத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தேர்ந்தெடுத்த செல்களில், மேலே குறிப்பிட்டது போல,  ஏதேனும் ஒரு செல்லின் பார்டர் கோட்டில் டபுள் கிளிக் செய்தால், அனைத்து செல்களின் அகலமும் சரி செய்யப்படும்.
எக்ஸெல்--எண்களை ரவுண்ட் செய்திட:
எண்கள் சார்ந்த கணக்கீட்டில் வரும் முடிவுகளை, இரண்டு தசம ஸ்தானம், அல்லது முழு எண்ணாக ரவுண்ட் செய்திடுவோம். எக்ஸெல் இதற்குப் பல வழிகளை இணைத்தே தருகிறது. இதனை  ROUND   பங்சன் என அழைக்கிறோம். இது அமைக்கப்பட வேண்டிய முறை  =ROUND(num, digits) என்பதாகும். இதில்   num  என்பது நாம் ரவுண்ட் செய்ய வேண்டிய எண்ணாகும். digits என்பது நாம் எத்தனை இலக்கத்தில் இதனை ரவுண்ட் ஆக ஆக்கிட விரும்புகிறோம் என்பதைக் குறிக்கிறது. இதில் digits  ஒரு பாசிடிவ் வேல்யூவாக இருந்தால், இது எத்தனை தசம ஸ்தானம் என்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக digits  3 என இருந்தால், அந்த வேல்யூ மூன்று தசம ஸ்தானங்களில் காட்டப்படும். digits  ஒரு 0 ஆக இருந்தால்,வேல்யூ ரவுண்ட் செய்யப்பட்டு முழு எண்ணாகக் காட்டப்படும். ஒருவேளை  digits   –2   ஆக இருந்தால், ரவுண்ட் பங்சன், அடுத்த 100க்கான எண்ணாகத் தரும்.
எடுத்துக்காட்டாக, நாம் கொண்டுள்ள வேல்யூ எண் 12345.2345 என வைத்துக் கொள்வோம்.  =ROUND(12345.2345,2) எனக் கொடுத்தால் விடை 12345.23 எனக் கிடைக்கும். இதுவே  =ROUND(12345.2345,3)
என இருந்தால், 12345.24 என வரும். =ROUND(12345.2345,–2)  எனக் கொடுக்கும் போது விடையாக 12300 எனப் பெறுவோம்.
இதற்கு எக்ஸெல் தரும் மற்ற இரண்டு பங்சன்கள்  ROUNDUP  மற்றும் ROUNDDOWN   ஆகும். =ROUNDUP(12345.2345 , 2) எனக் கொடுக்கும்போது 12345.24 எனக் கிடைக்கும். =ROUNDDOWN (12345.2345 , 2)என அமைக்கையில் விடை 12345.23 ஆக வரும். இதிலிருந்து ROUNDUP என்ற கட்டளை எண்ணை மேல் நோக்கி உயர்த்தி  அமைப்பதும், ROUNDDOWN  என்ற கட்டளை எண்ணை கீழ் நோக்கி குறைவாக அமைப்பதும் தெளிவாகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X