பி.டி.எப் .கோப்புகளின் தடைகளை நீக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 அக்
2010
00:00

அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நம் பல கவலைகளைப் போக்கும் பைல் வடிவம் பி.டி.எப். ஆகும்.  இந்த வகைக் கோப்புகளைப் படிக்கக் கிடைக்கும் இலவச புரோகிராம்களின் துணை கொண்டு, பலவகை பார்மட் பைல்களை (வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், பேஜ்மேக்கர்) அவை பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால் படித்துவிடலாம். ஆனால் சில வேளைகளில் இந்த வகை பைல்களிலும் சோதனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நமக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பி.டி.எப். பைலாகக் கிடைத்துவிட்டதே என்ற ஆசையுடன் அதனைப் படிப்போம். சில பக்கங்கள் முக்கியமாக உள்ளது என்று எண்ணி, அதனை அச்செடுக்கக் கட்டளை கொடுத்தால், அச்சுக்குச் செல்லாது. அச்செடுக்க அந்த பி.டி.எப். கோப்பிற்கு தடை அமைக்கப்பட்டிருக்கும்.
சில பி.டி.எப். கோப்புகளை இணையத்திலேயே பார்க்க படிக்க வகை செய்யப்பட்டிருக்கும். இதில் சில பக்கங்களை அல்லது பத்திகளை காப்பி செய்திட முயற்சி செய்தால், டெக்ஸ்ட் செலக்ட் ஆகாது. ஏனென்றால், அதனை பி.டி.எப். ஆக வடிவமைத்தவர் காப்பி  செய்வதனைத் தடை செய்திடும் தளையை அமைத்திருப்பார்.  இதில் நம்மை மிக மிக கோபப்பட வைத்திடும் நிகழ்வாக, நாம் சில வேளைகளில் கட்டணம் செலுத்திப் பெற்ற பி.டி.எப்.கோப்புகளிலும் இந்த தளைகள் இருக்கும். ஒரு சில பி.டி.எப். கோப்புகள் பாஸ்வேர்ட் தடையுடன் வரும். இதனை நாம் எதுவுமே செய்திட முடியாது. லட்டு போல பி.டி.எப். பைல் கிடைத்தும், உடைத்துச் சாப்பிட இயலவில்லையே என்று கவலைப்படுவோம்; ஆதங்கப்படுவோம் மற்றும் ஆத்திரப்படுவோம். இந்த கவலைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நமக்கு உதவிடும் இணையதளம் ஒன்று உள்ளது. இந்த தளம் பி.டி.எப். பைல் ஒன்றில் உள்ள நகலெடுக்கும், அச்செடுக்கும் தளைகளை நீக்கித் தருகிறது. அதே போல பாஸ்வேர்ட் தடை இருந்தால், அதனையும் உடைத்துத் தருகிறது.  இந்த தளத்தின் பெயர் http://www.freemypdf.com  இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதன் நடுப்பக்கத்தில் மிக முக்கியமான பிரவுஸ் (Browse)  பட்டனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, தளைகள் மற்றும் தடைகள் கொண்ட பி.டி.எப். கோப்பினைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடவும். கோப்பின் அதிக பட்ச அளவு 7 எம்.பிக்குள் இருக்க வேண்டும். கோப்பு வெற்றிகரமாக மேலே அந்த தளத்திற்கு அனுப்பப் பட்டவுடன் Do It   என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். ஒருசில நொடிகளில், தளைகளும் தடைகளும் நீக்கப்பட்ட பி.டி.எப்.கோப்பு உள்ள புதிய இணையப் பக்கம் ஒன்று திறக்கப்படும். அதில் அந்த பைலுக்கான லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்து அந்த கோப்பினை இறக்கிப் பயன்படுத்தவும். இந்த சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால், இதற்கு ஏதேனும் நன்கொடையாகக் கட்டணம் செலுத்தலாம்.  இவ்வாறு தளைகளை நீக்குதல், பூட்டப்பட்ட வீட்டின் பூட்டுகளை உடைத்துத் திருட்டுத்தனமாகச் செல்வதற்குச் சமமில்லையா என உங்கள் மனது கேட்கலாம். எனவே தான் இந்த சேவை சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கு அல்ல என்று இந்த தளத்தில் பெரிய எழுத்துக்களில் காட்டப்படுகிறது. உங்கள் அறிவுத் தேடல்களுக்கு மட்டுமே இந்த உதவியை நாடவேண்டும். வர்த்தக ரீதியாக லாபம் அடைய இதனைப் பயன்படுத்தக் கூடாது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கந்தவேல் கோ - ஆவடி,இந்தியா
23-அக்-201006:23:51 IST Report Abuse
கந்தவேல் கோ அய்யா வணக்கம். நான் கம்ப்யூட்டர் கற்று கொண்டதே தினமலர் கம்ப்யூட்டர் மலரை வைத்துதான். இப்போ கம்ப்யூட்டரில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும் os install pannavum theriyum நன்றி dinamalar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X