செல்கான் விண் 400 அறிமுகமானது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 டிச
2014
00:00

செல்கான் மொபைல்ஸ் நிறுவனம் தன்னுடைய பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் போனைச் சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் Celkon Win 400. இந்த மொபைல் போன், இந்நிறுவனத்தின் முதல் விண்டோஸ் போன் 8.1 ஆகும். குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செல்கான் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இது வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,979.
இந்த போனில் WVGA டிஸ்பிளே கொண்டுள்ள 4 அங்குல கெபாசிடிவ் டச் திரை தரப்பட்டுள்ளது. இதில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Qualcomm Snapdragon 200 (MSM 8212) ப்ராசசர் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு 5 எம்.பி. திறனுடன் கேமரா உள்ளது. முன்புறக் கேமரா, 1.3 மெகா பிக்ஸெல் திறன் உடையதாக உள்ளது. 3ஜி இணைப்பில் இயங்கக் கூடிய திறன் கொண்ட இந்த மொபைல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது.
இதன் ராம் மெமரி 512 எம்.பி. அளவுடையது. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1. இதன் பரிமாணம் 125.4 x 65 x 10.3 மிமீ. இதன் எடை 121 கிராம்.
எப். எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், இசை ரசிகர்களை மகிழ்விக்கும். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைல் போன், அனைத்து வர்த்தக இணைய தளங்களிலும், மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது. இதனை விற்பனைக்கு வெளியிட்டு, செல்கான் மொபைல்ஸ் நிறுவனத் தலைவர் குரு உரையாற்றுகையில், மைக்ரோசாப்ட் மற்றும் குவால்காம் நிறுவனங்களுடன், கொண்டுள்ள ஒப்பந்தம், செல்கான் நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஒரு புதிய மைல்கல் என்றார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X