செய்திகள் அனுப்புவதில் வாட்ஸ் அப் முன்னிலை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 டிச
2014
00:00

உடனடியாக செய்திகளை அனுப்புவதற்கு, இந்தியாவில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அப்ளிகேஷன்களின் சந்தையில், பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் 52% இடம் பெற்றுள்ளது. அடுத்த நிலையில், பேஸ்புக் மெசஞ்சர், அடுத்து ஸ்கைப் மற்றும் வி சேட் (WeChat) இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து, மிகக் குறைவான இடத்தை வைபர் மற்றும் லைன் (Viber / Line) பெற்றுள்ளன. இந்த தகவல்களை, உலக அளவில் இவற்றின் பயன்பாட்டினைக் கவனித்து வரும் குளோபல் வெப் இண்டெக்ஸ் (GlobalWebIndex (GWI)) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கிடையே, வாட்ஸ் அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 334% உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில், வி சேட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2356% அதிகரித்துள்ளது. பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் ஸ்கைப் முறையே 192% மற்றும் 190% உயர்ந்தன.
விசேட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, உலக அளவில், சென்ற ஆண்டில், மிக அதிகமாக வளர்ந்துள்ளது. உலக அளவில், இணையம் பயன்படுத்துவோரில்ல் 23% பேர் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதில் தரப்படும் இலவச கூடுதல் வசதிகளே இதற்குக் காரணம்.
மொபைல் சாதனங்கள் வழியாக, உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வது, தற்போது இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இவர்கள், சமூக இணைய தளங்களை, இந்த வேலைக்குப் பயன்படுத்துவதனைப் புறக்கணித்து வருகின்றனர். இந்த வகையில் மொபைல் சாதனங்களின் பயன்பாடு 113% அதிகரித்துள்ளதாக, மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.
மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். இணையம் பயன்படுத்துவோரில், 79% பேர் ஸ்மார்ட் போன்களை வைத்துள்ளனர். இவர்களில் 40% பேர் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷன்களை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X