இந்தியாவில் 500 ஆப்பிள் மையங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 டிச
2014
00:00

இந்திய தகவல் தொழில் நுட்ப சந்தையினை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். முன்பு ஒரு முறை கருத்து தெரிவிக்கையில், சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவை அடுத்த நிலையில் தான் வைத்திருக்கிறோம் என்று ஆப்பிள் கூறி இருந்தது. தற்போது, இந்தியாவில் இயங்கும் மொபைல் போன்கள் விற்பனையாளருடன் இணைந்து 500 ஆப்பிள் நிறுவன சாதனங்களை விற்பனை செய்திடும் மையங்களைத் திறந்திட ஆப்பிள் முடிவெடுத்துள்ளது.
மெட்ரோ நகரங்களை அடுத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள நகரங்கள் பால் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. உலக அளவில், தகவல் தொழில் நுட்ப பிரிவில், மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியாவினை ஆப்பிள் கருதுகிறது. இந்தியா நிச்சயம் தன் வளர்ச்சியில், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களையும் எடுத்துக் கொள்ளும். ஆனால், அதற்கு ஆப்பிள் நிறுவனம் தன் சாதனங்களின் விலையைக் குறைக்கும் முடிவினை எடுத்து அமல் படுத்த வேண்டும். ஏனென்றால், இந்தியா விலை அடிப்படையில் இயங்கும் சந்தையைக் கொண்ட நாடாகும். இதற்கு எடுத்துக் காட்டாக, ஐபோன் 4 விற்பனையை எடுத்துக் கூறலாம். இதன் விலை குறைக்கப்பட்டவுடன், விற்பனையில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மற்ற ஆண்ட்ராய்ட் போன்களுடன் ஒப்பிடுகையில், ஐபோன் 4 மிகவும் பின் தங்கிய ஒன்றாக இருந்தாலும், ரூ.20,000 அளவில் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்ட போது, விற்பனை அதிகரித்தது. டேப்ளட் விற்பனைச் சந்தையிலும், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு 10% ஆக இருந்தாலும், அது குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X