பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 டிச
2014
00:00

கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் இயக்கம் குறித்து எவ்வளவு தான் படித்தாலும், அனைத்தும் நம்மால் மொத்தமாகத் தெரிந்து கொள்ள முடியாது. மேலும், பழகிய வழிகளே சில மறந்தும் போகலாம். நீங்கள் கொடுத்துள்ள 'விண்டோஸ் 7 புதிய குறிப்புகள்' கட்டுரை இதனை உறுதிப்படுத்துகிறது. இதே போல தொடர்ந்து எங்களுக்கு குறிப்புகளை வழங்கவும்.
சி.என். ஜெயதாஸ் சின்னதுரை, தஞ்சாவூர்.

விண்டோஸ் 7 சார்ந்த குறிப்பு தொகுதியில், ரிசோர்ஸ் மானிட்டர் என்ற பயன்பாடு விளக்கம், புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. உடன் இயக்கிப் பார்த்து, பயன்படுத்தினேன். இதுவரை இது குறித்து அறியாமல் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டேன். நன்றி.
ஆர். சுப்பராஜ், திருமங்கலம்.

விண்டோஸ் ரீபூட் செய்வதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா என்று தெரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பத்தினை நீங்கள் அளித்துள்ள கட்டுரை ”விண்டோஸ் ரீ பூட் ஏன்? எதற்கு?” குறிப்பாக சாப்ட்வேர் பதிந்த பின்னர், ஏன் புதிய பதிப்பு வசதிகள் இல்லை என்று தேடுபவர்களுக்குத் தாங்கள் அளித்துள்ள குறிப்பு சரியான பாடமாகும்.
என். கண்ணன், சிதம்பரம்.

பல ஆண்டுகளாக, மொபைல் போன் பயன்படுத்தி வருகிறேன். போட்டோக்கள் என்றால், டி.சி.ஐ.எம். போல்டரில், கேமரா, இமேஜ் என்று தேடி வந்திருக்கிறேன். ஆனால், நீங்கள் தந்துள்ள தகவல்களைப் படித்த பின்னரே, டி.சி.ஐ.எம். என்பதன் பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன என்று தெரிய வந்தது. நல்ல பாடப் புத்தகக் கட்டுரை போல உள்ளது. கட்டுரை எழுதியவருக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.
எஸ். கதிரவன், கோவை.

வாட்டர் புரூப் ஸ்மார்ட் போன்கள் மார்க்கட்டில் இருக்கின்றன என்பதுவே ஒரு செய்தி. ஏன் அவ்வளவாக வரவில்லை என்பது குறித்த தகவல்கள் இன்னும் சிறப்பாக இருந்தன. மிக்க நன்றி.
எம். தங்கமலர், விருதுநகர்.

லேப்டாப் கம்ப்யூட்டரில் வெளிப்புறத்தில் காட்டப்படும் எல்.இ.டி. விளக்குகள் குறித்த தகவலும், அவை எதற்காக இயங்குகின்றன என்பதுவும் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளன. கேள்வி பதில் பகுதி என்பதால், சுருக்கமாகக் கொடுத்தாலும், தெளிவாகவும் முழுமையாகவும் இருந்தது. பதில் எழுதும் ஆசிரியருக்கு என் பாராட்டுதல்கள்.
பேரா. என். சிவப்பிரகாசம், மதுரை.

ரயில் டிக்கட்டையே, அச்செடுக்க வேண்டியதில்லை என்ற நிலையில், நாம் ஏன் அச்சடித்த நூலை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மேனுவலாக எதிர்பார்க்க வேண்டும். மேலும், தேடுதல், கண்டறிதல் ஆகியவற்றிற்கு, சாப்ட் காப்பி மேனுவல் தான் நன்றாகப் பயன்படும்.
கா.சுந்தரேசன், மயிலாடுதுறை.

இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதனை நன்கு சுட்டிக் காட்டியுள்ளீர்கள். இதனை நம் வர்த்தகர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டால், இணையம் வழி வர்த்தகத்தில் முன்னோடிகளாக முன்னுக்கு வரலாம்.
டாக்டர் தி. கலைராஜன், திருப்பூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X