பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2014
00:00

”குறள் தமிழ்ச் செயலியை” நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. புதியதாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திய போது, அதன் பன்முகச் சிறப்பினை உணர்ந்தேன். யூனிகோட் முறை அமலில் இருந்தாலும், அரசு அலுவலகங்களில், உயர் அதிகாரிகள் தமிழ் பாண்ட் என்கோடிங் வேறுபாட்டினை அறியாமல், பல வகை எழுத்து வகைகளில், பைலை அமைக்கச் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையைச் சந்திக்க, குறள் தமிழ்ச் செயலி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை இலவசமாகவும் தந்துள்ள அதன் நிறுவனருக்கு அரசு அலுவலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சி.கந்தசாமி, குடியாத்தம்.

இணைய இணைப்பு பெற இத்தனை கேபிள்கள், நிலையங்கள் எல்லாம் தேவை என இன்றுதான் தெரிந்து கொண்டேன். இந்த தகவல்கள் எல்லாம் தெரியாமலேயே இதுநாள் வரை இணையத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். சில வேளைகளில் இணைப்பு இல்லாதபோது, தொழில் நுட்ப அலுவலர்களைத் திட்டி இருக்கிறோம். உங்கள் அருமையான கட்டுரையில் (”இந்தியா எப்படி இணையத்துடன் இணைகிறது?”) தரப்பட்டுள்ள தகவல்களைப் படித்தவுடன், வியப்பும் மலைப்பும் ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை மரியாதையுடனும், மதிப்புடனும் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மிக்க நன்றி.
பேரா. எஸ். சூரியபிரகாசம், சென்னை.

கடலுக்கடியில் செல்லும் கேபிள்கள் வழியாகத்தான் இணைய இணைப்பா? ஒரே மலைப்பாக இருக்கிறது. தகவல்களுக்கு நன்றி.
-என். சிதம்பர நாதன், பழனி.

ஸ்கைப் வழியாக அமெரிக்காவிற்கு இலவசமாகப் பேசலாம் என்ற தகவல் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அடிக்கடி இந்த வசதியைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் உள்ள என் பிள்ளைகளுடன் பேசி வருகிறேன். பயனுள்ள தகவல்களைத் தருவதில், கம்ப்யூட்டர் மலர் என்றுமே உயர்வான இடத்தில் உள்ளது. எங்கள் மனங்களில் என்றும் ஆட்சி புரிகிறது. நன்றி, நன்றி, நன்றி.
பா. ஜெயபால், மதுரை.

நிச்சயமாக விண்டோஸ் 10 நம்முடைய கம்ப்யூட்டர்களை மாற்றி அமைக்கும். புதிய வசதிகள் தரப்படுகையில், மக்கள் கம்ப்யூட்டர்களை செலவு செய்து அப்கிரேட் செய்திடத் தயங்க மாட்டார்கள். இது சரியான கணிப்பு.
என். சுசீலா தேவி, திருப்பூர்.

இனி வாடிக்கையாளர்களையும், பயனாளர்களையும் மையமாகக் கொண்டே டிஜிட்டல் உலகமும் அதன் சாதனங்களும் இயங்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதனை மிக அருமையாக எடுத்துக் காட்டி உள்ளீர்கள். ஸ்மார்ட் வாட்ச் என்ற பெயரில் வந்து கொண்டிருக்கும் சாதனங்கள், இந்தியாவிலும் பயன்பாட்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கா. சையத் உசேன், பரங்கிமலை.

மெகா பைட், கிகா பைட் அளவில் உள்ள நடைமுறை வேறுபாடுகளைத் தந்த பதில் பயனுள்ள, எங்களின் சந்தேகங்களைப் போக்குவதாக அமைந்துள்ளது. நன்றி.
இரா. தமிழரசு, மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X