எச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2014
00:00

இந்தியாவில், எச்.டி.சி.நிறுவனம் தன் டிசையர் 620ஜி மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 15,423. சில வாரங்களுக்கு முன்னால், எச்.டி.சி. நிறுவனம் தன் டிசையர் 620ஜி (இரண்டு சிம்) மற்றும் 620 டிசையர் மாடல் மொபைல் போன்களை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில், தற்போதைக்கு ஸ்நாப்டீல் இணைய வர்த்தக தளம் வழியாக இதனை வாங்கலாம். இந்த போனின் சிறப்பம்சங்கள்:
5 அங்குல அளவிலான திரை 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் HD IPS டிஸ்பிளே தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Octa-Core MediaTek MT6592 ப்ராசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். எச்.டி.சி.நிறுவனத்தின் Sense 6 UI இடைமுகம் இதில் அனைத்திற்கும் மேலாக இயங்குகிறது. அதே போல, HTC EYE என்ற டூல் வசதியுடன், இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன் செயல்படுகிறது. இதன் முன்புறக் கேமரா, பி.எஸ்.ஐ. சென்சாருடன் 5 மெகா பிக்ஸெல் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை அதிகப்படுத்தும் வசதியும் உள்ளது. 2100 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதில் 4ஜி அலைவரிசைக்கான சப்போர்ட் தரப்படவில்லை.
இதன் பரிமாணம் 150.1 x 72.7 x 9.6 மிமீ. எடை 160 கிராம். மார்பிள் வெள்ளை மற்றும் கிரே வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சந்தை விற்பனை விலை ரூ. 15,423 ஆக உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X