பணிச்சூழல் பிரச்னைகள்: தேவை என்ன
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2014
00:00

சமீபத்தில் மிகவும் பிரபலமான ஒரு ஐ.டி., நிறுவனம் 8 ஆண்டுகளுக்கு மேலாக அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களை பணியிலிருந்து விலக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய பட்டதாரிகளை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை நீங்களும் படித்திருப்பீர்கள்.
மாறிவரும் இன்றைய பொருளாதார சூழலிலும், பன்னாட்டு போட்டிகளிலும் பணியில் நிரந்தரமாக இருப்பது என்பதும், குறிப்பாக ஐ.டி., துறையில் பணிபுரிவதும் நம்மில் பலர் நினைப்பது போல் எளிமையானது அல்ல. அது பூக்களால் நிறைந்த மலர்ப்பாதையாக
இல்லாமல் முட்களால் நிறைந்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஏனென்றால் பணியனுபவம் என்பது நிறுவனத்திற்கு சில நன்மைகளைத் தரும் அதே நேரத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அனுபவம் மிக்க ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் நிறுவனத்தின் லாபத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்த நிறுவனங்கள் நினைக்கின்றன. இந்த வேலையை பணியனுபவம் இல்லாத புதிய பட்டதாரிகள் தற்போது பணியில் இருப்பவர்களின் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு பெற்று அதே தரத்துடன் வழங்க முடியும் என்ற நிலை ஐ.டி., துறையில் நிலவுகிறது. இதனாலேயே பெரும்பான்மையான ஐ.டி., நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்த முனையத் தூண்டுகிறது.
ஆனால் இதே பட்டதாரிகள் சில வருட பணியனுபவம் பெற்ற பின் அவர்களுக்கும் இதே நிலை வந்து விடும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. அப்படியென்றால் நாம் செய்யும் வேலையில் பாதுகாப்பு உணர்வுடன் பணி புரிவது எப்படி? நமது எதிர்காலத்தை வள
மானதாக மாற்றுவதுதான் எப்படி? இது போன்ற பல்வேறு கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை.
இன்று நாம் எப்படிப்பட்ட உயர்ந்த நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாலும் சரி, அவ்வப்போதைய பொருளாதார சூழலையும், இதில் நாம் பணி புரியும் நிறுவனத்தின் தேவையையும் உணர்வது அடிப்படைத் தேவையாக அமைகிறது. ஏதோ வந்தோம், வேலை பார்த்தோம் என்ற சராசரி மனப்பான்மையுடன் நாம் வேலை செய்து வந்தால் நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தி ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் நம்மையும் தாக்கியே தீரும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நமது தகுதியை மேம்படுத்தும் சந்தர்ப்பங்களை முற்றிலும் பயன்படுத்த வேண்டும். நமது கல்வி என்பது கல்லூரிப் படிப்புடன் நின்றுவிடாமல் நமது பணிசார்ந்த அறிவு மேம்பாட்டை நமது பணிக்காலம் முழுமையும் தொடர்ந்து கடை பிடிக்க வேண்டியது இன்றைய நவீன பணிச் சூழலின் கட்டாயத் தேவையாகவே மாறிவிட்டது.
நமது பணிச்சூழல் நிரந்தரமற்ற நிலையில் உள்ளது என்பதை உணர்ந்து நமது வளமான எதிர்காலத்திற்கான சேமிப்பையும் வலுவாக்குவது கட்டாயத் தேவையாக மாறியுள்ளது. ஆனால் யதார்த்தத்தில் இன்றைய இளைஞர்கள் உள்ளபடியே வேலையில் சேர்ந்தது முதல் தேவையற்ற செலவுகளில் தங்கள் ஊதியங்களை பெரிதும் ஈடுபடுவதாக தகவல்கள் காட்டுகின்றன.
கலாசார ரீதியாகவே பிற நாடுகளிலிருந்து நமது பண்பாடு மாறுபட்டது என்பதால் மேலை நாட்டு நிறுவனங்களில் நாம் பணிபுரிந்தாலும், நமது வாழ்க்கை முறை நமது கலாசாரம் சார்ந்ததாக இருப்பதே நமது வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
தற்போது நல்ல வேலை இருந்த போதும், வேலைக்கு மாற்றத்திற்கான சாத்தியங்களை உருவாக்குவது அல்லது அது குறித்த வழிமுறைகளையும் வாய்ப்புகளையும் அறிவது என்பதும் தற்போதைய தேவையாக உள்ளது. ஒரு வேளை நாமும் இத்தகைய பணி
நீக்கத்திற்கு உள்ளானாலும், நமது தயார் நிலையும் அதற்கான முயற்சிகளும் நமது வாழ்க்கையை அபாயங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
தொடர்ந்து அறிவு மேம்பாட்டில் ஈடுபடுவது, சேமிப்பை அதிகரித்து செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது, பணி புரியும் இடத்தில் நிறுவனத்தின் தேவை உணர்ந்து நமது முழு ஆற்றலை வெளிப்படுத்தி பணி புரிவது, வேலை மாற்றத்திற்கான திறன்களை தொடர்ந்து பெறுவது, வாய்ப்பு கிடைக்கும் போது உரிய பணி மாற்றத்தை ஏற்றுக் கொள்வது போன்றவை நமது வளமான வாழ்விற்கு வழிகாட்டும் என்பதை உணர்வோம். வெற்றி பெறுவோம்!

Advertisement

 

மேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X