2014ல் கூகுள் கடந்த பாதை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
00:00

வழக்கம் போல், கூகுள் நிறுவனத்திற்கு, சென்ற 2014 ஆம் ஆண்டு பல வெற்றிகளையும் சறுக்கல்களையும் கொண்டதாக இருந்தது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
2014ன் பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் கான்சஸ் நகரத்தில் அறிமுகப்படுத்திய, தன்னுடைய கூகுள் பைபர் (Google Fiber) இணைய இணைப்பினை மேலும் சில மெட்ரோ நகரங்களில் விரிவு படுத்தியது. இதனை அனைவரும் வரவேற்றனர். மொத்தம் 34 நகரங்களில் இது தற்போது இயங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் தகவல் தொழில் நுட்ப கருத்தரங்கில், தன் புதிய சாதனம் அல்லது வசதியினை கூகுள் அறிமுகப்படுத்தும். அந்த வகையில், 2014ல், ஆண்ட்ராய்ட் பதிப்பு 5னை, லாலிபாப் என்ற பெயரில் காட்டியது. ஆனால், மொபைல் போனுக்கான இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், அக்டோபர் மாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில், பொதுமக்களின் எதிர்ப்பினை கூகுள் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவமும் நடைபெற்றது. ஜிமெயில் பயன்படுத்தும் தன் வாடிக்கையாளர் ஒருவர், குழந்தைகளின் பாலியல் படங்களைக் கையாள்கிறார் என்று குற்றம் சாட்டி, காவல்துறைக்கு அவரை அடையாளம் காட்டியது. அவர்களும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், பொதுமக்கள் இது தங்கள் சொந்த தனிப்பட்ட நடவடிக்கைகளில், ஜிமெயில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார்கள். இது பெரும் அளவில், பன்னாட்டளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.
கூகுள் நிறுவனத்தின் பல ஆண்டுகள் முயற்சியின் பயனாக, ஓட்டுநர் தேவைப்படாத கார், இந்த ஆண்டில் வெளியானது. டிசம்பர் மாதம் இதனை இயக்கிக் காட்டியது.
கூகுள் வெளியிட்ட, குறைவான தடிமன் கொண்ட குரோம்புக் லேப்டாப் கம்ப்யூட்டர் அதற்கு ஒரு சிறப்பான இடத்தைக் கொடுத்தது. குறிப்பாக கல்விப் பிரிவில் இதன் பயன்பாடு அதிகரித்து, தனிப் புகழைத் தந்தது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X