பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
00:00

இணையத்தின் வளர்ச்சியைச் சரியாக இரண்டு கால கட்டங்களாகப் பிரித்து, இன்றைய சூழ்நிலையில், அதன்மூலம் எப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு செயல்பாட்டினையும் செயல்படுத்த முடியும் என்பதனை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள். இப்படி எல்லாம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தாலும், இப்படித்தான் முன்பும் நாம் கேள்விகளை அடுக்கினோம். ஆனால், அவை எல்லாம் நம் முன்னே ஈடேறி வருவதைப் பார்த்திருக்கிறோம். அருமையான சிந்தனையில் எழுதப்பட்ட கட்டுரை ”புத்துணர்ச்சியுடன் புதிய பாதையில் இணையம்”. பாராட்டுகளும் நன்றியும்.
பேரா எஸ். மார்த்தாண்டன், நாகர்கோவில்.

25 ஆண்டுகால இணைய வளர்ச்சியையும், அதன் எதிர்காலத்தினையும் இவ்வளவு அழகாக, அறிவுப் பூர்வமாக எடுத்துக் காட்டுவது கடினமான ஒன்றாகும். மிக அழகாக அனைத்தையும் கூறி, இப்படித்தான் நடக்கும் என விளக்கியது மிக அருமை. எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.
ஜி. ருக்மாங்கதன், சென்னை.

மைக்ரோசாப்ட் எந்த திசையில் செல்லும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எடுத்துக் கூறியது தெளிவாக உள்ளது. அதன் அப்ளிகேஷன்கள் சில மக்களிடம் எடுபடாமல் போனாலும், சமுதாயத்தின் சிந்தனையை, வாழ்க்கை முறையை மாற்றி அமைத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு என்றும் தோல்வி இருக்காது என்பதை நன்கு விளக்கி உள்ளீர்கள்.
முனைவர் எஸ். பார்த்திபன், திருப்பூர்.

அனிமேஷன் இயக்கத்தை நிறுத்தினால் கிடைக்கும் பயன்கள் பல. சரியான நேரத்தில் எடுத்துக் காட்டியமைக்கு நன்றி. வேறு எந்த நூல்களிலும் இந்த வழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை.
டி. என். பர்வீன், மதுரை.

ஹைபர்னேட் பயன்பாட்டினை எப்படித் திரும்பக் கொண்டு வருவது என்ற கேள்விக்கு, சரியாகவும் விளக்கமாகவும் பதில் அளித்து, என் பிரச்னையைத் தீர்த்தமைக்கு நன்றி. வாசகர்களின் எந்த கேள்விக்கும், பொறுமையாகப் பதில் தரும் தங்கள் ஆசிரியர் குழுவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
என்.கோகிலம், கோவை.

வரும் ஆண்டில், 4ஜி அலைவரிசைப் பயன்பாடு கிடைக்குமா என்ற நிலையில், வரும் ஆண்டில் எப்படி இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயரும் என்று ஆதாரங்களோடு விளைக்கியுள்ளது எனக்குப் பிடித்தது. நிச்சயம் நடக்கும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.
டி.பால்ராஜ், கிருஷ்ணகிரி.

எக்ஸ்பி சிஸ்டத்தினை தேய்ந்து போன டயர் கொண்ட காரோடு ஒப்பிட்ட கேள்வியும், அதற்குப் பொறுமையாக நீங்கள் அளித்துள்ள பதிலும் அருமையிலும் அருமை. ஒவ்வொரு கேள்வி பதிலும் ஒரு பாடமாக அமைகிறது, கம்ப்யூட்டர் மலரில். தயாரிப்பில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.
டாக்டர் கா. நிரஞ்சன் குமார், சிவகாசி.

இணையப் பயன்பாட்டினை மேற்கொள்ள மக்களுக்கு இலவசமாக அதன் இயக்கத்தினைக் கற்றுத் தரும் ஏர்டெல் நிறுவனத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்க வேண்டியவை. என்னதான் வியாபார நிறுவனமாக இருந்தாலும், மற்ற நிறுவனங்கள் எதுவும் செய்திடவில்லையே. நம் பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக, அணில் ராமபிரானுக்குச் செய்த உதவி போல, ஏர்டெல் நிறுவனத்தின் முயற்சிகள் அமையும். இதனைத் தெளிவாக எடுத்துச் சொன்ன தங்களுக்கும் பாராட்டுதல்கள்.
டி. கிங்ஸ்டன், பசுமலை, மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X