மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் டேப் க470
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
00:00

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் தன் புதிய டேப்ளட் ஒன்றை Tab P470 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இது இரண்டு சிம் இயக்கம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6,999. இதில் 21 மொழிகளைப் பயன்படுத்த வசதிகள் தரப்பட்டுள்ளன. இதனால், இணைய தகவல்களைத் தங்கள் மொழிகளில் பெறுவதோடு, தங்கள் தகவல்களயும் தங்கள் மொழிகளில், பயனாளர்களால் தர முடியும்.
இந்த டேப்ளட்டில் IPS TFT டிஸ்பிளே தரக்கூடிய 7 அங்குல திரை தரப்பட்டுள்ளது. இது 1024 x 600 பிக்ஸெல் திறன் கொண்டதாக இருக்கும். இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது.இதன் ராம் மெமரி 1 ஜி.பி. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 3ஜி இணைப்பு கிடைக்கிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட்.
இதில் ஒலி மூலம் தேடி அறியும் வாய்ஸ் சர்ச் வசதி, கூகுள் ட்ரைவ் பயன்பாடு, விடியோ அழைப்புகள், அடிக்கடி தொடர்பு கொள்வோருக்கான தனி அமைப்பு ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் பின்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டது. முன்புறக் கேமரா 0.3 எம்.பி.திறனுடன் இயங்குகிறது. இவற்றின் மூலம் ஹை டெபனிஷன் திறனுடன் விடியோ பதிவினை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஸ்டோரேஜ் திறன் 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் இயக்கப்படுகின்றன. இதன் பேட்டரி 3,200 mAh திறன் கொண்டது. மின் சக்தியை 158 மணி நேரம் தேக்குகிறது. தொடர்ந்து 11 மணி நேரம் பேசுவதற்கான சக்தியை அளிக்கிறது. சில்வர் மற்றும் கிரே வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,999.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X