பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஜன
2015
00:00

கம்ப்யூட்டர் ஒன்றினைப் புதியதாகப் பெற்றவுடன், அதன் பயன்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் நமக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைச் சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். கிராமப் புறங்களில், கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த கட்டுரை நிச்சயம் நல்ல படிப்பினையை வழங்கும்.
என். பார்த்தசாரதி, சேலம்.

கம்ப்யூட்டருக்கான அவசிய புரோகிராம்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நினைட் தளம் குறித்த செய்தியை இப்போதுதான் படித்துத் தெரிந்து கொண்டேன். எவ்வளவு பயனுள்ள தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் நாம் நம் பல்வேறு பணிகளை மேற்கொள்வதில் நமக்கு உதவி செய்திடும் வகையிலும், பாதுகாப்பு தருவதற்கும் எத்தனை புரோகிராம்கள் உள்ளன. அது மட்டுமின்றி, இவை அனைத்தும் ஒரே தளத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதுவும், அவற்றை இன்ஸ்டால் செய்திடுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு,
இத்தளம் தீர்வாக இயங்குவதும், மிக அருமை. இந்த உதவியை, புதிதாக இதனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நம் வாசகர்கள் நிச்சயம் என்றும் நினைவில் கொள்வார்கள்.
என். சாமிநாதன், சீர்காழி.

விண்டோஸ் 10 இலவசமாகத் தரப்பட, சரியான காரணங்களையும், தகவல்களையும் தந்திருக்கிறீர்கள். இந்த கட்டுரை நிச்சயம் வாசகர்களின் மனதிலும் நல்ல எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும். சிலராவது அவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரிவிப்பார்கள். அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாகிகளும் இதனை தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம்.
எஸ். ஞானப்பிரகாசம், மதுரை.

என்ன தடைகள் வந்தாலும், தோல்விகளைச் சந்தித்தாலும், வெற்றிப் படிகளைத் தாண்டினாலும், கூகுள் என்றும் தன் நிலை மாறாது, தொடர்ந்து இந்த உலகை, நம் வாழ்வை டிஜிட்டல் மயமாக மாற்றாமல் உறங்காது. சென்ற ஆண்டில் அது கடந்த வந்த பாதையே இதற்கு சாட்சி. நன்றாகவும் சுருக்கமாகவும் உங்கள் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
கே.என். மருதமுத்து, விழுப்புரம்.

இந்த ஆண்டில் மக்களிடையே பரவ இருக்கும் தொழில் நுட்பங்கள் பற்றிய கட்டுரை, சரியான எதிர்காலத்தைக் கணிப்பதாக உள்ளது. விவரிக்கப்பட்டுள்ள நுட்ப பயன்பாடுகளில், என்.எப்.சி. எனப்படும் மொபைல் சாதனங்கள் வழி, பணம் பரிமாற்றம் நிச்சயம் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் உண்டு.
பேரா. முனைவர் என். தணிகாச்சலம், சோழவந்தான்.

எக்ஸெல் புரோகிராமில், மவுஸ் வீலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையினை, உங்கள் கேள்வி பதில் பகுதி மூலம் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். சிறப்பான, தெளிவான விளக்கம் நன்றாக இருந்தது.
கீ. இராசேந்திரன், தஞ்சாவூர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைப் பயன்படுத்துவதில், தற்போதைய பல்வேறு விண்டோஸ் இயக்கங்களிடையே பல சிக்கல்கள் உள்ளன. இவை அனைத்தைப் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ்.ஸ்ரீனிவாசன், திருவரங்கம்.

அவுட்லுக் மற்றும் அவுட்லுக் டாட் காம் வேறுபாட்டினை தங்கள் பதில் சிறப்பாக விளக்கியது. நான் இதுவரை தவறாக எண்ணி வந்ததைத் திருத்திக் கொண்டேன்.
எஸ். செல்வராஜ், புதுக்கோட்டை

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X