பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
00:00

நீங்கள் தந்துள்ள அவசிய புரோகிராம்கள் அனைத்துமே, அனைவருக்கும் கட்டாயம் தேவைப்படும் புரோகிராம்களே. அன்லாக்கர் மற்றும் ரெகுவா குறித்து இப்போதுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். உடனே தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும் தொடங்கிவிட்டோம்.
பேரா. பா. சிவசங்கரன், நாகமலை புதுகோட்டை.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பணி மையங்களும் விற்பனை மையங்களும் அதிகம் அமைக்கப்பட்டால் தான், அந்நிறுவனத்தின் சாதனங்கள் மீது, மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்கும். ஆனால், ஆப்பிள் கேள்வி கேட்க முடியாத இடத்தில் தான் இயங்குவதாக எண்ணிக் கொண்டு, வாடிக்கையாளர்களைக் கவனிப்பதே இல்லை. அமெரிக்காவில் மட்டுமே இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இதனைக் கண்டித்து கட்டுரை ஒன்று எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பேரா. எஸ். மஹேந்திரன், விழுப்புரம்.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்து தினந்தோறும் பார்ப்பவர்கள் பலரின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்குத் தேவையான குறிப்புகளை வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
என்.ஜெயப்பிரகாசம், புதுச்சேரி.

ஸ்பார்டன் பிரவுசர் குறிப்புகளைப் படித்தால், அதிக புதுமையுடன் இது வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வருகிறது. மேலும் தகவல்களை அளிக்கவும். பிரவுசர் சந்தையில், நிச்சயம் மைக்ரோசாப்ட் தன் முதல் இடத்தை விடாது.
ஆர். ஜீவஜோதி, நாகப்பட்டினம்.

பேஸ்புக்கினை மொபைலில் மட்டும் பார்த்தால், அந்த சாதனத்தில் நிறுத்தலாம். டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்கும்போது நிறுத்த முடியாதே. எனவே, அவரவர் அக்கவுண்ட்டில் நிறுத்தக் கொடுத்துள்ள வழிகளைப் பின்பற்றலாம். எப்படி இருந்தாலும், நோட்டிபிகேஷன்கள் என்னும் அறிவிப்புகள் நிறுத்தப்பட வேண்டியவைதான்.
என்.இந்திர குமார், சென்னை.

இந்தியாவில் கூகுள் பைபர் இணைய இணைப்பா? கேட்கவே நன்றாக இருக்கிறது. கிடைத்துவிட்டால், நம் நாட்டின் டிஜிட்டல் சாலையில் இது ஒரு சிறந்த இலக்காக இருக்கும். அதிகம் பேர் பயனடைவார்கள். மத்திய அரசு இதனை ஈடேற்ற செயல்பட வேண்டும்.
டி.எஸ்.காதம்பரி, தாம்பரம்.

மானிட்டரைத் தொடர்ந்து, பாதிப்பு ஏற்படும் வகையில் பார்ப்பது, விழிகளின் திறனைப் பாதிக்கும் என்ற எச்சரிக்கையினை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை இந்த அபாயத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் சரியான அறிவுரை வழங்க வேண்டும்.
பேரா. ஆர். சாலமோன். விருதுநகர்.

இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன் பற்றி இதுவரை அறியாமல் இருந்தேன். ஆனால், இவ்வளவு பேர் இதனைப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியப்படும் தகவலே. வாட்ஸ் அப் போன்றவற்றின் முன், அதற்குப் போட்டியாகச் சில அப்ளிகேஷன்கள் இருப்பது, நல்ல ஆரோக்கியமான போட்டியும், அதனால், கூடுதல் வசதிகளும் கிடைக்கும்.
என். பரந்தாமன், சேலம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X