மொபைல் மற்றும் மொபைல் இன்டர்நெட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜன
2015
00:00

மொபைல் தொழில் நுட்பம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், இந்தியா மொபைல் பயன்பாட்டு எண்ணிக்கையில், பன்னாட்டளவில் இரண்டாவது இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது எனப் பெருமையுடன் கூறுகிறோம். இணைய வர்த்தகம் மற்றும் பிற டிஜிட்டல் சேவைகள் அனைத்துமே, மொபைல் பயனாளர்களை மையமாக வைத்தே தங்களின் செயல் திட்டங்களை வகுத்து வருகின்றன. மொபைல் வழி இணைய இணைப்பில் செயலாற்றுவது இன்று, இந்திய பயனாளர்களிடம் பெருகி வரும் பழக்கமாக உள்ளது.
ஆனால், இந்தியாவில், மொபைல் வழி இணைய இணைப்பு எந்த அளவில் இருக்கிறது என்றால், மிக மிக மோசமான நிலையில் உள்ளது என்பதனை ஒத்துக் கொள்ள வேண்டும். வளர்ந்துவிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். எடுத்துக் காட்டாக, சிங்கப்பூரில், மொபைல் வழி இணைய இணைப்பு, இந்தியாவில் தரப்படுவதைக் காட்டிலும் 16 மடங்கு அதிக வேகத்தில் உள்ளது.
இந்தியாவில், தரப்படும் மொபைல் இணைய இணைப்பு வேகம் சராசரியாக 1.1 Mbit/s என்ற அளவில்தான் உள்ளது. ஆனால், சிங்கப்பூரில் 16.7 Mbit/s ஆக இருக்கிறது. அமெரிக்காவில் இது 6.7 Mbit/s, பிரிட்டனில் 5.6 Mbit/s மற்றும் ஜெர்மனியில் 5.9 Mbit/s. உலகிலேயே மிக அதிக வேகத்தில் மொபைல் இணைய இணைப்பு கிடைக்கும் நாடுகள் பின்வருமாறு:
டென்மார்க் 21.6 Mbit/s, சிங்கப்பூர் 16.7 Mbit/s, மற்றும் ஸ்விட்சர்லாந்து 16.5 Mbit/s.
மேலே சொல்லப்பட்ட தகவல்களை, இன் டர்நெட் சொசைட்டி என அழைக்கப்படும், உலக அளவிலான அமைப்பு, பின்லாந்து நாடில் உள்ள ஆல்டோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இவை இரண்டும், இந்த ஆய்விற்கென Netradar mobile network maps என்னும் அமைப்பினை உருவாக்கி, அதன் மூலம் விரிவான ஆய்வினை வளர்ந்த நாடுகளில் மேற்கொண்டது. Netradar என்னும் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி, அவற்றை இந்தியாவில் மொபைல் பயன்படுத்தும் பலரின் மொபைல் போன்களில் பதித்து, தகவல்களைப் பெற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த அப்ளிகேஷனை ஆல்டோ பல்கலைக் கழகம் உருவாக்கி, உலக அளவில் பயன்படுத்தி வருகிறது.
இந்த ஆய்வறிக்கையில் மேலும் சில தகவல்கள் தெரிய வந்துள்ளன:
இந்தியாவில், பல நிறுவனங்கள், மொபைல் போனுக்கான இணைய இணைப்பினை வழங்கினாலும், இவை தரும் இணைய இணைப்பு வேகத்தில், மிகக் குறைந்த அளவே வேறுபாடு காணப்படுகிறது. டேட்டாவினை மொபைல் போனில் தரவிறக்கம் செய்கையில், பல்வேறு சேவை நிறுவனங்களிடமிருந்து நாம் பெறும் சராசரி வேகத்தினைப் பார்க்கலாம்.
வோடபோன் நெட்வொர்க் 1.5 Mbit/s, பி.எஸ்.என்.எல். 1.3 Mbit/s, ஏர்டெல் 1.2 Mbit/s, ஐடியா 1.1 Mbit/s மற்றும் ரிலையன்ஸ் 1.0 Mbit/s.
மொபைல் இணைய சேவையில், 5% க்கு மேல் பங்கினைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில், மிகவும் குறைவான வேகத்தைப் பயனாளர்களுக்குத் தரும் நிறுவனங்களாக, டாட்டா (0.8 Mbit/s) மற்றும் ஏர்செல் (0.5 Mbit/s) ஆகியவை உள்ளன.
மொபைல் இணைய இணைப்பு வேகம், இந்திய மாநிலங்களிடையே வழங்கப்படுவதிலும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை. ஸ்ரீலங்காவில், சராசரி மொபைல் இணைய வேகம் 2,1 Mbit/s ஆக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன், கர்நாடகா மாநிலத்தில், மொபைல் வழி நிர்வாக நடைமுறை அமலுக்கு வந்தது. இத்திட்டத்தின்படி, கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் எவரும், தங்கள் சேவைக்கென செலுத்த வேண்டிய கட்டணம், சொத்து வரி செலுத்துதல், பஸ் மற்றும் ட்ரெயின் டிக்கட் எடுத்தல், வருமான வரி கட்டுதல், மொபைல் பாஸ்போர்ட் பயன்படுத்துதல், வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவை பெறுதல் மற்றும் அரசு மற்றும் தனியார் சேவை மையங்கள் தரும் சலுகைகளைப் பெறுதல் ஆகியவற்றை, எந்த நாளிலும், எந்த நேரத்திலும் (24x7x365) பெறும் மொபைல் இணைய வசதி திட்டம், குடியரசு தலைவரால் தொடங்கப்பட்டது. ஆனால், உண்மையில், கர்நாடகா மாநிலத் தலைநகரில் கூட, இணைய இணைப்பு மிக மந்தமாகவே உள்ளது. 3ஜி இணைப்பு என்பது அரிதாகவே கிடைக்கும் வசதியாக உள்ளது.
இந்தியாவில் 90 கோடி மொபைல் போன்களும், 300 கோடி இணைய இணைப்புகளும் இயங்குகின்றன. இவற்றை மேலும் வளப்படுத்தி வேகத்தை அதிகரித்து, இன்னும் விரிவாக மேற்கொள்வது என்பது ஒரு பெரிய சவால் தான். ஆனால், பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், முதலீடு பங்குத் தொகையாகப் பெரிய அளவில் அண்மையில் பெற்றுள்ளன என்ற செய்தி, இந்த திட்டம் நடப்பு 2015ல், வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

2014ல் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவை
சென்ற ஆண்டில், இணையத்திலிருந்து அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டவை என இணையத்தைக் கண்காணிக்கும் மையங்கள் தெரிவித்துள்ளன.
1. அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்
2. ஏ.வி.ஜி. இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்
3. சிகிளீனர்
4. அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் தொகுப்பு
5. ஒய்.டி.டி. விடியோ டவுண்லோடர்
6. இலவச யு ட்யூப் டவுண்லோடர்
7. டவுண்லோட் இலவச அப்ளிகேஷன்
8. ட்ரைவர் பூஸ்டர் 2
9. மால்வேர் பைட்ஸ் ஆண்ட்டி மால்வேர்
10.ஹாட்ஸ்பாட் ஷீல்ட்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X