பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜன
2015
00:00

நுகர்வோர் டிஜிட்டல் சாதனக் கண்காட்சியின் பிரம்மாண்டம் நம்மைத் திகைக்க வைக்கிறது. நீங்கள் அங்கு அறிமுகமான பலவற்றில், சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டியிருப்பது மகிழ்ச்சியை வரவழைக்கிறது. இனி நம் வாழ்வின் பரிமாணங்கள் நிச்சயம் மாறுதல்களைச் சந்திக்கும். நம் நேரம் வீணாகாது. ஒவ்வொரு நொடியும் நாம் அனுபவித்து வாழலாம் என்ற நம்பிக்கையை இந்த சாதனங்கள் நமக்குத் தருகின்றன.
என். ராஜேந்திரன், கோவை.

தொழில் நுட்பங்களை குழந்தைகள் கற்பதற்கான சாதனங்கள் வரும் ஆண்டில் வர இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கல்வியே, குறிப்பாக அறிவியல் கல்வியே சிறந்த செல்வம் என்ற எண்ணப் பாங்கு மக்கள் அனைவர் மனதிலும் வந்துவிட்டது. இந்த அடிப்படையில் நமக்கு உதவிடும் வகையில் சாதனங்கள் கிடைப்பது நம் வளரும் குழந்தைகளுக்குப் பயனுள்ளவையாக இருக்கும்.
பேரா. சி. நாகராஜன்,மதுரை.

ஸீகேட் தரும் புதிய ட்ரைவ் மற்றும் எச்.பி. தரும் மிகச் சிறிய கம்ப்யூட்டர் குறித்த தகவல்கள், இன்றைய டிஜிட்டல் உலகின் பரவலையும், மனித இனத்தை அவை எடுத்துச் செல்லும் எதிர்காலத்தையும் காட்டுகின்றன. மிக விவரமாக இந்தக் கட்டுரையை எழுதிய ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
டாக்டர் எம். சுந்தர ராஜன், திருப்பூர்.

சத்ய நாதெள்ளா அவர்களின் “reinventing productivity” என்பது எந்த சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமைக்கும் ஒரு சவால் தான். தன் வழிகாட்டுதலில் இயங்கும் அனைவரிடமும் இந்த இலக்கினைக் காட்டி, புரிய வைத்து, அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவது இமாலயப் பணிதான். நிச்சயம் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகியாக அவர் வெற்றி பெறுவார். அதற்கு நாம் பிரார்த்திப்போம்.
பேரா. எஸ். வில்லியம்ஸ், சென்னை.

தொழில் நுட்பங்களால் நம் மனது, உடல்நிலை, ஏன் பொருளாதார நிலை கூட தாக்கப்படுகிறது. தேவைகளின் அடிப்படையில் இவற்றைப் பயன்படுத்துவதுடன், நம் உடல்நிலையைப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். மேலும், இவற்றிற்கு வஅடிமையாவதும் கூடாது. இந்த நிலைகளுக்குப் பின்னரும், நாம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றால், நீங்கள் குறிப்பிட்டுள்ள எச்சரிக்கைகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
என். கார்மேகம், மதுரை.

''பிரவுசர் தரும் பிழைச் செய்திகள்” கட்டுரையைப் படித்த பின்னர், இதுவரை இந்த செய்திகளைக் காண்கையில் ஏற்பட்ட பயம் நீங்கியது. எத்தகைய பிழைச் செய்திகள் கிடைத்தாலும் சமாளிக்கலாம் என்ற நிலை கை கூடி வருகிறது.
என். தெய்வேந்திரன், சிறுவயல்.

ஸ்பார்டன் பிரவுசர் குறித்த கூடுதல் தகவல்கள், மைக்ரோசாப்ட் எப்படியாவது இந்தப் பிரிவில் தான் மட்டுமே கோலோச்ச வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்து வருவதனைக் காட்டுகிறது. வாடிக்கையாளர்களாகிய நமக்கு இது நன்மை பயக்கும்.
எஸ். மாலினி தேவி, புதுச்சேரி.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்து தினந்தோறும் பார்ப்பவர்கள் பலரின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்குத் தேவையான குறிப்புகளை வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
என்.ஜெயப்பிரகாசம், புதுச்சேரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X