பிளாக் பெரி கிளாசிக் இந்தியாவில் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜன
2015
00:00

முழு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட, புதிய ஸ்மார்ட் போனாக, பிளாக் பெரி கிளாசிக் மொபைல் போன், பிளாக் பெரி நிறுவனத்தால், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 31,990. இதன் மல்ட்டி டச் ஸ்கிரீன் 3.5 அங்குல அளவிலானது. இதன் பிக்ஸெல்கள் 720 x 720 என்ற அளவில் உள்ளன. இதில் குவால்காம் ஸ்நேப் ட்ரேகன் குவால்காம் எஸ்4 ப்ராசசர் இயங்குகிறது. இது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிளாக் பெரி ஓ.எஸ்.10.3.1.
35 கீகள் கொண்ட, பேக் லைட் ஒளியுடன் கூடிய குவர்ட்டி திரை இதற்கு அழகூட்டுகிறது. இந்த ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தவும், விற்பனை செய்திடவும், பிளாக் பெரி ஸ்நாப்டீல் வர்த்தக இணைய தளத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில், எல்.இ.டி.ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் திறன் கொண்ட, 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகத் தரப்பட்டுள்ளது. இதன் லென்ஸ் சக்தி எப்2.2 ஆக உள்ளது. 30fps வேகத்தில் விடியோ பதிவு மேற்கொள்கிறது. முன்புறமாக, 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது.
இதில் நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.0., ஸ்லிம் போர்ட், என்.எப்.சி., மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 2,515 mAh திறன் கொண்டதாகவும், வெளியே எடுக்க முடியாததாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பிளாக் பெரி வேர்ல்ட் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் அமேஸான் ஆப் ஸ்டோர் ஆகியவற்றை எளிதாக அணுகலாம். இதனால், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்திடலாம்.
பிளாக் பெரி மொபைல் போன்கள் தங்களுக்கென சிறப்பு வசதிகளைக் கொண்டவையாகவும் அவற்றிற்குத் தனிப் பெருமை கொண்டவையாகவும் இருந்தவை. தற்போது இந்த ஸ்மார்ட் போன் மூலம், மீண்டும் பிளாக் பெரி அந்த பெயரைப் பெறுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X