பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
00:00

ப்ளாஷ் ட்ரைவ் குறித்த தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. ஏதோ, இணைத்தோம், காப்பி செய்தோம் என்று தான் இதுவரை இருந்தேன். மிகவும் தெளிவாக, வர இருக்கும் யு.எஸ்.பி. 4 குறித்த கட்டுரையில், அதன் தொடக்கம் முதலாக இன்று வரை யு.எஸ்.பி. பயன்பாட்டினை விளக்கமாக அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கட்டுரையைப் பலமுறை படித்து, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் என் மகளுக்கும் கற்றுக் கொடுத்தேன். கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.
என். ஜெயச்சந்திரன், மதுரை.

எங்கே, விண்டோஸ் 7 சிஸ்டமும், எக்ஸ்பி போல காலை வாரிவிடுமோ என்று பயந்தேன். கட்டுரையை முழுமையாகப் படித்த பின்னரே, மாற்றங்கள் வருவது நல்லதற்கே என்பதனையும், மைக்ரோசாப்ட் எதனையும் படிப்படியாக, ஒரே மாதிரியாக இயக்குகிறது என்பதனையும் புரிந்துகொண்டேன்.
எஸ். மாலா ராணி, காரைக்கால்.

இணையம் வழியாக தொலைபேசி இணைப்பு வழங்குவது, தொலை தொடர்பு உலகில் அடுத்த நல்லதொரு முயற்சியாக, மக்களுக்கு பயன் தரும் முயற்சியாக இருக்கும். இதனை, மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள் வளர்ந்து, இந்த முன்னேற்றத்திற்கு வழி விட வேண்டும். இதனைத் தடுக்கும் வகையில் செயல்படக் கூடாது.
எஸ். மரைக்காயர், நாகர்கோவில்.

நம் குடும்பத்தில், தெருவில், வேலை பார்க்கும் இடங்களில், இப்போது ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதனை உணர முடிகிறது. நீங்கள் தந்துள்ள “ மொபைல் மற்றும் மொபைல் இன்டர்நெட்” இதனை ஆதாரபூர்வமாக விளக்கி உள்ளது.
கம்ப்யூட்டர் மலரில் அடிக்கடி இது போன்ற பாடக் கட்டுரைகள் நிறைய இடம் பெற வேண்டும்.
என். உலகநாதன், தாம்பரம்.

கிண்டில் சாதனம் குறித்த பதில் குறிப்பினை இன்னும் சற்று தெளிவாகவும் விரிவாகவும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஏ.சீனுவாசன், சிவகாசி.

ஸ்பார்டன் பிரவுசர் குறிப்புகளைப் படித்தால், அதிக புதுமையுடன் இது வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வருகிறது. மேலும் தகவல்களை அளிக்கவும். பிரவுசர் சந்தையில், நிச்சயம் மைக்ரோசாப்ட் தன் முதல் இடத்தை விடாது.
ஆர். ஜீவஜோதி, நாகப்பட்டினம்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் டேட்டாவின் கீழே கோடுகள் அமைப்பது குறித்த டிப்ஸ் மிகவும் உபயோகமாய் உள்ளது. இதுவரை வேர்டில் மட்டுமே இது சாத்தியம் என்று எண்ணி இருந்தேன். இப்போது என் ஒர்க் ஷீட்டிற்கு அழகு சேர்க்கும் வேலையில் இதனையும் சேர்த்துள்ளேன்.
கா. சிராஜுதீன், புதுச்சேரி.

சென்ற வார இதழில், வழக்கத்திற்கு அதிகமாக வேர்ட் டிப்ஸ் தந்தீர்கள். இதே போல எக்ஸெல் குறித்தும் டிப்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். வாரந்தோறும் இதனைக் கடைப்பிடிக்கவும்.
மா. சுந்தர ராஜன், சேலம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X