கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
00:00

கேள்வி: பிளாக் பெரி போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன்.இதன் டச் ஸ்கிரீன் இயக்கத்தினை ஆப் செய்திட முடியுமா? முடியும் என்றால், எந்த பட்டனை அழுத்த வேண்டும். இணையத்தில் தேடிப் பார்த்த போது இதற்கு விடை காண இயலவில்லை.
என். சீனிவாசன், தஞ்சாவூர்.
பதில்:
உங்களுடைய பிளாக் பெரி மாடல் 9900 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது ஒரு டச் ஸ்கிரீன் போன். இதன் திரை இயக்கத்தினை ஆப் செய்திட அதில் வசதி தரப்படவில்லை. டச் ஸ்கிரீன் போன் ஒன்றில், டச் ஸ்கிரீன் திறனை முடக்கி வைத்தால், அதில் பல வசதிகளை நாம் இழக்க வேண்டியதிருக்கும். நீங்கள் குறிப்பிட்ட போன் மாடலில், டச் ஸ்கிரீன் தரப்பட்டாலும், முழுமையான கீ போர்ட் ஒன்றும் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த மாடல் போனை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனப் போன்களுக்கு எதிரான போட்டி போனாக பிளாக் பெரி களம் இறக்கியது. இதனை விரும்பும் பயனாளர்கள் பலர், இந்த டச் ஸ்கிரீன் போனில் தரப்பட்டுள்ள கீ போர்டுக்காகவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், ஸ்கிரீன் செயல்பாட்டினை ஓரளவிற்கு லாக் செய்திட சில வழிகள் தரப்பட்டுள்ளன. ஸ்கிரீனை லாக் செய்துவிட்டு, கீ போர்டைப் பயன்படுத்தவும் முடியாது.

கேள்வி: நான் பல பிரவுசர்களைப் பயன்படுத்துகிறேன். அனைத்திலும் உள்ள பேவரிட் லிஸ்ட்டுகளை ஒருங்கிணைக்க முடியுமா? அதன் மூலம், அனைத்து பிரவுசர்களிலும், இணைய தள முகவரி குறித்த டேட்டாவினை ஒரே மாதிரியாக அமைக்க இயலுமே. அதே போல, ஏதேனும் ஒரு பிரவுசரில் புதிய முகவரி ஒன்றை அமைக்கையில், அது அனைத்து பிரவுசர்களிலும், இணையுமா?
என். பிரகாஷ் ராஜன், சென்னை.
பதில்:
மிக அருமையான கேள்வி. பயனுள்ள கேள்வி. அதிகமாகப் பயன்படுத்தப்படும் பல பிரவுசர்களில் sync எனப்படும் ஒருங்கிணைக்கும் செயல்பாட்டிற்கான டூல் தரப்பட்டுள்ளது. நம்முடைய பேவரிட் புக்மார்க்குகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கலாம். இதன் மூலம், இதே பிரவுசரை மற்றொரு கம்ப்யூட்டரில் இயக்குகையில், நமக்கு தளங்கள் கிடைக்கலாம். ஆனால், ஒன்றில் பயர்பாக்ஸ் பிரவுசரையும், இன்னொரு கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரையும் இயக்கினால், இரண்டிற்கும் இடையே இந்த ஒருங்கிணைக்கும் வசதி கிடைக்குமா? கிடைத்தால் தானே, முகவரிகளை இணைக்க முடியும். அதிர்ஷ்டவசமாக இதற்கு உதவிடும் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இருக்கின்றன.
அவற்றில் ஒன்று Xmarks என்பதாகும். இது பயர்பாக்ஸ், குரோம், சபாரி மற்றும் இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களின் பேவரிட் முகவரிகளை ஒருங்கிணைக்கிறது. இதனை இலவசமாக இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து விட்டால், பிரவுசர்களில் உள்ள பழைய புக்மார்க்குகளையும், புதிய புக் மார்க்கினையும் ஒருங்கிணைக்கிறது. இதற்கு www.xmarks.com என்ற இணைய தளம் சென்று, இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட Install Now பட்டனை அழுத்தவும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும். யூசர்நேம், பாஸ்வேர்ட் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளைத் தரவும். இவற்றின் மூலம், எக்ஸ்மார்க்ஸ் தளம் சென்று, எந்த பிரவுசர் வழியாகவும், நீங்கள் பயன்படுத்திய அனைத்து புக்மார்க்குகளையும் பெறலாம்.
இது மட்டுமின்றி, சில கூடுதல் வசதிகளையும் இந்த அப்ளிகேஷன் புரோகிராம் தருகிறது.

கேள்வி: கீ போர்டில் உள்ள ஸ்பெஷல் கீகள் (நம் லாக், ஸ்குரோல் லாக் போன்றவை) அழுத்தப்படும்போது, திரையில் அவை காட்டப்படும் வகையில் செட் செய்திட என்ன வழி உள்ளது. நான் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். சில நேரங்களில், கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்ட நிலையில், பாஸ்வேர்ட் மற்றும் சில ரகசிய கடவுச் சொற்களை டைப் செய்துவிட்டு, ஏன் இயங்கவில்லை என்று குழப்பம் அடைகிறோம். வெகு நேரம் கழித்தே, கேப்ஸ் லாக் இயக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். இந்த உளைச்சலில் இருந்து விடுபடும் வகையில், ஏதேனும் செட்டிங்ஸ் முறை உள்ளதா?
-என். கோவிந்த பெருமாள், திருச்சி.
பதில்:
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், குறிப்பாக விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு இல்லை. கண்ட்ரோல் பேனலில் இதற்கான வழியும் இல்லை. ஆனால், இணையத்தில் இதற்கான புரோகிராம் ஒன்று உள்ளது.
அதன் பெயர் கீ போர்ட் இண்டிகேட்டர் (Keyboard Indicator). இதனை இயக்கிவிட்டால், கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், அதற்கேற்ற வகையில் இதன் செட்டிங்ஸ் அமைக்கப்பட வேண்டும். ஸ்டேட்டஸ் பாரில் இந்த கீகள் என்ன நிலையில் உள்ளன என்று காட்டப்படும். கீகள் அழுத்தப்பட்டிருந்தால், அதற்கான இடத்தில் சிகப்பு வண்ணமும், அழுத்தப்படாத நிலையில் ஊதா நிறமும் காட்டப்படும். அல்லது இதற்கான ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்றால், கீகள் எந்த நிலையில் உள்ளன என்று நமக்கு செய்தியாகக் கிடைக்கும். கீ அழுத்தப்படும்போது, அந்த வேளையிலும் மாறுதல் குறித்த செய்தி காட்டப்படும். இந்த செய்தி திரையின் எந்தப் பகுதியில் காட்டப்பட வேண்டும் என்பதனையும் நாம் வரையறை செய்திடலாம். இதனால், நாம் அறியாமல் இந்த கீகளை அழுத்தினால், உடனே எச்சரிக்கையாகச் செயல்படலாம். இந்த புரோகிராமினை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட http://sites.google.com/site/roidayan/projects/keyboardindicator என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இந்த புரோகிராம் செயல்பட டாட் நெட் பிரேம் ஒர்க் 2 உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இயக்கத்தில் இருக்க வேண்டும்.

கேள்வி: நான் பயன்படுத்தும் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், விடியோ பைல்களை, எப்போதும் விண்டோஸ் மீடியா பிளேயர் அப்ளிகேஷனலியே திறக்கப்படுகிறது. காரணம், இதுவே விடியோ பைல்களுக்கான புரோகிராமாக, மாறா நிலையில் உள்ளது. இதனை மாற்றி வி.எல்.சி. பிளேயரை மாறா நிலையில் அமைக்க விரும்புகிறேன். இதனை எப்படி அமைப்பது?
எஸ். ஜெயப்பிரகாஷ், திருவாதவூர்.
பதில்:
இதனை மிக எளிதாக மேற்கொள்ளலாம். இதற்குப் பல வழிகள் உள்ளன. இருப்பினும் எளிய வழி ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். கம்ப்யூட்டரில் உள்ள விடியோ பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். அதன்மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு மெனு கிடைக்கும்.
கிடைக்கும் மெனுவில், “Open With” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். மீண்டும் “Browse” என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் புரோகிராம்பட்டியலில் VLC Media Player என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் கீழாக, “Always use the selected program to open this file” என்று இருப்பதற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருப்பதனை உறுதிப்படுத்தவும். அல்லது, ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்தால், நீங்கள் வீடியோ பைல்களைத் திறக்க, வி.எல்.சி. பிளேயர் புரோகிராமினை மட்டும் திறக்கும்படி, கம்ப்யூட்டருக்கு கட்டளை கொடுத்துள்ளீர்கள் என்றாகிறது. இனி, எந்த விடியோ பைல்கள் மீது கிளிக் செய்தாலும், அது வி.எல்.சி. பிளேயர் புரோகிராமில் தான் திறக்கப்படும்.

கேள்வி: புதியதாக மைக்ரோசாப்ட் லூமியா ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். மொபைல் பயன்படுத்துவதில், முன்பு நீங்கள் ஒருமுறை, அப்ளிகேஷன் மற்றும் விட்ஜெட் குறித்தும், அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் எழுதி இருந்தீர்கள். ஆனால், இவை இரண்டும் ஒரே மாதிரியாகச் செயல்படுவது போலவே உள்ளது. நோக்கியா லூமியா என்பதால், இந்த நிலையா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா?
என். சந்திரா கார்த்திக், மதுரை.
பதில்:
மொபைல் போன் பயன்பாட்டில், விட்ஜெட்டுகள் (Widget) என்பவையும் அப்ளிகேஷன்களே. ஆனால், இவற்றின் செயல்பாட்டில் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை இங்கு விளக்குகிறேன். மொபைல் போன் ஒன்றில், சீதோஷ்ணநிலையைக் காட்டும் விட்ஜெட் (weather widget) அப்போதைய சீதோஷ்ணநிலையைக் காட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் அதில் டேப் செய்தால் தான், மேலும் பல விபரங்களைக் காட்டும். விட்ஜெட் என்பது உங்கள் மொபைல் போனின் திரையில் தங்கி, எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். இதனால், இதனைப் பார்த்தாலே போதும்; நீங்கள் அது தரும் தகவலைப் பெறலாம். இந்த தகவலைப் பெற இதற்கென ஓர் அப்ளிகேஷனை நீங்கள் இயக்க வேண்டியதில்லை. பல வேளைகளில், இந்த விட்ஜெட்கள், அவற்றை நீங்கள் டேப் செய்திடும் வரை, மினிமைஸ் செய்யப்பட்டே இருக்கும். மிகப் பிரபலமான விட்ஜெட் குறிப்பிட வேண்டும் என்றால், நேரம் காட்டும் கடிகாரம் மற்றும் சீதோஷ்ண நிலை காட்டும் விட்ஜெட் ஆகியவற்றைக் கூறலாம். இவற்றை டேப் செய்தால் மட்டுமே கூடுதல் தகவல்களைத் தரும்.
ஆனால், ஓர் அப்ளிகேஷன் என்பது, அதன் தகவல்களைப் பெற வேண்டும் எனில், அதனை டேப் செய்திட வேண்டியதிருக்கும். இனி, உங்கள் சந்தேகத்திற்கு வருவோம். விட்ஜெட்டுகள் சற்று கூடுதலான மெமரி மற்றும் பேட்டரி சக்தியைப் பயன்படுத்தும். ஏனென்றால், நீங்கள் போனை எடுத்தவுடனேயே, ஸ்கிரீன் உயிர் பெற்று, அதன் தகவல்கள் காட்டப்படுகின்றன. ஆனால், அப்ளிகேஷன்கள், நீங்கள் அவற்றைத் திறக்கும் போதுதான், பேட்டரி, ராம் மெமரி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இறுதியாக, நீங்கள் நீக்கிய பின்னும், ஓர் அப்ளிகேஷன் இயக்கத்திற்கு வருவதற்குக் காரணம், அவை வேறு ஒரு இயக்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுதான். எனவே, இவை தாமாக இயக்கத்திற்குத் தயாராக இருக்கின்றன.

கேள்வி: இன்டர்நெட்டில் பல தளங்கள் வழியே மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. கூகுள் தேடல்கள் உலகெங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தகவல்களைப் படிக்கையில், அப்படி எவ்வளவுதான் அனுப்பப்படும் பெறப்படும் என்ற வியப்பு ஏற்படுகிறது. இதற்கு ஏதாவது கணக்கு உள்ளதா?
என். வாசுகி, திருமங்கலம்.
பதில்:
நல்ல கேள்வி. இணையத்தின் பயன்பாட்டை நாம் எந்த அளவிலும் கணிக்க முடியாது எனப் பலர் எண்ணுகின்றனர். அது ஓரளவிற்கு உண்மை என்றாலும், ஒரு சில முயற்சிகள் இணையத்தில் என்ன நடக்கிறது என்பதனைக் கண்டறிந்துள்ளனர். டோமோ (Domo) என்ற அமைப்பு இது குறித்து ஆய்வு செய்து, தகவல்களை வெளியிட்டுள்ளது. உங்கள் கேள்வி சார்ந்த பதில்களைத் தருகிறேன்.
இணையத்தில் ஒரு நிமிடத்தில், 21 கோடி மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. 40 லட்சம் கூகுள் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 25 லட்சம் பேர் பேஸ்புக் தளத்தில் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். 48 ஆயிரம் அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. 72 மணி நேரம் ஓடக் கூடிய விடியோ பைல்கள் பதியப்படுகின்றன. அமேஸான் வர்த்தக இணைய தளத்தில் 83 ஆயிரம் டாலர் மதிப்பில் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. ட்விட்டர் தளத்தில், 2 லட்சத்து 77 ஆயிரம் செய்திகள் பதியப்படுகின்றன. வாட்ஸ் அப் தளத்தில், 3 லட்சத்து 47 ஆயிரத்து 222 போட்டோக்கள் பயனாளர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இன்னும் பல தகவல்கள் உள்ளன. இணைக்கப்பட்டுள்ள படத்தினைப் பார்க்கவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X