130 கோடி ஸ்மார்ட் போன் விற்பனையானது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2015
00:00

சென்ற 2014 ஆம் ஆண்டில், பன்னாட்டளவில் 130 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.சி. ( I D C - International Data Corporation) ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் இறுதியில் இந்நிறுவனம், 2014ல் நூறு கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பினை அறிவித்தது. ஆனால், எதிர்பார்ப்பிற்கும் மேலாக, 130 கோடி விற்பனையாகி உள்ளது. இதில் சாம்சங் நிறுவனம் 7 கோடியே 51 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 7 கோடியே 45 லட்சம் என்ற இலக்கினை எட்டியது. லெனோவா (மோட்டரோலா உட்பட) 2 கோடியே 47 லட்சம், ஹூவே 2 கோடியே 35 லட்சம், ஸியாமி 1.66 கோடி, மற்ற நிறுவனங்கள் 16 கோடியே 9 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்தன. பன்னாட்டளவில், 2013 ஆம் ஆண்டைக் காட்டிலும் 27.6% அதிகமாக ஸ்மார்ட் போன்கள், 2014 ஆம் ஆண்டில் விற்பனையாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, ஏற்கனவே இயங்கும் போன்களின் இடத்தில் வாங்கப்பட்டவையாகும். முதல் முறை மொபைல் போன்கள் வாங்குபவர்களின், குறைந்த விலை போன்களையே அதிகம் நாடிச் சென்றனர். சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில், ஆப்பிள் நிறுவனம், தன் ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் மூலம், சாம்சங் நிறுவனத்துடனான போட்டியில் சற்று முன்னேறியது. இந்த ஆண்டில், ஆப்பிள், சாம்சங் நிறுவனத்தை முந்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X