வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2015
00:00

வேர்ட் : ஹைபன்
வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும். இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒருசேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.

1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.
2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.
4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.
எண்களை எழுத்தால் எழுத
வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. “He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் “He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து,அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.
முதல் எழுத்து அலங்காரம்
வேர்ட் டாகுமெண்ட்களில், பாராவின் முதல் எழுத்தை அல்லது கட்டுரையின் தொடக்க பத்தியின் முதல் எழுத்தினைச் சற்றுப் பெரிதாக, அலங்காரத்துடன் அமைப்பார்கள். இது ஒரு வித அழகு படுத்தும் முயற்சியே. இதில் ஒரு வகை Drop cap என்பதாகும். இதனை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
1. டெக்ஸ்ட்டை வழக்கம் போல வேர்ட் புரோகிராமில் அமைக்கவும்.
2. பத்தியில் முதல் எழுத்தை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
3. ரிப்பனில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. கிடைக்கும் Text குரூப்பில், Drop Cap என்பதன் மீது கிளிக் செய்திடவும். வேர்ட் ட்ராப் கேப் அமைத்திட சில பொதுவான ஆப்ஷன்களைக் காட்டும்.
5. இங்கு Drop Cap Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ட்ராப் கேப் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. உங்கள் விருப்பப்படி, ட்ராப் கேப் எப்படி அமைய வேண்டும் என்பதனைத் தேர்ந்
தெடுக்கவும்.
7. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
குறிப்பிட்ட பக்கம் உடனே செல்லமிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று நிறுத்திப் பின்னர் நாம் விரும்பும் இடத்திற்கு வர வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல ஒரு சுருக்கு வழி உள்ளது.
Edit மெனு சென்று, Go To செல்லவும். அல்லது எப்5 கீ அழுத்தவும். உடனே, Find and Replace டயலாக் பாக்ஸ், Go To என்ற பிரிவில் திறக்கப்படும். இடது பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்புவது எந்த அடிப்படையில் Page, Line, Section எனத் தொடங்கி 13 ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் Page தேர்ந்தெடுத்து, வலது பக்கம், பக்க எண்ணை டைப் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்தால், குறிப்பிட்ட பக்கம் காட்டப்படும்.
குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட
வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
1. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், Ctrl+F கீகளை அழுத்தவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும். இங்கு Editing groupல் Find tool அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். பின் Advanced Find என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். அதில் Find என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
2. More என்ற பட்டன் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸின் விரிவான தோற்றத்தினைக் காட்டும். Find What கட்டத்தில் உள்ள எதனையும் நீக்கிவிடவும். No Formatting பட்டன் இருந்தால் அதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Format பட்டனில் கிளிக் செய்து, பின்னர், Font என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Find Font என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். இப்போது, Effects என்ற பிரிவில் Superscript, Subscript போன்றவை ஷேட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அதாவது, இந்த பண்புகள் எல்லாம், தேடலில் ஒரு அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பொருள்.
4. அடுத்து நீங்கள் தேடும் டெக்ஸ்ட்டில் இருக்க வேண்டிய பண்புகள் (character attributes) எவை என்று தேர்ந்தெடுக்கவும். இந்த பண்புகளின் பெயர்கள் அடுத்து இருக்க வேண்டிய கட் ட த்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்க மறக்க வேண்டாம்.
5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்திடவும்.
தெரிந்து கொள்ளுங்கள்
Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும்.
RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.
Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X