பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2015
00:00

ஒரு பக்கம், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்கள் நம் நேரத்தை வீண் செய்திட வழிகளைத் தருகின்றன என்ற கூற்று தற்போது வலுப்பெற்று வந்தாலும், இந்தியாவில் பேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவது, நாம் அதைப்பற்றி எல்லாம் கவலைப் படவில்லை என்ற நிலையைக் காட்டுகிறது. அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கு இதன் இந்திய பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது என்பது, நம் முன்னேற்றத்தைக் குறிக்கிறதா? அல்லது வீணாக நேரத்தைப் போக்கும் பாங்கினைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை.
டாக்டர் ஆர்.கே. வரதராஜன், திருச்சி.

விண்டோஸ் 10 சிஸ்டத்தைக் காட்டிலும், நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் ஹோலோ லென்ஸ் அனுபவம் நிச்சயம் நமக்கு புதிய ஒன்றாய் இருக்கும். டிஜிட்டல் வழியான உலகமும், நம் மெய்யான உலகமும் கலந்து நமக்குக் கிடைக்க இருப்பது மிகவும் த்ரில்லிங்காக இருக்கும். விரைவில் இந்த அனுபவத்தினைப் பெறுவோம்.
டாக்டர் எம். நரசிம்மன், சென்னை.

தன் பிரவுசர் சந்தையை நிச்சயம் தன் வயப்படுத்தும் வகையில், மைக்ரோசாப்ட் கூடுதல் முயற்சிகளுடன் ஸ்பார்டன் பிரவுசரை உருவாக்கும். டிஜிட்டல் சந்தையில், முதலிடத்தை என்றும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற வெறி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வந்துவிட்டது. இதற்கு கூகுள் என்ன பதிலடி கொடுத்து, நம்மை வசியப்படுத்தப் போகிறது என எண்ணுவதும் மகிழ்ச்சியாகவே உள்ளது.
எஸ். பிரேமா சந்திரன், புதுச்சேரி.

''மக்கள் மறந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள்” குறிப்புகளில் கொடுக்கப்பட்ட அனைத்தும், அதிக பயனுள்ளதாகவே உள்ளன. ஆனாலும், நாம் இவற்றை அடிக்கடி பயன்படுத்தாமல் இருந்திருக்கிறோம் என்பது வியப்பாகத்தான் உள்ளது. இப்போது, எப்படியாவது இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று அடிக்கடி பயன்படுத்துகிறேன்.
ஆர். சிவரஞ்சனி, தூத்துக்குடி.

பவர் பேக் குறித்து இன்னும் கூடுதலான குறிப்புகளுடன், அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், அவற்றின் விலை, திறன் அளவு ஆகியவற்றைப் பற்றிய கட்டுரை ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மா. விவேக்ராஜா, மதுரை.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு நாள் நம்மிடம் இருந்து விடை பெறும். எக்ஸ்பியில் நமக்குக் கிடைத்த அனுபவம் இதற்கான மன உறுதியைத் தந்துள்ளது. அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10க்குத் தயாராவோம்.
எப். அருள்தாஸ் அந்தோணி முத்து, பெருங்குடி.

மக்கள் விரும்பிய விண்டோஸ் தொகுப்புகள் குறித்த கணக்கீடு மிகச் சரியாக உள்ளது. என் 30 ஆண்டு கால அனுபவத்தில், விண்டோஸ் வந்த பின்னர், எனக்கு ஏற்பட்ட அனுபவமே, இந்தக் கணக்கெடுப்பிலும் காட்டப்பட்டுள்ளது. அதிகமாகக் கற்றுக் கொள்ளத் தேவை இல்லாமல், எளிதில், விரைவான பயன்பாட்டினைத் தந்த விண்டோஸ் இயக்கத்தினையே மக்கள் விரும்பி உள்ளனர் என்பது தெளிவாய்த் தெரிகிறது.
என். கேசவன், சிதம்பரம்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X