ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 அக்
2010
00:00

சிக்க வைக்கும் தூண்டில்கள் கட்டுரையில் உள்ள பாரா தலைப்புகளை மட்டும் பெரிய பிரிண்டாக எடுத்து, அலுவலகத்தில் ஒட்டி வைத்துள்ளோம். எச்சரிக்கைக்காக.
- செ. மூர்த்தி, கோவை
பி.டி.எப். முகமூடியுடன் வைரஸ் என்பது புதிய செய்தியாக உள்ளது. வைரஸ் வரும் வழிகள் தான் எத்தனை. எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி.
-  டி.என். ஆல்வின் சாமுவேல்
ஆப்பிள் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்பின மைக்ரோசாப்ட் வெளியிடுகிறதா? இதே போல ஆப்பிள் செய்திடுமா?
-  கெ. லிங்குசாமி,  மல்லாங்கிணறு
டூல்பார்கள் நமக்கு எட்டும் தூரத்தில் இருந்தால், எண்ணிய வுடன் கிடைத்தால் எவ்வளவு வசதி. நீங்கள் தந்துள்ள வழிகள், இதற்கான பாதைகளத் தருகின்றன. நல்ல கட்டுரை. பாராட்டுக்கள்.
-  டி.கே. கிருஷ்ணசுவாமி,  வயதானோர் இல்லம், அடையார், சென்னை
நானா மெயில் அனுப்பினேன்? இந்த கேள்வியை நாங்கள் பலமுறை நண்பர்களிடம் கேட்டுவிட்டோம். எங்களிடமும் நண்பர்கள் கேட்டுவிட்டனர். தங்கள் கட்டுரை, நண்பர்களுக்கிடையே சந்தேகத்தைப் போக்கி, உண்மையைப் புரியவைத்தது.
-  எஸ். விஜயா, கோயம்புத்தூர்.
ஆண்ட்டி வைரஸ், ஸ்பைவேர் போன்ற அனைத்து இலவச புரோகிராம் குறித்தும் தகவல்கள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏவிஜி குறித்த தகவல் பயனுள்ளதாக உள்ளது. அப்டேட் செய்து கொண்டேன்.
-  என். சுடர்விழி, சென்னை
விண்டோஸ் போன் 7 சிஸ்டம் கிடைத்த பின்னர் அதனால் கிடைக்கும்  கூடுதல் பயன்களை எழுதுங்கள். மாற்றிக் கொள்ள முடிவு எடுக்க உதவும் அல்லவா!
-  கரு. முத்தையா, காரைக்குடி
ஹார்ட் டிஸ்க் உடைப்பதில் கூட எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எழுதியுள்ள உங்களை எங்கள் குருவாக மதிக்கிறோம்.
-  கிருஷ் ஐ.டி. மாணவர் மன்றம், கிருஷ்ணன் கோவில்
எப்படி எல்லாம் லேப்டாப் கம்ப்யூட்டர்களை வைத்துப் பயன்படுத்தலாம் என்பதற்கு, உங்கள் படங்களே நல்ல வழிகாட்டி கள்!
-  சா. முத்து வேல், மதுரை
போலியாக ஆண்ட்டி வைரஸ் கிடைக்கும் என்ற தூண்டிலில் மாட்டி, துன்பம் அனுப வித்தவன் நான் என்ற முறையில், தாங்கள் காட்டிய தூண்டில்களை வரவேற்கிறேன். இனியாவது கவனமாக நம் வாசகர்கள் இருக்க வேண்டும்.
-  எம். சுப்பிரமணியம், விழுப்புரம்
அபவுட் பிளாங்க் குறித்த தகவல்கள் பல தெளிவுகளை உண்டாக்கின. நன்றி.
-  வி. சாமுண்டீஸ்வரி, இன்சூரன்ஸ்  நிர்வாக அலுவலர், சென்னை

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manimaran - pondicherry,இந்தியா
25-அக்-201015:25:03 IST Report Abuse
manimaran antivers free downlode to system
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X