மாநில மொழி வழியில் இணையத்தில் பணம் செலுத்த
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
00:00

கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் சமூக தளங்களில் மாநில மொழிப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில், 15 கோடி பேர் ஆங்கிலம் அறிந்தவர்களாக, அம்மொழியை நன்கு பயன்படுத்துபவராக உள்ளனர். 37 கோடி பேர் மாநில மொழிகளில் செய்தித்தாள்களைப் படிப்பவர்களாக உள்ளனர். நூறு கோடி இந்தியர்களில், பத்தில் ஒருவருக்குத்தான் ஆங்கில மொழிப் பயன்பாடு தெரிந்துள்ளது. இந்திய இணைய நிறுவனங்கள் தங்கள் வர்த்தகம் மேலோங்க, மாநில மொழிகளிலும் தங்கள் தளத்தில் விபரங்களையும் தகவல்களையும் தந்து வருகின்றன. எடுத்துக் காட்டாக, மேக் மை ட்ரிப் (MakeMyTrip) என்னும் பயணங்கள் பதிவு வர்த்தகம் மேற்கொண்டு வரும் தளம், குஜராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தன் தளத்தை உருவாக்கியுள்ளது. ஸ்நாப்டீல் தளமும் (Snapdeal) பல மாநில மொழிகளில் தன் தள இயக்கத்தினைத் தருகிறது.
இருப்பினும், வர்த்தக இணைய தளங்களில் பொருட்கள் வாங்குகையில், பொருட்கள் குறித்த விளக்கங்கள் மாநில மொழிகளில் இருந்தாலும், பணம் செலுத்தும் போது, அதற்கான வழி காட்டுதல்கள் முற்றிலும் ஆங்கிலத்திலேயே இருந்து வருகின்றன. பேமெண்ட் கேட் வே எனப்படும் இந்த பணம் செலுத்தும் தளங்களில் எப்போதும் ஆங்கிலமே பயன்பட்டு வருகிறது. இதனால், ஆங்கில மொழி அறியாத மக்கள் பணம் செலுத்துவதில் குழப்பம் அடைகின்றனர். அல்லது அஞ்சி வர்த்தகம் மேற்கொள்வதிலிருந்து விலகுகின்றனர்.
இவர்களின் குறைகளைப் போக்கும் வகையில், இந்த வகைச் சேவையில் ஈடுபடும் நிறுவனமான CCAvenue மாநில மொழிகளிலும் பணம் செலுத்தும் தளத்தினை உருவாக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் தன் சேவையினை வழங்கி வருகிறது. அத்துடன் பன்னாட்டளவிலான 27 வகை நாணய செலவாணிக்கு வழிகளைத் தருகிறது. இந்திய மாநில மொழிகளில் சேவை வழங்குவதுடன், ஐரோப்பிய மொழிகளிலும் இச்சேவை வழங்கப்படுகிறது. இதனால், பிரெஞ்ச் மொழி தெரிந்த ஒருவர், தன் மொழியில் இச்சேவையினைப் பயன்படுத்துவதுடன், வாங்கும் பொருளுக்கான விலையை தன் நாட்டு கரன்சியான யூரோவிலேயே செலுத்த முடியும். அரபிக், சீனம், ப்ரெஞ்ச், டச், இத்தாலியன், ஜப்பானிஷ், போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் இச்சேவையைப் பயன்படுத்த முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X