வேர்ட் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
00:00

டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். இப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.

தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் கூணிணிடூண் மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

டேபிளில் சில செயல்பாடுகள்:
TAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல
SHIFT+TAB: ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல
ALT+HOME: படுக்கை வரிசையில் உள்ள முதல் செல்லுக்குச் செல்ல
ALT+END: படுக்கை வரிசையில் உள்ள கடைசிசெல்லுக்குச் செல்ல
ALT+PAGE UP : நெட்டு வரிசையில் உள்ள முதல் செல் செல்ல
ALT+PAGE DOWN: நெட்டு வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல
UP ARROW : முந்தைய படுக்கை வரிசை செல்ல
DOWN ARROW: அடுத்த படுக்கை வரிசை செல்ல

முற்றுப் புள்ளிக்குப் பின்: இரண்டு வாக்கியங்களுக்கிடையே இரண்டு ஸ்பேஸ் இடைவெளி அமைப்பது எப்போதும் வழக்கமாகும். இதனை வேர்ட் புரோகிராமில் எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
தட்டச்சு இயந்திரங்கள் மட்டுமே இருந்த காலத்தில், தட்டச்சு செய்வதனைச் சொல்லிக் கொடுத்த பயிற்சி நிலையங்களில், முற்றுப் புள்ளி வைத்து வாக்கியம் ஒன்றை முடிக்கையில், இரண்டு எழுத்து இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தினைத் தொடங்கச் சொல்வார்கள். (இந்த நாட்களில் இளைஞர்கள் அது போன்ற வரைமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்று தெரியவில்லை.) திட்ட ஆய்வு அறிக்கைகளை தட்டச்சு செய்கையில் இதனைக் கட்டாயமாகப் பின்பற்றச் சொல்வார்கள். சரி, இதனைத் தானாக அமையும்படி எப்படி வேர்ட் புரோகிராமில் அமைப்பது எனப் பார்க்கலாம். வேர்ட் தானாக இதனை அமைத்துக் கொள்வதில்லை; நாம் தான் அமைக்க வேண்டும்.
1. Tools மெனுவிலிருந்து Options பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த பாக்ஸில், Spelling & Grammar டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இனி Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Spaces Required Between Sentences என்ற கீழ்விரி பட்டியலைத் திறக்கவும். இங்கு எத்தனை ஸ்பேஸ் வேண்டும் என்பதற்கான அளவுகள் 1, 2 எனக் கிடைக்கும்.
5. எத்தனை ஸ்பேஸ் எனத் தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் Grammar Settings டயலாக் பாக்ஸை மூடவும். அதன் பின்னர், ஆப்ஷன் டயலாக் பாக்ஸையும் அதே போல் மூடவும்.
இனி, இலக்கண தவறுகளைச் சோதனை செய்கையில், வாக்கியங்களுக்கு இடையில், இரண்டு இடைவெளி இல்லாமல் அமையும் இடங்களில், அந்த பிழையைச் சுட்டிக் காட்டும். இதில் ரைட் கிளிக் செய்து, தானாக பிழையைச் சரி செய்திட ஆப்ஷன் கொடுத்தால், இரண்டு ஸ்பேஸ் தரப்படும்.

எழுத்தின் அளவைச் சிறிய அளவில் குறைக்க: வேர்டில் பயன்படுத்தப்படும் எழுத்து ஒன்றின் அளவைக் குறைக்க பாண்ட் பெயர் கட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்ட் சைஸ் கட்டத்தில் அளவு எண்ணைக் கொடுக்கலாம். எண் பெரிய அளவில் இருந்தால் எழுத்தின் அளவும் பெரிதாகும். இதனை ஒவ்வொன்றாக உயர்த்தலாம். அதே போல அவற்றைச் சிறியதாகவும் மாற்றலாம். ஆனால் ஓரளவிற்கு மேல் மிகவும் சிறியதாக மாற்றினால் அது திரையில் தெரியாது.
எழுத்தின் அளவைப் பாதியாகவும் வேர்டில் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, Arial எழுத்து வகையில் சில சொற்களை பாய்ண்ட் 30ல் வைக்கிறீர்கள். அந்த எழுத்து அளவு கொஞ்சம் குறைந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் 29 உங்கள் தலைப்பின் இடத்திற்குச் சிறியதாக இருக்கிறது. இந்நிலையில் அதனை 29.5 ஆகவும் அமைக்கலாம். அப்படியானால் இதனை கால் அளவு, அதாவது எட்டேகால் என, 8.25, என அமைக்கலாமா என்று ஒருவர் கேட்கலாம். அது முடியாது. கொடுத்துப் பார்த்தால் உங்களுக்கே இது தெரிய வரும்.

விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்: வேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் வியூ தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்ப்ளிட் என்பதில் கிளிக் செய்தால், விண்டோ இரண்டாகப் பிரிக்கப்படும். அப்போது, வேர்ட் திரையில், படுக்கைக் கோடு ஒன்றை அமைக்கும். மவுஸ் கொண்டு இதனை மேல், கீழாக நகர்த்தலாம். மவுஸ் பட்டனை எங்கு விட்டுவிடுகிறோமோ, அதே இடத்தில், விண்டோ பிரிக்கும் கோடும் அமர்ந்து கொள்ளும். விண்டோவினைப் பிரித்ததை ரத்து செய்திட வேண்டும் என்றால், எஸ்கேப் கீயை அழுத்தலாம். ஆனால், இதனை மவுஸ் பட்டனை, பிரிக்கும் கோட்டில் வைத்துச் செயல்படுத்தும் முன் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம்.
விண்டோ மெனுவிலிருந்து Remove Split என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, பிரிக்கும் கோட்டில், மவுஸ் கர்சரை வைத்து, டபுள் கிளிக் செய்திடவும். பிரித்த விண்டோவினை ஒன்றாக மாற்றுகையில், டெக்ஸ்ட்டில், கர்சர் எந்த விண்டோவில் இருந்ததோ, அந்த விண்டோவின் பண்புகள், டாகுமெண்ட்டுக்குத் தரப்படும். எடுத்துக் காட்டாக, கோட்டுக்கு மேலாக இருந்த பகுதி நார்மல் (Normal) வியூவிலும், கீழாக இருந்த பகுதி பிரிண்ட் லே அவுட் (Print Layout) வியூவிலும் இருந்து, கர்சர் கோட்டுக்குக் கீழாக இருந்த பகுதியில் வைக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட விண்டோ ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டால், கிடைக்கும் விண்டோ, பிரிண்ட் லே அவுட் வியூவில் இருக்கும். கோட்டுக்கு மேலாக இருந்தால், நார்மல் வியூவில் இருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X