கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
00:00

என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துகிறேன். திடீரென இதில் உள்ள ஸ்பீக்கர்கள் செயல்படுவது நின்றுவிட்டது. அவற்றின் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது, அவை நல்ல நிலையில் உள்ளன என்று காட்டுகிறது. இருப்பினும், என்ன முயற்சித்தும், சத்தம் ஸ்பீக்கரிலிருந்து வரவே இல்லை. எங்கு பிரச்னை என்று வழி காட்ட முடியுமா?
என். சிதம்பரம், மதுரை.
பதில்:
ஸ்பீக்கர்கள் செயல் இழந்து போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்து, பிரச்னையின் மையத்திற்குச் சென்று தீர்வைப் பார்க்கலாம். முதலில் என் சிந்தனைக்கு வரும் காரணம் ஸ்பீக்கர்கள் கெட்டுப் போயிருக்கலாம். எனவே, இன்னொரு செட் ஸ்பீக்கர்களை கம்ப்யூட்டருடன் இணைத்துப் பார்க்கவும். அவை செயல்பட்டால், உங்கள் ஸ்பீக்கர்களில் தான் பிரச்னை என்றாகிறது. அவற்றை மாற்றவும்.
இன்னொரு வழியாக, உங்கள் ஸ்பீக்கர்களை மற்றொரு கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்க்கவும். செயல்பட்டால், ஸ்பீக்கர்களில் பிரச்னை இல்லை. கம்ப்யூட்டரில் தான் பிரச்னை என்றாகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பீக்கர்கள் உள்ளாக இணைக்கப்பட்டிருந்தால், மற்ற இணைப்புகளை நீக்கிவிட்டு, ஸ்பீக்கர்களைச் சோதனை செய்திடவும். இப்போது உள்ளாக அமைந்த ஸ்பீக்கர்கள் செயல்படவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சவுண்ட் கார்டில் தான் பிரச்னை உள்ளது. உங்கள் ஸ்பீக்கர்கள், யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தக் கூடியனவாக இருந்தால், அவற்றை விலக்கி, இன்னொரு யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தவும். புதிய யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தவுடன், ஸ்பீக்கர்கள் செயல்பட்டால், உங்கள் கம்ப்யூட்டரின் அந்தக் குறிப்பிட்ட யு.எஸ்.பி. போர்ட் சரியில்லை என்றாகிறது. அதனைக் குறிப்பிட்டு வைத்துக் கொண்டு, இணைப்பாகப் பயன்படுத்த வேண்டாம்.
உங்களுடைய டிவைஸ் மேனேஜர், ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கும்போது, இணைக்கப்படும் சாதனங்கள் சரியாக உள்ளன என்று மெசேஜ் கொடுத்தால், அது ஸ்பீக்கர்களைப் பற்றியது அல்ல; அதற்கான ட்ரைவர் புரோகிராம்கள் கெட்டுப் போகாமல், சரியாக உள்ளன என்று பொருள்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் என் இணையத் தேடலைக் கண்காணிக்கும் ட்ரேக்கர்கள், பிரவுசரின் பிரச்னைக்குரிய குறியீடுகள், பேஸ்புக், கூகுள் போன்ற இணைய தளங்கள் என் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்திட்ட கண்காணிப்பு புரோகிராம்கள், விளம்பர நெட்வொர்க் தளங்கள் அமைத்துள்ள பின் தொடர்ந்து வரும் புரோகிராம்கள் மற்றும் இதைப் போன்றவற்றை ஒரே கிளிக்கில் அறிந்து கொள்ள முடியுமா?
என். பிரகாஷ், சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. பலருக்குப் பயன்படும். பலரின் மனதில் உள்ள அச்சத்தைப் போக்கிடும். இதற்கான வசதி விண்டோஸ் இயக்கத்தில் இல்லை. இணைய தளத்தில் தேடிய போது, கோஸ்ட்டெரி (Ghostery) என்னும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் இதற்கான தீர்வை வழங்கும் என்பதை அறிய முடிந்தது. இந்த எக்ஸ்டன்ஷன் கிடைக்கும் தளத்தின் முகவரி https://chrome.google.com/webstore/detail/ghostery/mlomiejdfkolichcflejclcbmpeaniij?hl=en
இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், அது உங்களின் கண்களுக்குப் புலப்படாத, நீங்கள் குறிப்பிட்ட அனைத்து வகை ட்ரேக்கர் புரோகிராம்கள் பட்டியலையும், அவை எவற்றால் பதியப்பட்டன என்பதனையும் தந்துவிடும். உங்களின் இணையத் தேடலைப் பின் தொடர்ந்து வரும் நிழல் நண்பனை அல்லது துரோகியை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். இவற்றைத் தடுக்கலாம். தானாக இயங்கி, இந்த துரோகிகளைத் தடுக்கும் புரோகிராம் ஒன்றும் இணையத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் பிரைவசி பேட்ஜர் (Privacy Badger).
இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி https://www.eff.org/privacybadger. இது ஒரு ஆட் ஆன் புரோகிராம். இதனைப் பதிந்து விட்டால், இது தானாக இயங்கி, விளம்பர நிறுவனங்கள் மற்றும் தர்ட் பார்ட்டி அனுப்பிய ட்ரேக்கிங் புரோகிராம்களையும் கண்டறியும். அவர்களின் புரோகிராம் செயல்பாடுகளைத் தானே தடுத்து நிறுத்தும். குறிப்பிட்ட ஒரு விளம்பர நிறுவனம் உங்கள் அனுமதி இல்லாமல், நீங்கள் செல்லும் பல்வேறு இணைய தள செயல்பாடுகளின் பின்னாலேயே வந்து கண்காணித்தால், அந்த விளம்பர நிறுவனத்தை உங்கள் பிரவுசரில் செயல்பட விடாமல் தடுக்கும். கூடுதலாக எந்த ஒரு ட்ரேக்கிங் புரோகிராமினையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதியவிடாது.

கேள்வி: என்னிடம் ஆண்ட்ராய்ட் போன் ஒன்று உள்ளது. இதில் பலமுறை, பட்டியலாக அப்ளிகேஷன்கள் காட்டப்பட்டு இவற்றை எல்லாம் அப்டேட் செய்திட அனுமதிக்கவும் என்று மெசேஜ் காட்டப்படுகிறது. ஏதேனும் அப்ளிகேஷன் ஒன்றை டவுண்லோட் செய்திடச் சென்றால், …..”Identity-location-device history-Pictures-call log. என ஏதோ ஏதோ கேட்கிறது. இவை எல்லாம் எதற்காக? படம் ஒன்றை டவுண்லோட் செய்திடச் சென்றால், காண்டாக்ட் லிஸ்ட், கேமரா வகை எல்லாம் ஏன் கேட்க வேண்டும்? இதை எப்படி அணுக வேண்டும் என விளக்கவும்.
எஸ். ஜெயா முரளி, கோவை.
பதில்:
முதலில் அப்டேட்டிங் மற்றும் அப்ளிகேஷன் டவுண்லோடிங் என்ற இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைப் பார்ப்போம். அப்ளிகேஷன் ஒன்றுக்கு அப்டேட் இருப்பதாகக் காட்டப்பட்டால், அந்த அப்ளிகேஷன் உங்கள் போனில் இருக்கிறது என்று பொருள். நீங்கள் கவலைப்படும் அனைத்து அனுமதிகளும் நீங்கள் ஏற்கனவே அந்த அப்ளிகேஷனை டவுண்லோட் செய்கையில் வழங்கி இருப்பீர்கள். அதற்கான புதிய அப்டேட் பைல் கொண்டு அப்டேட் செய்யாமல் இருப்பது நல்லதல்ல. அப்ளிகேஷனுக்கான அப்டேட்டுகள் அனைத்தும் பாதுகாப்பு தரும் பைல்களாக இருக்கும். அல்லது அப்ளிகேஷனுடைய திறன் கூட்டுவதாக இருக்கும். அந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில், கட்டாயமாக அதனை அப்டேட் செய்திட வேண்டும். அந்த அப்ளிகேஷன் உங்களுக்குத் தேவை இல்லை என்று கருதினால், உடனே அதனை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அப்போதுதான் அப்ளிகேஷனுக்கான அப்டேட் செய்திகள் கிடைக்காமல் இருக்கும்.
அப்ளிகேஷன் ஒன்று உங்களிடம் உள்ள தகவல்கள் குறித்து கேட்கிறது என்றால், அதற்குச் சரியான காரணம் இருக்கும். எடுத்துக் காட்டாக, போட்டோ அப்ளிகேஷன் ஒன்று, உங்களிடம் உள்ள படங்கள் மட்டும் போனில் உள்ள கேமரா குறித்து கேட்கும். தொடர்பு முகவரிகளை ஏன் கேட்கிறது என்றால், படங்களை இமெயில் மூலம் அனுப்பிட, அல்லது வேறு வழிகளில் அனுப்பிடத் தேவைப்படலாம். இது போலவே தான், அப்ளிகேஷன் கேட்கும் மற்ற தகவல்களும்.

கேள்வி: விண்டோஸ் 10 குறித்த கட்டுரையில் ஹோலோ லென்ஸ் பற்றி விளக்கம் தந்துள்ளீர்கள். இந்த லென்ஸ் கொண்ட ஹெட் செட் ஏற்கனவே கடைகளில் கிடைப்பதுவா? இல்லை எனில், மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறதா? மை டியர் குட்டிச் சாத்தான் திரைப்படம் பார்க்க தியேட்டரில் கண்ணாடி வழங்கப்பட்டது போலவா இது? எப்போது இது வழங்கப்படும்? விலை என்ன?
என். மேகலா, மதுரை.
பதில்:
மைக்ரோசாப்ட் HoloLens ஐ, விண்டோஸ் 10 வழங்கப்படும்போது, விற்பனைக்கு அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. எனவே, விண்டோஸ் 10 வாங்குவோருக்கும், மற்றவர்களுக்கும் இது விலை செலுத்தி வாங்கப்படும் பொருளாகவே இருக்கும். இது ஒரு ஹெட் செட் ஆகத் தரப்படும்.

கேள்வி: நான் பத்திரிக்கைகளுக்குப் பல கட்டுரைகளைப் பல்வேறு தகவல்கள் குறித்து எழுதி வருகிறேன். இவற்றிற்காக தகவல்களைத் தொடர்ந்து தரும் இணைய தளங்களைக் குறித்து வைத்துப் பார்த்து வருகிறேன். இவற்றின் தகவல்களில் மாற்றம் ஏற்படுத்துவதனை அறிய, ஒவ்வொரு நாளும் அனைத்து தளங்களையும் சென்று பார்த்து வர வேண்டியுள்ளது. இவற்றில் மாற்றம் ஏற்படுகையில், தாமாகவே அதன் பதிவு செய்த வாசகர்களுக்குத் தெரிவிப்பதனை ஒரு சில இணைய தளங்கள் மட்டுமே மேற்கொள்கின்றன. அதற்குப் பதிலாக, ஏதேனும் புரோகிராம் மூலம் இவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து நமக்குத் தெரிவிக்கும் வகையில் அமைக்க முடியுமா?
எஸ். நிரஞ்சனா சேகர், புதுச்சேரி.
பதில்:
நல்ல கேள்வி. இதற்கான தீர்வினை இருநாட்கள் தேடலில் கண்டுபிடித்தேன். Page Monitor என ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் உள்ளது. இதனை https://chrome.google.com/webstore/detail/page-monitor/pemhgklkefakciniebenbfclihhmmfcd என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த புரோகிராம் உங்கள் பிரவுசரை, அது ஏற்கனவே பார்த்து குற்த்து வைத்த தளங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் மாற்றுகிறது. குறிப்பிட்ட இணைய தளப் பக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதனை உங்களுக்குத் தெரிவிக்கும். இதனால், இந்த தளங்களுக்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் சென்று, புதிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டியதில்லை. நானும் இதனை இப்போது பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். இதுவரை எந்த குறையும் இன்றி செயல்பட்டு வருகிறது.

கேள்வி: இணைய முகவரியை யு.ஆர்.எல். என்று கூறுகின்றனர். இதன் விரிவாக்கம் என்ன? இதில் எழுத்துக்கள் மட்டும் தான் இருக்க வேண்டுமா? சிலவற்றில் எண்களும் இருக்கின்றனவே? இது ஏன்? சற்று விளக்கம் தரவும்.
என். சுசீலா, கும்பகோணம்.
பதில்:
URL: Uniform Resource Locator என்பதுதான் அதன் விரிவாக்கம். ஒவ்வொரு இணையப் பக்கமும், ஒரு சர்வரில் பதியப்பட்டுள்ளது. நாம் நம் பிரவுசர் மூலம், அதற்கான முகவரி அமைத்து செயல்படுகையில், அந்த குறிப்பிட்ட சர்வரிலிருந்து பைல் எடுக்கப்பட்டு நம் கம்ப்யூட்டரை அடைந்து நமக்குக் காட்டப்படுகிறது. இணையப் பக்கம் பதியப்பட்டு வசிக்கும் வீடு தான் அந்த கம்ப்யூட்டர் இணைய சர்வர். இதனை அடையாளம் காணும் வகையில் அமைக்கப்படுவதே அதன் முகவரி. இதில் எழுத்துகள் மற்றும் எண்கள் இருக்கலாம்.
நம் பிரவுசர் முகவரியைப் படித்து, நமக்கு சேவை தரும் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் சர்வருக்கு அனுப்புகிறது. அங்கிருந்து அது முகவரியின் அடிப்படையில், குறிப்பிட்ட சர்வர்களில் தாவி தாவிச் சென்று, இணைய தளம் இருக்கும் கம்ப்யூட்டரை அடைகிறது.
யு.ஆர்.எல். ஒன்றில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை
1. network protocol, (எ.கா. http://, ftp://, and mailto://) 2. host name or address (எ.கா. www.dinamalar.com) மற்றும் 3. file or resource location (எ.கா. election.dinamalar.com/detail.php?id=1678) ஆகும்.

கேள்வி: நான் விண்டோஸ்7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு கடிகாரம், தேதி காட்டும் இடத்தில், அன்றைய நாளின் பெயர் காட்டப்பட வேண்டும். இதற்கான செட்டிங்ஸ் வழி முறைகளைக் கூறவும். முன்பு ஒரு முறை நீங்கள் இது குறித்து எழுதியதாக நினைவு. மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும்.
எஸ். பார்த்திபன், தூத்துக்குடி.
பதில்:
இது போன்ற குறிப்புகளை மீண்டும் தருவதில் தவறு இல்லை. நீங்கள் இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்து, மீண்டும் பழைய நிலைக்கு வர இந்த கேள்வியை அனுப்பி உள்ளீர்களா? ஏனென்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாற்றப்படா நிலையில் இது, நீங்கள் விரும்பும் அந்த வகையில் தானே இருந்திருக்க வேண்டும். மீண்டும் அமைக்கக் கீழே தந்துள்ள வழிகளைப் பின்பற்றவும்.
முதலில் Control Panel செல்லவும். அடுத்து, Region and Language பிரிவில் “ Additional Settings என்பதில் கிளிக் செய்தால், Customize Format என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் Date என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் எந்த மாதிரி பார்மட்டில் தேதி, கிழமை இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதே போல அமைத்திட அனைத்து ஆப்ஷன்களும் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். உங்கள் விருப்பத்திற்காக, நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஆப்ஷன் “dddd, MMMM, dd” ஆகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X