எனக்குத் தான் முதல் ரேங்க் - சாம்சங் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
00:00

சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில், இந்தியாவின் ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பெற்றதாக முன்பு தகவல் வெளியானது. அது தவறான கணிப்பு என்றும், தனக்குத்தான் இன்னும் முதலிடம் உள்ளது என்றும், சாம்சங் அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த மொபைல் போன் விற்பனைச் சந்தையில் 16.1 சதவீத இடத்தையும், ஸ்மார்ட் போன் விற்பனையில் 27.4 சதவீத இடத்தையும் சாம்சங் கொண்டிருந்தது. இதன் மூலம் தொடர்ந்து இந்தப் பிரிவுகளில் முதல் இடத்தை சாம்சங் கொண்டுள்ளது. கவுண்ட்டர் பாய்ண்ட் டெக்னாலஜி மார்க்கட் ரிசர்ச் பீரோ என்னும் ஆய்வு அமைப்பு இந்த தகவல்களைத் தந்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மொபைல் போன் விற்பனையிலும், ஸ்மார்ட் போன் விற்பனையிலும், சாம்சங் நிறுவனத்தை ஒட்டி, இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இது முறையே 14.4% மற்றும் 19.5% ஆக இருந்தது.
இந்த கால கட்டத்தில், ஸ்மார்ட்போன் விற்பனை ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சமாக இருந்தது. மொத்த ஆண்டுக் கணக்கில், 8 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த மொபைல் போன் விற்பனைச் சந்தையில் 32%ஆகும். முதன் முதலாக, இண்டெக்ஸ் நிறுவனம், முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. நான்காவது காலாண்டில், இந்நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதன் ரூ.6,000 க்கும் குறைவான விலையிடப்பட்ட ஸ்மார்ட் போன்கள், இண்டெக்ஸ் நிறுவனத்தைப் பெற்றுத் தந்துள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X