ஐபோன், ஐபேடில் விரைவாக தட்டச்சு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
00:00

மற்ற டிஜிட்டல் சாதனங்களுடன் ஒப்பிடுகையில், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றின் விலை சற்று அதிகமே. இதுவே இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் குறைவாகவே இந்தியாவில் வைத்துள்ளது. இருப்பினும் பல காரணங்களுக்காக, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது. இவை தரும் தொழில் நுட்ப வசதிகள், பாதுகாப்பான கட்டமைப்பு ஆகியவற்றை முதன்மை காரணங்களாகக் கூறலாம். இந்த சாதனங்களில் தட்டச்சு செய்திட இதில் தரப்பட்டுள்ள திரை கீ போர்ட் வேகத்தையும் எளிமையையும் தருகிறது. இதில் இன்னும் சில குறுக்கு வழிகள் கிடைக்கின்றன. அவற்றையும் அறிந்து கொண்டால், இதில் தட்டச்சு செய்வது இன்னும் வேகமாக இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. புள்ளி வைக்க: கிடைக்கும் கீ போர்டில் ஸ்பேஸ் பாரினை இருமுறை தட்டினால், முற்றுப் புள்ளி கிடைக்கும். அது மட்டுமின்றி, முற்றுப் புள்ளியை அடுத்து ஒரு ஸ்பேஸ் விடப்பட்டிருக்கும். இதனால், அடுத்த வாக்கியத்தை நீங்கள் உடனே தட்டச்சு செய்திடலாம்.
2. .com, .net, .org வேகமாக டைப் செய்திட: இணைய முகவரிகளை டைப் செய்திடுகையில், .com, .net, .org போன்றவற்றை அமைத்திட, விரலை அதற்கான கீ அருகே கொண்டு செல்லவும். பின் அதனைச் சற்று உயர்த்தினால், குறிப்பிட்ட துணை முகவரி அமைக்கப்படும். மற்ற புரோகிராம்களில் இது ஏற்படுகிறதோ இல்லையோ, சபாரி பிரவுசரில் இது நிச்சயம் ஏற்படும்.
3. எண், அடையாளக் குறியீடு, கேபிடல் எழுத்து: ஒரே ஒரு டேப் செய்வதன் மூலம் எண், சிம்பல் எனப்படும் அடையாளக் குறியீடு மற்றும் ஆங்கிலப் பெரிய எழுத்து ஆகியவற்றை அமைக்கலாம். பெரும்பாலானவர்கள் இவற்றை அமைக்க, கீ போர்டில் 123 பட்டன் அழுத்தி, பின்னர் நமக்குத் தேவையான எண் அல்லது குறியீட்டினை அமைப்பார்கள். பின், மீண்டும் எழுத்துக்கான பட்டன் அழுத்தி, முந்தைய கீ போர்டுக்கு வருவார்கள். இதற்கு இன்னொரு வேகமான வழி உள்ளது. 123 கீயை அழுத்தவும். பின்னர், திரையில் அழுத்தியவாறே இருக்கவும். விரலை எடுக்காமலேயே, உங்களுக்குத் தேவைப்படும் எண் அல்லது குறியீட்டிற்கான கீயை அழுத்திப் பின்னர் விரலை எடுக்கவும். மீண்டும் எழுத்துக்கான கீ போர்ட் அமைக்கும் வேலை குறையும். இந்த ட்ரிக் ஷிப்ட் கீக்கும் பொருந்தும். ஆங்கில பெரிய எழுத்து அமைக்க வேண்டி, ஷிப்ட் கீயை அழுத்தி, பின் குறிப்பிட்ட கீயை அழுத்திப் பின் மீண்டும் திரும்புவதற்குப் பதிலாக, ஷிப்ட் கீயை அழுத்தியவாறே, பெரிய எழுத்திற்கான கீயை அழுத்திப் பின், ஷிப்ட் கீயில் உள்ள விரலை எடுத்துவிட்டால், முதலில் இருந்த கீ போர்ட் கிடைக்கும்.
4. கீ போர்டை இரண்டாகப் பிரித்து: ஆப்பிள் சாதனங்களில், அதில் தரப்படும் திரை கீ போர்டினை இரண்டாகப் பிரித்து வைத்து இயக்கலாம். இதனால், நம் கட்டைவிரலை வைத்துக் கொண்டு டைப் செய்திடலாம். திரையில் காட்டப்படும் கீ போர்டை, நடுவில் விரலை வைத்து இழுத்தால், இரண்டாகப் பிரித்துக் காட்டப்படும். இந்த நிலையில், நீங்கள் ஒற்றை விரலால் டைப் செய்திடலாம். இதனை மீண்டும் ஒரே கீ போர்டாக அமைக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு கீ போர்டின் முனைகளில், ஒரு விரலை வைத்து, ஒன்றுடன் ஒன்று எதிராக இழுத்தால், கீ போர்ட் மீண்டும் ஒரே கீ போர்டாக மாறும். பிரித்த கீ போர்டுகளில் ஒரு சலுகையும் தரப்பட்டுள்ளது. T எழுத்துக்கான கீ யின் வலது புறம் உள்ள காலியான இடத்தில் தட்டுங்கள். Y கிடைக்கும். Y எழுத்திற்கு இடது பக்கம் உள்ள காலியான இடத்தில் தட்டுங்கள். T எழுத்து கிடைக்கும்.
5. கீ போர்டைச் சுற்றி அமைக்க: திரையில் கிடைக்கும் கீ போர்டினை, இழுத்து எந்த பக்கமாகவும் வைத்துக் கொண்டு செயல்படலாம். இதனால், கீ போர்டுக்குக் கீழாக என்ன உள்ளது என்று பார்க்கலாம்.கீ போர்டின் வலது கீழ் மூலையில் உள்ள பட்டனைத் தொடவும். தொட்டவாறே விரலை எங்கு கீ போர்ட் அமைக்கப்பட வேண்டும் என எண்னுகிறீர்களோ, அந்த இடத்தினை நோக்கி, மேலாகவோ கீழாகவோ இழுக்கவும். மேலும், இந்த குறியீட்டில் தொடர்ந்து அழுத்தி, கீ போர்டை நகர்த்த, நகர்த்தாமல் வைத்திட, இணைக்க, இரண்டாகப் பிரிக்கத் தேவையான ஆப்ஷன்களைப் பெறலாம். இந்த செயல்பாட்டினை, கீ போர்ட் பிரிக்கப்பட்டிருந்தாலும், முழுதாக இருந்தாலும் மேற்கொள்ளலாம்.
6. குறியீடு கீயில் மற்ற குறியீடுகள்: திரையில் காட்டப்படும் கீ போர்டில், சிறப்புக் குறியீடுகள் தேவை எனில், அதற்கான கீ போர்ட் தோற்றத்தினைப் பெற்று, கீ அழுத்தி அமைக்கிறோம். இருப்பினும், இதிலும் காட்டப்படாத சில குறியீடுகள், இந்த கீ போர்டில் உள்ளன. அவற்றைப் பெறும் வழிகள் தான் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, அமெரிக்க டாலர் குறியீடு எப்படி டைப் செய்வது என்பதைக் கீ போர்டில் தெரியும். அதன் நூற்றில் ஒரு பங்கான செண்ட் குறியீடு (¢) எங்கே உள்ளது கீ போர்டில் டாலர் டைப் செய்வதற்கான கீயைத் தொடர்ந்து அழுத்துங்கள். டாலருடன் சேர்ந்த மற்ற குறியீடுகளும் கிடைக்கும். எது வேண்டுமோ அதனைத் தொட்டு அமைத்துக் கொள்ளலாம். இதே போல பல குறியீடுகளைச் சேர்ந்த மற்ற குறியீடுகளை, அந்த அந்த கீகளை அழுத்துவதன் மூலம் பெறலாம்.
7. பெரிய எழுத்து மாற்றம்; ஆங்கில வாக்கியங்களில், பெரிய எழுத்துகளைத் தொடர்ந்து அமைப்பதற்கான கேப்ஸ் லாக் கீ பயன்பாடு சற்று சிரமம் தரும் வேலையாகத்தான் இருக்கும். தொடர்ந்து பல எழுத்துகள் இல்லாமல், ஒரு சில எழுத்துகளை மட்டும் பெரிய எழுத்துகளாக அமைக்க வேண்டும் எனில், கேப்ஸ் லாக் கீயை அழுத்த வேண்டியதில்லை. ஷிப்ட் கீயை இருமுறை தட்டினால் போதும். பெரிய எழுத்து தரும் வகையில் கீ போர்ட் மாறும். பின் மீண்டும் ஷிப்ட் கீயை அழுத்தும் வரை அப்படியே இருக்கும். கேப்ஸ் லாக் கீ அழுத்தி கிடைக்கும் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
8. அசைத்தால், மீண்டும் கிடைக்கும்: நீங்கள் டெக்ஸ்ட் டைப் செய்திருந்தாலும், பேஸ்ட் செய்திருந்தாலும், கட் செய்திருந்தாலும், அதனை மீண்டும் பெற “Undo” ஆப்ஷன் எல்லாம் செல்ல வேண்டியதில்லை. ஐபோன் அல்லது ஐபேடைச் சற்று அசைத்தால் போதும். இந்த ஆப்ஷன் கீ போர்டில் காட்டப்படவில்லை.
9. குயிக் டைப் கீ போர்ட்: ஆப்பிள் நிறுவனம் தான் கொண்டு வந்த ஐ.ஓ.எஸ்.8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சொற்களை முன் கூட்டியே தந்திடும் வசதியைத் தந்தது. இதற்கு குயிக் டைப் (“QuickType”) கீ போர்ட் என்று பெயர். நீங்கள் ஒரு சொல்லை டைப் செய்திடுகையில், அந்த சொல் என்னவாக இருக்கும் என்று காட்டும். எடுத்துக் காட்டாக, “ambas,” என டைப் செய்திடுகையில், கீ போர்டில் “ambassador,” என்று காட்டப்படும். அது வேண்டும் என்றால், அதில் டேப் செய்தால் போதும். அது மட்டுமின்றி, நீங்கள் டைப் செய்த சொற்களை அறிந்து, அடுத்த சொல் என்னவென்றும் காட்டும். எடுத்துக் காட்டாக “HI, how are,” என டைப் செய்தால், அடுத்த சொல்லாக “you.” என்று காட்டும். இந்த சொற்களைக் காட்டும் குயிக் டைப் பார் உங்களுக்கு வேண்டாம் என நீங்கள் எண்ணினால், கீ போர்டுக்கு மேலாக உள்ள சிறிய பாரினைத் தொட்டு இழுத்து விட்டுவிட்டால் போதும்.
10. டெக்ஸ்ட் விரிவு படுத்தும் ஷார்ட் கட் கீகள்: பெரிய அளவிலான டெக்ஸ்ட்டை மீண்டும் மீண்டும் டைப் செய்திடத் தேவை எனில், அதற்கு ஷார்ட் கட் கீ ஒன்றை அமைத்து, அவற்றை மட்டும் அழுத்தினால் போதும். எடுத்துக் காட்டாக, உங்கள் மின் அஞ்சல் முகவரியினை பிழையில்லாமல் மற்றவர்களுக்குத் தெரிவிக்கவே விரும்புவீர்கள். ஒவ்வொரு முறையும் டைப் செய்தால், ஏதேனும் ஒரு பிழை ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, @@ என்ற கீகளை அழுத்தினால், உங்கள் மின் அஞ்சல் முகவரி தானாக டைப் செய்திடும் வகையில் அமைக்கலாம். இந்த ஷார்ட் கட் கீகளைக் கொண்டு, இன்னும் பல விந்தைகளை மேற்கொள்ளலாம். ஓரிரு எழுத்துக்கள், ஒரு பத்தியையே கொண்டு வரும் வகையில் அமைக்கலாம்.
மேலே தரப்பட்ட டிப்ஸ் தவிர இன்னும் சில பயனுள்ள குறிப்புகளும் உங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், இவை எல்லாம் தேவை இல்லை; என்னால், வேகமாக டைப் செய்திட முடியும். ஆனால், திரையில் அல்லவோ கீ போர்ட் இருக்கிறது என்று கவலைப்பட்டால், தற்போது நிறைய புளுடூத் கீ போர்ட்கள் கிடைக்கின்றன. அவற்றை உங்கள் ஐபேட் அல்லது ஐபோனுடன் இணைத்து செயல்படுத்தலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X