கூகுள் டாக் இனி இயங்காது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
00:00

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வந்த ”கூகுள் டாக்” வசதி இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது. ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ள மிகவும் பயனுள்ள கருவியாக ''ஜி டாக்” எனப்படும் கூகுள் டாக் இயங்கி வந்தது. ஆனால், தான் வழங்கி வரும் வசதிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் செயல்பாட்டினை கூகுள் மேற்கொண்டு வருவதன் எதிரொலியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தான் வழங்கும் கூகுள் Hangouts மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளுமாறு, தன் வாடிக்கையாளர்களுக்கு, கூகுள் அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 23 முதல் ”ஜி டாக்” வசதியை கூகுள் நிறுத்தி உள்ளது. (இனி, தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம் (எ.கா. http://goo.gl/FSbCX5) இதனைத் தொடந்து மேற்கொள்ளலாம் என்றாலும், அவை கூகுள் அங்கீகாரம் பெற்றவை இல்லை என்பதால், ஏதேனும் பிரச்னை ஏற்படலாம் என்று கூகுள் எச்சரித்துள்ளது.
இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம். உலகில் மிகப் பெரிய அளவில், மொபைல் சாதனங்களில் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்த கூகுள் நிறுவனத்தால், அனைவரும் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய இன்ஸ்டண்ட் மெசேஜிங் சிஸ்டத்தினைத் தர இயலவில்லை. முதலில் வாட்ஸ் அப் மெசேஜிங் திட்டத்தினை கூகுள் வாங்கிட முயற்சி செய்தது. 1000 கோடி டாலர் வரை தர முன் வந்தது. ஆனால், பேஸ்புக் நிறுவனம், மிகச் சாதுர்யமாக, அதனை 1,900 கோடி டாலருக்குத் தட்டிச் சென்றது.
எனவே, கூகுள் நிறுவனத்திற்கு, கூகுள் ப்ளஸ் சார்ந்த தன்னுடைய “ஹேங் அவுட்ஸ்” புரோகிராமினை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஹேங் அவுட், மெசேஜ் மற்றும் அழைப்புகளுக்கான வசதி கொண்டதாக இயங்குகிறது. இதில் பல கூடுதல் வசதிகள் இருந்தாலும், தினந்தோறும் கூகுள் தரும் வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் கூட, கூகுள் ஹேங் அவுட் தரும் வசதிகளைப் பயன்படுத்தத் தயாராய் இல்லை.
அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்ற ஜனவரி 2015ல், வாட்ஸ் அப் 70 கோடி வாடிக்கையாளர்களையும், வி சேட் (WeChat) 50 கோடி பேரையும் கொண்டுள்ளது. தற்போதுதான் இந்த பிரிவில் வந்திருக்கும் ஹைக் (Hike) 3.5 கோடி பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. ஆனால், கூகுள் தரும் ஹேங் அவுட் வசதியை மிகக் குறைவானவர்களே பயன்படுத்தி வருகின்றனர். எத்தனை பேர் மாதந்தோறும் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை கூகுள் வெளியிடவில்லை.
கூகுள் போன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மெசேஜிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகிய அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்து, அதற்கு ஜி டாக் தேர்ந்தெடுத்தது. ஆனால், இப்போது திடீரென, அதனையும் விட்டுவிட்டு, ஹேங் அவுட் வசதியைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கூகுள் ஹேங் அவுட், மற்றவற்றில் நமக்குக் கிடைக்காத சில வசதிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இதில் பலர் ஒரு குழுவாக சேட்டிங் செய்திடலாம். இந்த வசதி மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், பலர் இந்த வசதி இருப்பதனை அறியாதவர்களாகவே உள்ளனர். அண்மையில் கூகுள் ஹேங் அவுட் புரோகிராமிற்கு வெளியிடப்பட்ட அப்டேட் பைல், அதனை ஸ்கைப் புரோகிராமிற்குப் போட்டியாக அமைத்தது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X