கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
00:00

கேள்வி: அண்மையில் ஓர் ஆங்கில இதழில், விண்டோஸ் 10 இயக்கத் தொகுப்பு ஓராண்டுக்கு மட்டுமே இலவசம் என்றும், அதன் பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாதந்தோறும் சந்தா தொகை கட்டினால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் இருந்தது. ஆனால், நீங்கள் எழுதிய கட்டுரையில் முற்றிலும் இலவசம் என்று உள்ளது. சற்று விளக்கவும்.
என். சந்திரா தேவி, மதுரை.
பதில்:
விண்டோஸ் 7, விண் 8 மற்றும் 8.1 இயக்க முறைமையை தங்கள் கம்ப்யூட்டர்களில், சரியான உரிமங்களுடன், கட்டணம் செலுத்தி, பதிவு செய்து பயன்படுத்தி வருபவர்கள், விண்டோஸ் 10 தொகுப்பிற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். இவ்வாறு அப்கிரேட் செய்யப்பட்டு இயக்கப்படும் விண்டோஸ் 10, இறுதி வரை சிறப்பாகச் செயல்படும் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. ஆனால், ஓராண்டுக்குப் பின்னர் தாமதமாக, இதனை அப்கிரேட் செய்து இன்ஸ்டால் செய்பவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான காரணம், மைக்ரோசாப்ட் மக்களை ஒராண்டுக்குள் அப்கிரேட் செய்து, இந்த புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் தூண்டுகிறது. இதன் மூலம் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டம், அனைத்து விண்டோஸ் கம்ப்யூட்டர்
களிலும் இருக்கும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதன் மூலம், பிற்பாடு கண்டறியப்படும் பிழைக் குறியீடுகளுக்கு நிவர்த்தி செய்திடும் கோப்புகளை எளிதாகத் தயாரித்து வெளியிட முடியும் என மைக்ரோசாப்ட் திட்டமிருகிறது.

கேள்வி: கம்ப்யூட்டர் சார்ந்த இதழ் ஒன்றில் Ransomware என்ற தொழில் நுட்பச் சொல் குறித்துப் படித்தேன். பணம் பறிக்கும் வேலையை மேற்கொள்ளும் வைரஸ் போலத் தெரிந்தது. நான் சொல்வது சரியா? இதற்கான சரியான விளக்கமும் எடுத்துக் காட்டும் தரவும்.
என். சுந்தர ராஜன், மதுரை.
பதில்:
Ransomware என்பது ஒரு வகை மால்வேர் புரோகிராம். இது உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கி வைத்திடும். அதனை மீண்டும் செயல்படுத்த, குறிப்பிட்ட தொகைக்கான பணத்தை அவர்கள் சொல்லும் இடத்தில் செலுத்துமாறு அச்சுறுத்தப்படுவீர்கள். பணத்தைத் தர நீங்கள் தயார் ஆனாலும், சில வேளைகளில் அதனைப் பெறாமல், தொடர்ந்து கம்ப்யூட்டரை முடக்கும் செயலில் ஈடுபடுவார்கள். அல்லது பணத்தைப் பெற்றுக் கொண்டு, கம்ப்யூட்டரைத் தொடர்ந்து முடக்குவார்கள்.
இந்த ரேன்சம் வேர் புரோகிராமினை அனுப்பி, கம்ப்யூட்டரைக் கைப்பற்றுபவர்கள், சில வேளைகளில் அரசு துறை அலுவலர்கள் போலச் செயல்படுவார்கள். உங்கள் கம்ப்யூட்டரில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக சில சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குவதாகவும் அல்லது சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளுக்கான தகவல்கள் இருப்பதாகவும், இதனால் நீங்கள் சிறைப்பிடிக்கப்படுவீர்கள் என்றும் பயமுறுத்தல் வரும். சிறைப பிடிக்கப்படும் வாய்ப்பினைத் தவிர்க்க, குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் அச்சுறுத்தல் கிடைக்கும். இந்தியாவில் இது போல அச்சுறுத்தல்கள் வந்துள்ளனவா என்று தகவல் இல்லை. அப்படியே, வந்திருந்தாலும், தாங்கள் ஏமாந்ததை யார் தான் வெளியே சொல்வார்கள்.

கேள்வி: எனக்கு இந்தப் பிரச்னை சில மாதங்களாகவே உள்ளது. தீர்வினைக் காண முடியவில்லை. தயவு செய்து உதவவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11ல், விண்டோ ஒன்றைத் திறக்கும் போது, அது முழுமையான முழுத் திரையாக இல்லை. சிறிய விண்டோவாகவே திறக்கிறது. பின்னர், முழுத் திரைக்கான ஐகானைக் கிளிக் செய்த பின்பு முழுத் திரை கிடைக்கிறது. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு வெளியேறி பின் மீண்டும் வந்தால், மீண்டும் சிறிய அளவிலேயே திரை கிடைக்கிறது.இந்தப் பிரச்னை எந்த முறையில் பிரவுசரைத் திறந்தாலும் ஏற்படுகிறது. தீர்வும் விளக்கமும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். தனசேகரன், சிவகாசி.
பதில்:
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், நீங்கள் அதனை இறுதியாக மூடும்போது என்ன விண்டோஸ் செட்டிங்ஸ் அமைத்திருந்தீர்களோ, அதனை நினைவில் கொண்டே அடுத்து திறக்கும்போது செயல்படும். ஆனால், சில வேளைகளில், நீங்கள் ஏதேனும் ஒரு லிங்க் மூலம் அதனைத் திறந்தால், அது சிறிய அளவிலான திரையுடன் திறக்கலாம். எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படும் இந்த பிரச்னை, பிரவுசரில் இல்லை. ஏதேனும் மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துகொண்டு இந்த பிரச்னையை ஏற்படுத்தலாம். (முழுத் திரை கிடைக்க ஐகானையெல்லாம் தேடாதீர்கள். எப் 11 கீயை அழுத்தலாமே!)
இருப்பினும், கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு இதற்கான தீர்வுக்கு முயற்சிக்கலாம். பிரவுசரில் ஒரு விண்டோவினைத் திறக்கவும். அடுத்து, ஏதேனும் ஒரு லிங்க்கில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Open in New Window என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய விண்டோவில் தளம் திறக்கப்பட்ட பின்னர், முதல் விண்டோவினை மூடவும். இப்போது இருக்கும் விண்டோவின் மூலைகளில் கர்சரைக் கொண்டு சென்று, விண்டோவினைப் பெரிதாக்கவும். இங்கு, மேக்ஸிமைஸ் பட்டனைப் பயன்படுத்த வேண்டாம். இனி, மீண்டும் திறக்கும்போது, நீங்கள் செட் செய்த அளவிலேயே விண்டோ கிடைக்கும். என் கம்ப்யூட்டரில் இதனை மேற்கொள்கையில் கிடைத்தது.
இன்னொரு வழியும் மேற்கொள்ளலாம். பிரவுசரைத் திறக்கவும். விண்டோவினை முழுத்திரை அகலத்திற்கு இழுக்கவும். அடுத்து கண்ட்ரோல் அழுத்திக் கொண்டு File என்பதில் கிளிக் செய்திடவும். பைல் மெனு கிடைக்கவில்லை என்றால், கண்ட்ரோல் அழுத்தும் முன், ஆல்ட் கீயினை அழுத்தவும். பைல் மெனு கிடைக்கும். இவை உங்கள் பிரச்னையைத் தீர்க்கவில்லை என்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மீண்டும் செட் செய்திடவும். இவ்வாறு செய்திடுகையில், உங்கள் டூல் பார் மற்றும் செக்யூரிட்டி செட்டிங்ஸ் மாறிவிடும். மீண்டும் அவற்றை செட் செய்திட வேண்டும். இதிலும் சரியாகவில்லை என்றால், கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராமினை நீக்கும் வழிகளை மேற்கொள்ளவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் புரோகிராம் ஒன்று திறக்கப்படும் விதத்தினை எப்படி மாற்றுவது? ஏற்கனவே ஒரு புரோகிராம் மூலம் திறக்கப்படும் ஒரு புரோகிராமினை, இன்னொரு புரோகிராம் கொண்டு திறக்கும்படி அமைக்க என்ன செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
கா. செந்தில் வேலன், இராமநாதபுரம்.
பதில்:
செந்தில், நீங்கள் பைல் என்று சொல்வதற்குப் பதிலாக புரோகிராம் என எழுதி இருக்கிறீர்கள். பைல் ஒன்றைத் திறந்து உங்கள் பயன்பாட்டுக்குக் காட்டுவதே ஒரு புரோகிராம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் ஒன்றை வேர்ட், நோட்பேட் அல்லது வேர்ட் பேட் என எந்த புரோகிராமும் திறக்கலாம். வழக்கமாக வேர்ட் புரோகிராம் தான் இதனைத் திறக்கும்.
இனி, உங்கள் பிரச்னைக்கு வருவோம். பைல் ஒன்றைத் திறக்கும் வழக்கமான புரோகிராமிற்குப் பதிலாக, நீங்கள் விரும்பும் புரோகிராம் மூலம் திறக்க விரும்புகிறீர்கள். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. பைல் பெயர் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Open With என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த பைலைத் திறந்து இயக்கக் கூடிய புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். அதிலிருந்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கலாம். அந்த வகை பைலை, எப்போதும் ஒரு குறிப்பிட்ட புரோகிராம் தான் திறக்க வேண்டும் என விரும்பினால், அதே Open With மெனுவில், Choose default programs என்பதில், நீங்கள் விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், அடுத்து மாற்றப்படும் வரையில், அதே புரோகிராம் தான், அந்த வகை பைலைத் திறக்கும்.

கேள்வி: மிகச் சிறப்பாக இயங்கி வரும் இந்திய ரயில்வே இணைய தளத்தில், குறிப்பிட்ட ட்ரெயின் தாமதமாக வருகிறதா? எந்த ஸ்டேஷனில் உள்ளது? போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியுமா? அதற்கான இணைய முகவரி என்ன?
செ. முத்துக் கருப்பன், மதுரை.
பதில்:
நீங்களே மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது என்று சான்று அளித்துவிட்டீர்கள். அதிக மக்களால் பயன்படுத்தப்படும் தளமாகவும் இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. தளம் உள்ளது. நீங்கள் சரியான நேரத்தில் தான் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். அண்மையில் தான் இந்த வசதி தரப்பட்டுள்ளது. http://enquiry.indianrail.gov.in/ntes/ என்ற இணைய தளம் செல்லவும். நீங்கள் அறிய விரும்பும் ட்ரெய்ன் பெயர் அல்லது எண் தரவும். எந்த நாள் என்று குறிக்கவும். தொடங்கும் ஸ்டேஷன் பெயர், புறப்பட்ட நேரம், தற்போது எந்த ஸ்டேஷனைக் கடந்துள்ளது, எந்த நேரத்தில் இறுதி ஸ்டேஷனை அடையும் என்ற தகவல்கள் காட்டப்படும். ட்ரெய்ன் அப்போது எந்த நிலையத்தில் உள்ளது, எந்த ஸ்டேஷனில் இருந்து அதற்கு முன் புறப்பட்டது, நீங்கள் கேள்வி கேட்ட ஸ்டேஷன், தகவல் பெற்ற நேரத்தில் எந்த ஸ்டேஷனில் இருந்தது எதிர்பார்க்கும் நிலையம் வரும் நேரம், அந்த ஸ்டேஷனில் இருந்து புறப்படும் நேரம் என்ற வரிசையில் அனைத்து தகவல்களும் தரப்படும்.
இந்த கேள்விக்கான பதிலை இன்னொரு நாட்டில் இருந்து எழுதுகையில், அன்று மதுரையிலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் குறித்த தகவலைக் காட்டும் இணைய தளத்தின் பதிலைப் படமாக இங்கு தந்துள்ளேன். இதுதான் தகவல் தொழில் நுட்பம் நமக்குத் தரும் வசதி. இதுவே தொலைபேசி மூலம் அறிய முற்பட்டால், எதிர் முனையில் பேசுபவர்களுக்கு, தெளிவாகப் புரிய வைத்து, பின் அவர்கள் தகவல் தேடி நமக்குத் தெரிய வைப்பது நேரம் எடுக்கும் வேலையாக அமையும்.

கேள்வி: என் அலுவலக டாகுமெண்ட்களில், பல டேபிள்களை உருவாக்க வேண்டியுள்ளது. சில வேளைகளில், இரண்டு டேபிள்களை இணைத்து ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டியதுள்ளது. அவ்வாறு இனைக்கும்போது, செல்களின் அகலம், நீளம் ஒன்று போல இல்லை எனில் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?
என். ஜெயந்தி, கும்பகோணம்.
பதில்:
எம்.எஸ். ஆபீஸ் அல்லது வேர்ட் எந்த தொகுப்பினைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற தகவல் தந்திருக்கலாம். உங்கள் கேள்வியிலிருந்து, வேர்ட் 2007 நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களின் பிரச்னைக்கான தீர்வினை வேர்ட் கொண்டுள்ளது. இதோ, விரிவாக அதனைத் தருகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டது போல, இரண்டு டேபிள்களிலும் உள்ள நெட்டு வரிசை எண்ணிக்கை வேறுபாட்டுடன் இருந்தால், இணைப்பது சற்று சிரமத்தைத் தரும். இருப்பினும் தீர்வு காணலாம். கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. புதிதாக இணைக்கப்பட்ட டேபிளில் ஏதேனும் ஓர் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Select | Select Table எனச் செல்லவும். இப்போது முழு டேபிளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இங்கு Cell Size குரூப்பில் தரப்பட்டுள்ள கண்ட்ரோல்களைப் பார்க்கவும். உயரம் மற்றும் அகலம் அமைப்பதற்கான கண்ட்ரோல்கள் தரப்பட்டுள்ளதனைக் காணலாம். உங்களுக்கு இப்போதைக்கு அகலத்தைச் சரி செய்வதுதான் வேலை. கண்ட்ரோலின் வலது புறம் உள்ள மேல் நோக்கிய அம்புக் குறியினைக் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், நெட்டு வரிசையின் அகலத்தைச் சற்றுக் குறைப்பதனைக் காணலாம். இருப்பினும் அனைத்து நெட்டு வரிசையின் அகலமும் ஒரே அளவில் அமைந்திருப்பதனைப் பார்க்கலாம்.
இப்போது முழு டேபிளுக்கும் நெட்டு வரிசை ஒரே அகலத்தில் அமைந்திருப்பதனைக் காணலாம். இனி Cell Size குரூப்பில் AutoFit என்னும் டூலினைக் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது துணை மெனு ஒன்றைக் காட்டும். அதிலிருந்து AutoFit Window என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டேபிளின் மொத்த அகலமும், கிடைக்கின்ற மார்ஜின் அகலம் மற்றும் நெட்டு வரிசை அனைத்திற்கும் ஒரே அளவில் அகலம் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இந்த நேரத்தில், நீங்கள் கூடுதலாக மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுத்த விரும்பினால், ஏற்படுத்திக் கொள்ளலாம்.

கேள்வி: பிரவுசர் திறந்து இணைய தளம் ஒன்றின் முகவரி கொடுத்துச் செல்லாமல், டெஸ்க்டாப்பில் ஷார்ட் கட் ஐகான் வைத்து அதில் கிளிக் செய்வதன் மூலம், நேரடியாக அந்த இணைய தளத்தினைப் பயன்படுத்தலாமா?
சா. இனிய நிலா, புதுச்சேரி.
பதில்:
சில வழிமுறைகளை மேற்கொண்டால், இணைய தளம் ஒன்றுக்கு நீங்கள் விரும்பும் வகையில் ஷார்ட் கட் ஐகான் ஏற்படுத்தி, அதில் கிளிக் செய்து தளம் செல்லலாம். முதலில் உங்கள் பிரவுசரைத் திறந்து, நீங்கள் விரும்பும் தளத்திற்குச் சென்று திறக்கவும். அதனை, கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப் தெரியும் வகையில், சிறியதாக விண்டோவினை அமைக்கவும். இப்போது பிரவுசரின் முகவரி கட்டத்தினைப் பார்க்கவும். கட்டத்தினை அடுத்து ஒரு சிறிய ஐகான் தரப்பட்டிருக்கும்.
இது சில பிரவுசரில் வேறுபட வாய்ப்புண்டு. அந்த ஐகானில் கிளீக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டெஸ்க்டாப்பில் விட்டுவிடவும். தானாக, அந்த இணைய தளத்திற்கு ஒரு ஷார்ட் கட் ஐகான் அமைக்கப்பட்டு காட்சியளிக்கும்.
இனி, அடுத்து, நீங்கள் இணைய தளம் செல்ல வேண்டும் என்று எண்ணுகையில், அதில் கிளிக் செய்தால் போதும். எந்த பிரவுசரை மாறா நிலையில் உள்ள பிரவுசராக அமைத்திருக்கிறீர்களோ, அது திறக்கப்பட்டு, அந்த இணைய தளம் காட்சி அளிக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Madurai,இந்தியா
23-பிப்-201512:06:06 IST Report Abuse
raja கேள்வி: எனக்கு இந்தப் பிரச்னை சில மாதங்களாகவே உள்ளது. தீர்வினைக் காண முடியவில்லை. தயவு செய்து உதவவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11ல், விண்டோ ஒன்றைத் திறக்கும் போது, அது முழுமையான முழுத் திரையாக இல்லை. சிறிய விண்டோவாகவே திறக்கிறது. பின்னர், முழுத் திரைக்கான ஐகானைக் கிளிக் செய்த பின்பு முழுத் திரை கிடைக்கிறது. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு வெளியேறி பின் மீண்டும் வந்தால், மீண்டும் சிறிய அளவிலேயே திரை கிடைக்கிறது.இந்தப் பிரச்னை எந்த முறையில் பிரவுசரைத் திறந்தாலும் ஏற்படுகிறது. தீர்வும் விளக்கமும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என். தனசேகரன், சிவகாசி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X