சாம்சங்: புதிய ஸ்மார்ட் போன்களும் டிஜிட்டல் சாதனங்களும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மார்
2015
00:00

அண்மையில், பேங்காக் நகரில் நடைபெற்ற சாம்சங் தென் மேற்கு ஆசியா அமைப்பு 2015 என்ற கருத்தரங்கில், மூன்று புதிய 4ஜி ஸ்மார்ட் போன்களோடு, பல்வேறு டிஜிட்டல் நுகர்வோர் சாதனங்களை, இந்தியாவிற்கென சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. உலகிலேயே முதன் முதலாக, உள்ளாக இடம் மாற்றிக் கொள்ளக் கூடிய ரெப்ரிஜிரேட்டர், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் திறன் கொண்ட தொலைக் காட்சிப் பெட்டி, 2.5 லட்சம் இந்தியப் பாடல்களும், 1,500 திரைப்படங்களும் கொண்ட நூலகம் என சாம்சங் நிறுவனத்தின் அதிரடி அறிமுகங்கள் இருந்தன. இந்தக் கருத்தரங்கில், இந்தியா, நேபாளம், வங்காள தேசம் மற்றும் ஸ்ரீலங்காவிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவற்றை அறிமுகப்படுத்திய சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹாங், இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலாச்சாரம், வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் அதன் விருந்தோம்பல் குணம் ஆகியவற்றை தான் வேறு எங்கும் கண்டதில்லை என்று குறிப்பிட்டார். 2015 ஆம் ஆண்டில், சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்பு பொருட்களில், புதிய மாற்றங்களைத் தரும் தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம் இந்திய மக்களின் நுகர்வோர் பொருட்கள் சார்ந்த அனுபவம் நிறைவும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும் எனவும் கூறிய அவர், இவற்றின் மூலம், சாம்சங் இந்தியாவில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
காலக்ஸி ஏ7 என்ற வரிசையில் வர இருக்கும் 4ஜி மொபைல் ஸ்மார்ட் போன்கள் - காலக்ஸி ப்ரைம் 4ஜி, காலக்ஸி கோர் ப்ரைம் 4ஜி மற்றும் காலக்ஸி ஜே1 4ஜி ஆகிய மூன்றும், 4ஜி தொழில் நுட்பத்தின் முழுமையான, நிறைவான பயன்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மாற்றிக் கொள்ளக் கூடிய ரெப்ரிஜிரேட்டரில், மக்கள் ப்ரீசர் இடத்தை, ரெப்ரிஜிரேட்டரின் இடமாக, ஒரு பட்டனை அழுத்தி மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொண்டிருக்கும்.
அறிமுகமாக இருக்கும் ஜாய் ஸ்மார்ட் தொலைக் காட்சிப் பெட்டியில், வை பி இணைய இணைப்பு, அதன் மதர் போர்டிலேயே தரப்பட்டிருக்கும். இதன் மூலம், பயனாளர்கள் இணையத்தை தொடர்பு கொள்ளலாம். இதே போல புதிய தொழில் நுட்பத்துடன் வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மைக்ரோவேவ் அடுப்புகளை சாம்சங் விற்பனைக்குக் கொண்டு வருகிறது.
4ஜி தொழில் நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் வர இருப்பதால், இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்படும் என சாம்சங் இந்தியா நிறுவனப் பிரிவின் துணைத் தலைவர் வார்சி தெரிவித்துள்ளார். நுகர்வோர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்போடு மாற்றம் அடைந்து வருவதாகவும், பல்வேறு பணிகளை மேற்கொண்டு செயலாற்றக் கூடிய டிஜிட்டல் சாதனங்களையே வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக 24 மணி நேரமும் டேட்டா தொடர்பில் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்று கூறிய அவர் விடியோ படங்கள் பார்த்து தங்கள் அன்றாட வாழ்க்கையின் தன்மையை மாற்றிக் கொள்வதில் மக்கள் முனைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். சாம்சங் கொண்டு வர இருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட சாதனங்கள் மக்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக நிறைவேற்றும் என்றும் கூறினார்.
4ஜி தொழில் நுட்பம் கொண்ட புதிய மாடல் ஸ்மார்ட் போன்கள், வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியாவில் கிடைக்கும் என்றும், அவற்றின் தொடக்க விலை ரூ.9,900 என்ற அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் ஒன்றான காலக்ஸி ஏ7 மாடல் போனின் தடிமன் 6.3 மிமீ என்ற அளவில் இருக்கும். இதன் திரை 5.5 அங்குல அளவில் இருக்கும். இரண்டு சிம்களை இயக்கக் கூடிய இந்த போனில் 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இதன் அதிக பட்ச விலை ரூ.30,499 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிமுகக் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்ட “க்ளப் சாம்சங்” (Club Samsung) இந்திய நுகர்வோரிடையே பலத்த வரவேற்பினைப் பெறும். இதில் இந்திய திரைப்படங்களும், இசைப் பாடல்களும் கிடைக்கும். இது ஒரு டிஜிட்டல் நூலகமாக இயங்கும். இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் இந்தியப் பாடல்களும், 1,500 இந்தியத் திரைப்படங்களும் தொடக்கத்தில் இருக்கும்.
சாம்சங் நிறுவனத்தைப் பொறுத்த வரை, அதன் பல்வேறு நுகர்வோர் சாதனங்களுக்கு, இந்தியாவினைத் தங்களின் முக்கிய விற்பனைச் சந்தையாகக் கருதுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வரும் சாம்சங், இங்கு இரண்டு உற்பத்தி தொழிற்சாலைகளையும், மூன்று ஆய்வு மற்றும் வளர்ச்சி வசதிகள் கொண்ட மையங்களையும் கொண்டுள்ளது. இவற்றில், ஏறத்தாழ 45 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சாம்சங் 84 நாடுகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு செயல்படுகிறது. இதன் ஆண்டு விற்பனை 1,96,00 கோடி டாலர் என்ற மதிப்பில் உள்ளது.
டில்லி அருகே நொயோடா உற்பத்தி தொழிற்சாலையில், புதியதாக சாம்சங் இஸட் 1 என்ற மொபைல் போன் முழுமையாக இங்கே தயாரிக்கப்படுகிறது. இதற்கான வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், இந்தியாவில் இயங்கும் இதன் ஆய்வு மையத்தில் உருவானவையாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X