லாவா ஐரிஸ் ப்யூயல் 20
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மார்
2015
00:00

லாவா இண்டர்நேஷனல் நிறுவனம், அண்மையில் ப்யூயல் வரிசையில், தன்னுடைய மூன்றாவது ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில், குறிப்பிடத்தக்க வகையில், 4,400 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு, 42 மணி நேரம் தொடர்ந்து பேச முடியும். ஏற்கனவே வெளியான இந்நிறுவனத்தில் ப்யூயல் வரிசை போன்களில் இந்த அளவு திறன் கொண்ட பேட்டரி தரப்படவில்லை.
இதன் திரை 5 அங்குல அளவில் FWVGA IPS டிஸ்பிளே காட்டும் வகையாக உள்ளது. இதில் 1. 3 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். இதில் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, ஆட்டோ போகஸ் வசதியுடன் கூடிய, 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும். வி.ஜி.ஏ. கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 2 ஜி நெட்வொர்க் அலைவரிசையில் செயல்படுகிறது.
தொடர்ந்து ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவோருக்கு வசதியாக, இந்த போனில், அதிக திறன் கொண்ட பேட்டரி இணைக்கப் பட்டுள்ளதாக, இந்நிறுவன உயர் அலுவலர் குறிப்பிட்டுள்ளார். இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை பி மற்றும் புளுடூத் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,399. தற்போது இணையதளங்கள் வழியாக இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X