குழந்தைகளுக்கான கூகுள் சேவை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மார்
2015
00:00

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில், சென்ற திங்கள் கிழமை, குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவென, யு ட்யூப் கிட்ஸ் (YouTube Kids) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இயங்குவதற்கென தயாரித்து வழங்கியுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும். இந்த அப்ளிகேஷன் மூலம் இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப்படும். குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும்.
இந்த அப்ளிகேஷனில் மூன்று சிறப்பம்சங்கள் உள்ளன:
1. பளிச் என்ற பெரிய படங்கள்: மிகப் பெரிய அளவிலான ஐகான்கள், அதைக் காட்டிலும் பெரிய படங்கள் காட்டப்படுவதால், குழந்தைகள் மிக எளிதாக, படங்களை, ஐகான்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஒலி வழி தேடல் (voice search) என்னும் டூல் இருப்பதால், குழந்தைகளுக்குச் சரியாக டைப் செய்திடத் தெரியாவிட்டாலும், தஙகளுக்குத் தேவையானவற்றைக் குரலில் வெளிப்படுத்தியும்
பிரியப்பட்ட வீடியோவினைத் தேடிப் பெறலாம் என கூகுள் அறிவித்துள்ளது. குழந்தைகளின் மழலைப் பேச்சினை எப்படி, இந்த டூல் அறிந்து தேடல் விடைகளைத் தரும் என்பது கேள்விக் குறியே.
2. குடும்பத்தை மையமாகக் கொண்ட தகவல்கள்: இந்த புதிய டூல், குடும்பங்களை மையமாகக் கொண்ட தகவல்களைத் தருவதாகக் கூகுள் அறிவித்துள்ளது. எனவே, குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய படங்கள் மட்டுமே காட்டப்படும் என்பதால், பெற்றோர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். அத்துடன், கூகுள் சிறுவர்களுக்கான விடியோ படங்கள் தயாரிப்பவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தொடர்ந்து வீடியோ படங்களை அப்லோட் செய்திட வழி மேற்கொண்டுள்ளது.
3. பெற்றோர்களின் கட்டுப்பாடு: யு ட்யூப் கிட்ஸ் டூல், பெற்றோர்கள் மேற்கொள்ளக் கூடிய கட்டுப்பாட்டிற்கான வழிகளுடன் (parental control). பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் டேப்ளட் பி.சி.க்களைத் தரும் முன், அவர்கள் பார்க்கக் கூடிய நேரத்தினை அமைத்துவிட்டுப் பின்னர் தந்துவிடலாம்.
அது மட்டுமின்றி, தேடல் சாதனத்தின் இயக்கத்தினையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முடக்கி வைக்கலாம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில், யு ட்யூப் இயக்கத்தினை மாற்றத் திட்டமிடும் கூகுள் நிறுவனத்தின் முதல் கட்ட முயற்சி இந்த யு ட்யூப் கிட் என எடுத்துக் கொள்ளலாம். இந்த டூல் தொடர்ந்து, மேலும் பல வசதிகளைத் தரும் வகையில், மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X