மைக்ரோசாப்ட் தரும் 100 ஜிபி இலவச இடம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மார்
2015
00:00

சென்ற வாரம்,மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில், புதிய அறிவிப்பு ஒன்றை வழங்கியது. ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தும், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பிங் தேடல் சாதனம் பயன்படுத்தினால், ஒன் ட்ரைவில் பைல் பதியும் இடத்தின் அளவை 100 ஜி.பி. ஆக உயர்த்தியது.
ஒன் ட்ரைவ் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும், மைக்ரோசாப்ட் 10 ஜி.பி. அளவில் இலவச இடம் அளிக்கிறது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோருக்கு, ஒன் ட்ரைவ் பயன்பாடு, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்ததாகவே கிடைக்கிறது. இது, விண்டோஸ் 10 மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது பிங் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், இலவசமாக 100 ஜி.பி. இடம் தருவதனை அறிவித்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டது போல, இந்த திட்டம், முதலில் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அப்போது, அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள், சற்று சுற்று வழியை மேற்கொண்டு இந்த சலுகையினைப் பெற்றார்கள். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சலுகையினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. மற்ற நாட்டு வாடிக்கையாளர்கள், https://login.live.com/oauth20_authorize.srf?client_id=000000004C12B387&scope=wl.signin%20wl.basic%20wl.emails%20wl.skydrive%20wl.onedrive_provision_quota&response_type=code&redirect_uri=https://preview.onedrive.com/callback.aspx என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அங்கு தங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் குறித்த லாக் இன் தகவல்களை அளிக்க வேண்டும். இதன் மூலம் சைன் இன் செய்த பின்னர், அவருக்குத் தானாக, 100 ஜி.பி. ஒன் ட்ரைவ் ஸ்டோரேஜ் இடம், இரண்டாண்டுகளுக்கு அளிக்கப்படும்.
மைக்ரோசாப்ட், தன் ஒன் ட்ரைவில் இடத்தை நான்கு வகைகளில் அளித்து வருகிறது. முதல்
15 ஜி.பி. முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது. 100 ஜி.பி. இடம் வேண்டும் எனில், மாதந்தோறும் 1.99 டாலர் அளிக்க வேண்டும். 200 ஜி.பி. இடத்திற்கு 3.99 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரு டெரா பைட் தேவைப்படுவோர், ஆபீஸ் 365 தொகுப்பு பயன்படுத்துபவராக இருந்தால், மாதம் 6.99 டாலர் செலுத்த வேண்டும். இப்போது பிங் தேடல் சாதனப் பயன்பாடு ஊக்குவிக்கும் திட்டத்தில், அவர்களுக்கு 100 ஜி.பி. இலவச இடம் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுவதால், இரண்டாண்டுகளுக்குப் பின்னர், அவர்கள், மேலே குறிப்பிட்ட கட்டணத்திட்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X