ஆப்பிள் ஐபோனை உரசிப் பார்க்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் 6, கேலக்ஸி எஸ் 6 எட்ஜ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மார்
2015
00:00

ஸ்மார்ட் போன் விற்பனையில் தன் முதல் இடத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் விட்டுவிட்ட சாம்சங் நிறுவனம், அந்த இடத்தைப் பிடிக்கும் வகையில், தன் கேலக்ஸி எஸ் 6 மற்றும் கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் ஸ்மார்ட் போன்களை, பார்சிலோனாவில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியிட்டது. இவை வரும் ஏப்ரல் 10ல், உலக அளவில் விற்பனைக்கு வரும். இருப்பினும் சில நாடுகளில், விலை அறிவிக்கப்பட்டு, முன் பதிவு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த போன்கள் 32 ஜி.பி., 64 ஜி.பி., மற்றும் 128 ஜி.பி. தேக்க அளவுகளில் வெளிவந்துள்ளன. 32 ஜி.பி. கேலக்ஸி எஸ் 6 போன் நெதர்லாந்து நாட்டில் 699 ஈரோ (ரூ.48,300), கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் 849 ஈரோ (ரூ. 58,600) என விலையிடப்பட்டுள்ளன. இந்த விலை பின் நாளில் மாறலாம். இவற்றின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ் 65.10 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 1440x2560 பிக்ஸெல் (PPI 577 திறனுடன்) வெளிப்பாடு, 3 ஜி.பி. ராம் நினைவகம், இதன் பரிமாணம் 143.40 x 70.50 x 6.80 மிமீ, எடை 138 கிராம், மாற்ற இயலாத 2550 mAh திறன் கொண்ட பேட்டரி, 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர், அதிகப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ள 32 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம், ப்ளாஷ் இணைந்த 16 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமரா, 5 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா, ஆண்ட்ராய்ட் 5 ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஜாவா செயல்பாடு, நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி, ஜி.பி.எஸ்., புளுடூத், என்.எப்.சி., இன்ப்ரா ரெட் ஆகிய தொழில் நுட்பங்களின் செயல்பாடு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி., ஒரே ஒரு நானோ சிம் இயக்கம், மேக்னடோ மீட்டர், ப்ராக்ஸிமிடி சென்சார், அக்ஸிலரோமீட்டர், லைட் சென்சார், கைரோஸ்கோப், பாரோ மீட்டர் ஆகியவை இந்த போனில் தரப்பட்டுள்ளன. ஆனால், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைக்க போர்ட் இல்லை
கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் 5.10 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 1440x2560 பிக்ஸெல் (PPI 577 திறனுடன்) வெளிப்பாடு, 3 ஜி.பி. ராம் நினைவகம், இதன் பரிமாணம் 142.10 x 70.10 x 7.00 மிமீ, எடை 132 கிராம், மாற்ற இயலாத 2600 mAh திறன் கொண்ட பேட்டரி, 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர், அதிகப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ள 32 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம், ப்ளாஷ் இணைந்த 16 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமரா, 5 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா, ஆண்ட்ராய்ட் 5 ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஜாவா செயல்பாடு, நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி, ஜி.பி.எஸ்., புளுடூத், என்.எப்.சி., இன்ப்ரா ரெட் ஆகிய தொழில் நுட்பங்களின் செயல்பாடு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி., ஒரே ஒரு நானோ சிம் இயக்கம், மேக்னடோ மீட்டர், ப்ராக்ஸிமிடி சென்சார், அக்ஸிலரோமீட்டர், லைட் சென்சார், கைரோஸ்கோப், பாரோ மீட்டர் ஆகியவை இந்த போனில் தரப்பட்டுள்ளன. இதிலும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைக்க போர்ட் இல்லை. இந்த இரண்டு போன்களையும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 க்குப் போட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சாம்சங் வடிவமைத்துள்ளது என்பது வெளிப்படையான உண்மை.
முதலாவதாக, ஆப்பிள் போன்களைப் போல, மெட்டல் மற்றும் கிளாஸ் பயன்பாட்டினை, சாம்சங் இவற்றில் மேற்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்ட சாம்சங் எஸ்5 போனைக் காட்டிலும் இது தோற்றத்தில் அழகைக் கொண்டுள்ளது. மேலும், எஸ் 6 எட்ஜ் போனில் தரப்பட்டுள்ள வளைவான கிளாஸ் கொடுக்கும் தோற்றம் கூடுதல் அழகைத் தருகிறது. கைகளில் பிடித்துப் பயன்படுத்த வசீகரமாய் உள்ளது.
ஆனால், ஐபோன் 6க் காட்டிலும் சிறந்த போனாக இவை உள்ளனவா என்பது விவாதத்திற்குரிய செய்தியே. சாம்சங் மிகச் சிறந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை இதுவரை வழங்கி வந்தது. இவற்றின் உச்ச கட்ட சிறந்த போனாக, கேலக்ஸி எஸ் 5 உள்ளது. ஆனால், கேலக்ஸி எஸ் 6 வடிவமைப்பில் சிறிது சறுக்கல் உள்ளது என்றே சொல்ல வேண்டும். சாம்சங் கேலக்ஸி 6க்கு மாறினால், கேலக்ஸி 5ல் உள்ள எந்த வசதிகளை நீங்கள் இழக்கிறீர்கள் என்று பார்க்கலாம்.
கேலக்ஸி எஸ்5 எந்த அதிர்ச்சியையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது கேலக்ஸி எஸ்6ல் இல்லை.
ஐபோனில் பேட்டரியை மாற்ற முடியாது. அது விரும்பத்தகாத அம்சமாக அதன் வாடிக்கையாளர்களால் கருதப்படுகிறது. ஆனால், சாம்சங், அதே அம்சத்தினை கேலக்ஸி 6ல் தந்துள்ளது. நிச்சயமாக இது வரவேற்கப்பட மாட்டாது.
பேட்டரியை நீக்கி வேறு ஒரு பேட்டரியை இணைத்துச் செயல்படுத்தும் வசதி, கேலக்ஸி போன் எஸ் 6ல் நீக்கப்பட்டுள்ளது. பலர் போனுக்கான ஸ்பேர் பேட்டரியை வைத்துக் கொண்டு, முதல் பேட்டரி சார்ஜ் தீர்ந்தவுடன். மாற்றிக் கொண்டு செயல்படுத்துவார்கள், இந்த வசதி தடுக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்5 128 ஜி.பி. வரை ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டைப் பயன்படுத்தலாம். ஆனால், இந்த வசதி கேலக்ஸி எஸ் 6ல் இல்லை. எனவே, நம் இஷ்டத்திற்கு டாகுமெண்ட், போட்டோ மற்றும் வீடியோ பைல்களைப் பதிந்து வைக்க முடியாது.
கேலக்ஸி எஸ் 6ன் தடிமனைச் சுருக்குவதற்காக நீக்கப்பட்டவற்றில், இந்த போனை தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் பொருட்களை சாம்சங் நீக்கியுள்ளது. சாம்சங் எஸ் 5 போனில் இது தரப்பட்டுள்ளது. இந்த முறை இந்த இரண்டு போன்களிலும் வழக்கமான ஸ்நாப்ட்ரேகன் (Snapdragon) ப்ராசசருக்குப் பதிலாகத் தன்னுடைய தயாரிப்பான எக்ஸைநாஸ் 7420 (Exynos 7420 processor)- ப்ராசசரை, சாம்சங் பயன்படுத்தியுள்ளது. இந்த ப்ராசசர் மின் சக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வகை ப்ராசசர் 4ஜி பயன்பாட்டிற்கு இணைவாகச் செயல்படாது எனத் தெரிகிறது. அவ்வகையில் இது ஒரு செயல்பாட்டுச் சறுக்கலே. ஆனால், இதன் செயல் வேகம் 2.1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், இந்த போன்களே, அதிக வேகத்தில் இயங்கும் ஆண்ட்ராய்ட் போன்களாக முதல் இடம் பெறும்.
வேறு சில உதிரி வசதிகளைத் தந்து சாம்சங் தன் போனைச் சிறந்ததாகக் காட்டிக் கொண்டுள்ளது. ஐபோனில் இருப்பது போல விரல்
ரேகை ஸ்கேனர் மற்றும் இதயத் துடிப்பை அளக்கும் மானிட்டரைத் தந்துள்ளது. 10 நிமிடம் சார்ஜ் செய்தால், நான்கு மணி நேரம் பேசும் திறனை அளிக்கும் என சாம்சங் கூறியுள்ளது ஒரு சிறப்பான அம்சமாகும். அதாவது இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய விடியோவினைத் தொடந்து மீண்டும் சார்ஜ் செய்திடாமல் பார்க்கலாம்.
ஏறத்தாழ 700 எம்.பி. இடத்தை எடுத்துக் கொண்டு இயங்கிய தன் யூசர் இண்டர்பேஸ் டூலை, சாம்சங் இந்த இரண்டு போன்களிலும் நீக்கிவிட்டது. இதன் மூலம் முழு இயக்க வேகமும் தடை படாமல் இருக்கும். எப்போதும் தன் போன்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் சாம்சங், இந்த முறை உலோகம் மற்றும் கிளாஸ் பயன்படுத்தியுள்ளது இதற்கு நல்லதொரு தோற்றப் பொலிவைத் தந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ''ஆப்பிள் பே” வசதிக்கு இணையாக ''சாம்சங் பே” வசதி தரப்பட்டுள்ளது இந்த போன்களின் தனிச் சிறப்பாகும். சில அம்சங்களில், ஆப்பிள் பே கொண்டுள்ள சில குறைகள் இன்றி சாம்சங் பே இயங்குகிறது. இது குறித்த தகவலைத் தனிக் கட்டுரையில் காணவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X