மாநில மொழிகளும், வேகமும் இணைந்தால் இணைய வழி வர்த்தகம் 20,000 கோடி டாலரை எட்டும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மார்
2015
00:00

ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீரனின் ஓட்டத்திற்கு இணையானதாக, இந்திய இணையப் பயன்பாடு வளர்ச்சி பெற்று இன்று வேகமாக இயங்கி வருகிறது. முதலில், ஓட்டத்திற்குத் தயாராவது போல, ஒரு கோடி இணையப் பயனாளர்களைப் பெற, பத்து ஆண்டு எடுத்துக் கொண்டது. இது பத்து கோடியை எட்ட, மேலும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.
ஆனால், அடுத்த ஓட்ட நிலை மிக வேகமாக மாறியது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 2010 முதல் 2013 ஆம் ஆண்டு கால இடைவெளியில், இன்னும் பத்து கோடி அதிகரித்தது. அடுத்த கட்டம் தான், குறிப்பிடத்தக்க வேகத்தினை இணையம் எட்டியது. ஆம், அடுத்த பதினெட்டு மாதங்களில், டிசம்பர் 2013ல், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 30 கோடியை எட்டியது. இப்போது மாதந்தோறும், 50 லட்சம் புதிய இணையப் பயனாளர்கள் இணைந்து கொண்டே இருக்கின்றனர். இந்த வேகத்தில் சென்றால், 2018-19 ஆம் ஆண்டில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியாக இருப்பார்கள். கூகுள் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ராஜன் ஆனந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சியின் விளைவு என்னவாக இருக்கும்? 50 கோடி இணையப் பயனாளர்கள், நிச்சயமாக, இந்தியாவின் பொருளாதாரச் சூழ்நிலையை, உயர்ந்ததாக மாற்றி அமைக்க முடியும். வர்த்தகக் கட்டமைப்பினை வளர்ச்சி அடையச் செய்திட முடியும். நாம் எதிர்பாராத அளவிற்கு சமுதாயமும் அதன் நிர்வாகத் திறனும் சிறப்பாக மாற முடியும். உலகளாவிய ஆய்வு அமைப்புகள், இந்தியாவைத் தொடர்ந்து கண்காணித்து, இந்த மாற்றங்கள் ஏற்படும் என அறிவித்துள்ளனர்.
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற ஆய்வு அமைப்பு, 50 கோடி இந்திய இணையப் பயனாளர்கள், இணையம் சார்ந்த பயன்பாட்டின் மூலம், 20,000 கோடி அளவிற்கு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அறிவித்துள்ளது. இது இன்றைய நிலையைக் காட்டிலும், நான்கு மடங்கு அதிகமானதாகும்.
வரும் 2018 ஆம் ஆண்டில், இரண்டில் ஓர் இந்தியர் இணையப் பயன்பாட்டின் மூலம் தன் வாழ்வை நடத்திக் கொண்டிருப்பார். இதனால் அதிக பட்ச வளர்ச்சி அடைய இருப்பது, இணைய வழி வளர்ச்சியாகும். இது தற்போது இருப்பதைக் காட்டிலும் நிச்சயமாக ஐந்து மடங்கு அதிகரிக்கும். அடுத்து, கல்வி மற்றும் உடல்நலம் சார்ந்த வர்த்தகம் மொபைல் வழி இணையப் பயன்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்படும்.
இணையத்தின் வழியான இந்த எழுச்சி, புதிய தொழில் மற்றும் வர்த்தகம் தொடங்குவதனையும், அதன் மூலம் சொத்து உருவாக்குவதனையும் ஏற்படுத்தும். இதனை எதிர்பார்த்தே, ஸ்கைப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தான், இந்திய இணையப் பிரிவில் 30 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். 50 கோடி இணையப் பயனாளர் ஜனத்தொகை என்பது, ஐரோப்பா கண்டத்தின் முழுமையான ஜனத்தொகைக்கு ஈடானதாக ஆகும். வேகம் குறைந்த இணைய இணைப்பு போன்ற தடைகள் ஆங்காங்கே இருந்தாலும், இணையம் வழி இந்தியாவில் ஏற்படப் போகும் சுனாமியை யாரும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்த இணையப் பயன்பாட்டில் ஏற்படும் வளர்ச்சி, மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இப்போது, இணையம் சார்ந்த பணிகளில், ஏறத்தாழ 4 லட்சம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இது, வரும் 2020 ஆம் ஆண்டில் 20 லட்சமாக உயரும். பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆய்வு நிறுவனம், இந்திய இணையப் பொருளாதாரம், 6 கோடியே 50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும், அதன் மூலம் தனிநபர் வருமானம் 29% உயரும் என்றும் அறிவித்துள்ளது.
டெலாய்ட் கன்சல்டிங் நிறுவனம் இணையப் பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. இணைய இணைப்பு உள்ள கிராமம் ஒன்றிலும், இணைப்பு இல்லாத ஒன்றிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இணைய இணைப்பு இருந்த கிராமத்தில், குழந்தை வயதில் மரணம் ஏற்படுவது 14% குறைந்தது. இது மற்ற பொருளாதார பிரிவுகளிலும் நன்மை தரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் தலையிட்டாலும், தலையிடாவிட்டாலும், இணைய இணைப்பு இருப்பதனால், இணையம் வழி நிர்வாகம் சீரடையும். இணையம் வழி மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள், சென்ற 2013-14 ஆம் ஆண்டில், 50 கோடியிலிருந்து 179 கோடியாக உயர்ந்தது.
பாஸ்டன் குரூப் மேற்கொண்ட ஆய்வில், வரும் 2018ல், மொபைல் வழி இணையம் பயன்படுத்துவோர் 58.30 கோடியாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கைகள், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இணையமே காரணமாக இருக்கப் போகிறது என அறிவித்தாலும், இன்றைய கணத்தில் நிலவும் சில உண்மைத் தகவல்களையும் நான் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. 30 கோடி இணையப் பயனாளர்களில், இந்தியாவில் ஆங்கில மொழியைப் பயன்படுத்தத் தெர்ந்த அனைவரும் இடம் பெறுகின்றனர். எனவே, அடுத்த இணையப் பயனாளர்கள், மாநில மொழி மட்டுமே தெரிந்து, இணையம் பயன்படுத்துவோரிடம் இருந்து வர வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, இணையப் பயன்பாடு அதிகம் பணம் வேண்டும் செலவினமாக உள்ளது. அதனாலேயே பலர் இதனை விட்டு விலகியே உள்ளனர்.
அத்துடன், இணைப்பின் தரம், வேகம், கல்வி மற்றும் உடல் நலம் சார்ந்த செயல்பாடுகளுக்கு உகந்ததாக, வேகமானதாக இல்லை. திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் கூட, இணைய வேகம் போதுமானதாக இருப்பதில்லை. பலர் பிராட்பேண்ட் இணைப்பினைக் கொண்டிருப்பதில்லை. இதனால், உலகிலேயே குறுகலான பேண்ட்வித் கொண்டு இணையத்தினை தொடர்பு கொள்ளும் பெரிய நாடாக இந்தியாதான் எதிர்காலத்தில் வந்துவிடுமோ என்று அனைவரும் அஞ்சுகின்றனர்.
இணைய இணைப்பு பெறாதவர்களை, இணையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இல்லை எனில், இழப்பு அவர்களுக்கு மட்டும் அல்ல; இந்தியாவிற்கே இழப்பாக முடியும். இது ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், பொதுவில், இலவச இணைய இணைப்பு இந்தியாவில் வந்தாக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இணைய இணைப்புகள் பெரும்பாலும் 2ஜி இணைப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். எடுத்துக் காட்டாக, மிக அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும், ஏர்டெல் நிறுவனத்தின் 21 கோடி பேர்களில், 1.1 கோடி பேர் மட்டுமே 3ஜி இணைப்பு கொண்டுள்ளனர். இணைய இணைப்பு வர்த்தக சந்தையில், 90% பேர் மாதம் ரூ.150 மட்டுமே செலவழிக்கின்றனர். மாதந்தோறும் ரீசார்ஜ் என்ற முறையில் ரூ.50 முதல் ரூ.70 வரை கட்டணமாகச் செலுத்துகின்றனர். இவர்கள் மாதம் ரூ.250 (1 ஜி.பி. டேட்டா திட்டம்) கட்டணமாகச் செலுத்தி, 3ஜி இணைப்பினைப் பெறுவார்கள் என்பது சந்தேகமே.
விரைவான இணைய இணைப்பு, அனைவரும் பெற்றுப் பயன்படுத்தும் வகையில் இணைய கட்டணம், மாநில மொழிகளில் இணையப் பயன்பாடு கிடைத்தால் மட்டுமே, ஆய்வு நிறுவனங்கள் எதிர்கால இலக்காகக் குறிப்பிட்டிருக்கும், இணைய வழி வர்த்தக மதிப்பான 20,000 கோடி டாலரை எட்ட முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X