பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மார்
2015
00:00

''கம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வழிகள், நமக்கு நல்லதொரு பாதுகாப்பு வழிமுறைகளைத் தருகின்றன. இவற்றை வாரம் ஒருமுறைக் கடைப்பிடித்து வந்தால், வைரஸ் தாக்கிவிட்டதோ என்ற பயம் இன்றி இயங்கலாம். கணினி வேலைப்பாட்டில் அமைதியான செயல்பாட்டிற்கு இந்த வழிகள் உதவியாய் இருக்கும். தகவல்களுக்கு நன்றி,
எஸ். சோலையப்பன், கும்பகோணம்.

வைரஸ் கண்டறிய நீங்கள் கொடுத்த வழிகளில், இதுவரை நான் மேற்கொள்ளாத சந்தேக இடங்கள், பிரவுசர்கள் தான். உங்கள் வழிகாட்டுதல் படி, இப்போது பிரவுசரை நன்றாகச் சோதனை செய்து பார்க்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.
பேரா. எஸ். தில்லைநாயகம், தூத்துக்குடி.

பலரின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த போட்டோ ஷாப் 25 ஆண்டுகளை முடித்துவிட்டதா என்று வியப்படையத் தோன்றுகிறது. எனக்கு போட்டோ ஷாப் மூலம் கிடைத்த வேலை வாய்ப்பும், வாழ்வும் நான் என்றும் மறக்க மாட்டேன். உங்கள் கட்டுரை மிகச் சிறப்பாக கடந்த கால நினைவுகளை அசை போட வைத்தது.
ஆர். ராமலிங்கம், சென்னை.

''கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தொலைக்கக் கூடாதவை” என்ற கட்டுரையைப் படித்து முடித்தது முதல், எனக்கு அச்சமாக உள்ளது. ஏனென்றால், நான் நீங்கள் குறிப்பிடும் ஆக்டிவேஷன் கீ மற்றும் சிடியை தொலைத்துவிட்டேன். அல்லது வைத்த இடம் தெரியவில்லை. இதற்கு மாற்று வழிகளை எனக்குத் தெரியப்படுத்தவும்.
தே. இரத்தினவேல், சிதம்பரம்.

சாம்சங் நிறுவனம் நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. புதுமையான மாற்றங்களைத் தர இருப்பதனைத் தெளிவாக அறிவித்தமைக்கு நன்றி. இந்த புதிய வசதிகளைத் தரும் சாதனத்திற்குக் காத்திருந்து வாங்க முடிவு செய்துள்ளேன்.
என். கோகிலம் சந்திர சேகர், கோவை.

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு இலவசமாக மாறிக் கொள்ளலாம் என்ற தகவல் குறித்து பல சந்தேகங்கள் இருந்தன. கேள்வி பதில் பகுதியில் அவற்றைப் போக்கும் வகையில் பதில் தந்தமைக்கு நன்றி.
எம். சீராளன், பரமக்குடி.

விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு குறித்த தகவலின் பேரில் தந்த மெல்லிய எச்சரிக்கை தொனி என்னை மிகவும் கவர்ந்தது. ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற விளக்கத்தினை எவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தந்தமைக்கு நன்றி.
ஆர். கோவிந்தராஜுலு, காரைக்கால்.

பேங்க் கணக்கிற்கு வாரிசு எழுதித் தருவது போல, பேஸ்புக் அக்கவுண்டிற்கும் வாரிசா? வியப்பான செய்தி தான்.
கரு. செயமோகன், சிதம்பாம்.

ஹெடர் புட்டரில் தேதி அமைக்க வேண்டி நான் அனுப்பிய கேள்விக்கு, மிகத் தெளிவாகப் பதில் அளித்தமைக்கு நன்றி. இந்த தெளிவு வேறு எந்த நூலிலும் டிப்ஸாகக் கிடைக்கவில்லை. நன்றி. நன்றி.
என்.கவுதம ஈஸ்வரன், கோயமுத்தூர்.

குழந்தைகளுக்கான கூகுள் சேவை மிக அருமையான அப்ளிகேஷனாகும். இது போல கூகுள் மனது வைத்தால், பல பாலியல் வீடியோக்கள் பதிவதையும் பாலியல் செய்திகள் வருவதையும் தடுக்கலாம். இதனை அமைத்துத் தர கூகுள் முன்வர வேண்டும். பத்திரிக்கைகளிலும் கட்டுரைகள் இடம் பெற வேண்டும்.
என். மகாலிங்கம், தாம்பரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X