பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 மார்
2015
00:00

இணைய வேகம் அதிகரித்தால், இணையம் அனைத்து இடங்களிலும் நம்மைச் சுற்றி இருந்தால், இவ்வளவு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பது ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்த தகவலாக உள்ளது. இறுதியில், நீங்கள் நகைச்சுவைக்காக எழுதி இருந்தாலும், கனவுகளைக் கூட நம் இணையம் வழி செட் செய்யக் கூடிய நாள், தொழில் நுட்பம் நிச்சயம் வரும் என எதிர்பார்ப்போம். ”வருகிறது 5ஜி இணைப்பு” கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு என் பாராட்டுதல்கள். மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் கட்டுரை உள்ளது.
டாக்டர் என். தெய்வேந்திரன், கோவை.

''நமக்கு இன்னும் 4ஜி இணைப்பே சரியாகக் கிடைக்கவில்லை. 5ஜி எங்கே வரப்போகிறது?” என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளாமல், வர இருக்கும் தொழில் நுட்பம் குறித்து அறிந்து வைத்து, அதற்குத் தயாராய் இருக்க வேண்டும். அந்த வகையில் 5ஜி குறித்த தங்கள் கட்டுரை, தகவல்களைச் சரியாகத் தந்துள்ளது. குறிப்பாக படங்கள் பார்த்தவுடன் தகவல்களைத் தருவதாக உள்ளன. பாராட்டுதல்கள்.
பேரா. சி.எஸ். இராமமூர்த்தி, சென்னை.

கூகுள் நிறுவனம் மொபைல் சேவை தரும் நெட்வொர்க்கினைத் தொடங்கப் போகிறதா? கேட்கவே மகிழ்ச்சியாகவும், அதிக எதிர்பார்ப்பினைத் தருவதாகவும் உள்ளது. உலகம் முழுவதும் இயங்கும் ஒரு நெட்வொர்க்கினை, கூகுள் போன்ற நிறுவனங்களே அமைக்க முடியும். அப்படி அமைத்து, அதில் சேவை பெற்றால், எந்த நாடு சென்றாலும், ரோமிங் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும் என்றால், நினைக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் நம் உள்ளங்கையில் நிச்சயமாய் வந்துவிடும்.
எஸ். மாலா ராணி, திருமங்கலம்.

இன்றைக்கு இணைய வர்த்தகம் மேம்பட வேண்டும் என்றால், மாநில மொழிகளில் மொபைல் மற்றும் இணையப் பயன்பாடு இருக்க வேண்டும். இதற்கு அரசை நம்பாமல், நாமே முயற்சிகளை எடுக்க வேண்டும். யார் தொடங்குவது? என்றில்லாமல், யாரெல்லாம் முடியுமோ, அவர்கள் எல்லாரும் பங்களிப்பு செய்தால், நல்ல, சரியான செயல்பாடு தானாகவே முன்வரும். இதனை வலியுறுத்தி நீங்கள் இன்னொரு கட்டுரையை வெளியிட வேண்டும்.
டி.கெ. நல்லசிவம், புதுச்சேரி.

வாட்ஸ் அப் செயல்பாடு குறித்து பலர் தொடர்ந்து ஆதங்கப்பட்டுக் கொண்டே உள்ளனர். பாதுகாப்பு பயம் மட்டுமல்ல. மொபைல் போனின் பேட்டரி சக்தியையும் இது அதிகம் சாப்பிடுவதாகப் பலர் குறை சொல்கின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அனைத்து குறைகளையும் தன் கவனத்தில் கொண்டு வந்து, அவற்றை நீக்க முயற்சிக்க வேண்டும். இல்லை எனில், இன்ஸ்டண்ட் மெசஞ்சராகப் பெற்றிருக்கும் தன்னுடைய முதல் இடத்தை இழந்துவிடும்.
எஸ்.சாமுவேல் தேவநேசன், பொள்ளாச்சி.

சாம்சங் தர இருக்கும் புதிய ஸ்மார்ட் போன்கள் குறித்த தனிக் கட்டுரை, அவற்றின் பயன்பாடுகளை விரிவாகச் சொல்கிறது. ஆனால், இது சாதாரண மக்களுக்குத் தேவை இருக்காதே. விலை குறைந்த, நவீன வசதிகள் தரும் ஸ்மார்ட் போன்களே, அதிகம் விற்பனையாகும். இணையத்தை எளிதாகக் கொண்டு வரும் போன்களே பயனுள்ளவையாக இனி இருக்கும்.
சி.ஆர். சுந்தரேசன், திண்டுக்கல்.

''சாம்சங் பே” எல்லாம் நம்ம ஊருக்கு ஒத்து வருமா? இதனைப் புழக்கத்தில் கொண்டு வருவதில் வங்கிகளும், வர்த்தக நிறுவனங்களும், நம் மக்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டும். இப்போதே சில கடைகள், கிரெடிட் கார்ட் என்றால், 3 சதவீதம் பில் அதிகம் போடுகிறார்கள். இதை அரசு தட்டிக் கேட்பது இல்லையே?
என்.மஞ்சுளா, சிவகாசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X