முரசு அஞ்சல் முதல் நிலைப் பதிப்பு முற்றிலும் இலவசம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மார்
2015
00:00

தமிழ் மொழியைக் கம்ப்யூட்டரிலும், இணையத்திலும் பயன்படுத்த உதவியாக இருந்து வரும் “முரசு அஞ்சல்” மென்பொருளின் 30 ஆவது ஆண்டுவிழா சென்ற வாரம் சிறப்பாக, மலேசியாவில், கோலாலம்பூரில் கொண்டாடப்பட்டது. ஏறத்தாழ, உலகம் முழுவதும் பத்து லட்சம் பேர்களால் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், இதனை உருவாக்கி வழங்கி வரும் முத்து நெடுமாறன், மென்பொருளின் ”முதல் நிலைப் பதிப்பு” என்னும் சிறப்புப் பதிகையை, பயனாளர்களின் சொந்தப் பயனுக்கு இலவசமாகவே அளிப்பதாக அறிவித்தார்.
இந்த 30 ஆம் ஆண்டுவிழாவில், முரசு மென்பொருள் புதிய பதிகை மற்றும் செல்லினம் மற்றும் செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் குறித்தும் முரசு நெடுமாறன் உரையாற்றினார். முரசு மென்பொருளின் புதிய பதிகை தரும் புதிய வசதிகள் குறித்து, மிக விரிவாக விளக்கம் அளித்த முத்து நெடுமாறன், இறுதியில், இந்த பதிகையினை, இலவசமாக, அனைவருக்கும், தனி நபர் பயன்பாட்டிற்கு, இலவசமாக வழங்குவதாக அறிவித்து, உலகெங்கும் உள்ள தமிழ்ப் பயனாளர்களை மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தினார். இந்த முரசு அஞ்சல் முதல் நிலைப் பதிகையை இலவசமாகப் பெற விரும்புபவர்கள், http://muthal.anjal.net என்னும் தளத்திற்குச் சென்று, தங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றை அளித்து, இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உடன், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தலாம். பயன்படுத்துகையில், புதிய வசதிகளையும், புதிய அழகான எழுத்துருக்களையும் கண்டறியலாம். “இணைமதி” என்ற அழகான எழுத்துரு இதில் கிடைக்கிறது. இந்த எழுத்துரு ஆப்பிள் சாதனங்கள் அனைத்திலும் மற்றும் எச்.டி.சி. ஆண்ட்ராய்ட் கருவிகளிலும் இயல்பாக இயங்கு தளங்களுடன் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிய முரசு அஞ்சல் மென்பொருள், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும், கையடக்க சாதனங்களிலும் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதே முரசு அஞ்சல் முதல் நிலைப் பதிப்பின் வர்த்தகப் பதிப்பு, “முரசு அஞ்சல் முழு நிலைப் பதிப்பு” என்ற பெயரில், சில கூடுதல் தொழில் நுட்பங்களுடன் வர்த்தக நிறுவனங்களுக்கென வெளியிடப்பட்டுள்ளது. வணிக நோக்குடைய பயனர்கள், கட்டணம் செலுத்தி இதனைப் பெற்று, கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X