இன்ப்ரா ரெட் கதிர்கள் மூலம் மொபைல் போன் சார்ஜ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மார்
2015
00:00

வருங்காலத்தில், நாம் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் ஒரே சாதனத்தின் மூலம், எந்த வித வயர் இணைப்பும் இல்லாமல் சார்ஜ் செய்திடலாம். அதற்கான தொழில் நுட்பத்தினை, இந்த இலக்கினை நோக்கி செயல்பட்டு வரும் ஆய்வாளர்கள், ஏறத்தாழ செம்மைப் படுத்தி உள்ளனர். எப்படி இப்போது ரேடியோ அலைகளை உருவாக்கி, அவற்றின் மூலம் வை பி தொடர்பு ஏற்படுத்தி இணையத்துடன் தொடர்பு கொள்கிறோமோ, அதே போல, இன்ப்ரா ரெட் கதிர்கள் மூலம் சார்ஜ் செய்திடும் வசதியை இந்த புதிய தொழில் நுட்பம் தர இருக்கிறது. இதனை Wi-Charge என அழைக்கின்றனர்.
இதற்கென வடிவமைக்கப்படும் ட்ரான்ஸ்மிட்டர்கள், அறையில் விளக்குகள் அல்லது தீ பிடித்தால் அறியக் கூடிய கருவிகள் ஆகியவை அமைக்கப்படுவது போல அமைக்கப்படும். இவற்றிலிருந்து வெளியாகும் இன்ப்ரா ரெட் கதிர்கள், தானாகவே இவற்றைப் பெற்று, அவற்றை மின்சக்தியாக மாற்றக் கூடிய சாதனங்களை அடையும். இவை, நம் வீட்டின் அறைகள் என்றில்லாமல், கடை வளாகங்கள், பஸ், ட்ரெயின் நிலையங்கள், விமான நிலைய ஓய்வு அறைகள் என எந்த இடங்களிலும் பொருத்தலாம். இவற்றை Wi-Charge's system என அழைப்பார்கள்.
அறையின் உள்ளாக மேல் கூரையின் கீழாகப் பொருத்தப்படும் இந்த Wi-Charge சிஸ்டம், ட்ரான்ஸ்மிட்டரைப் பயன்படுத்தி, மின் சக்தியை இன்ப்ரா ரெட் கதிர்களாக மாற்றுகிறது. நம் டிவி ரிமோட் இதைத்தான் செய்து, தொலைக் காட்சிப் பெட்டிக்கு இன்ப்ரா ரெட் கதிர்களை அனுப்புகிறது. டி.வி. இந்த கதிர்களைப் பெற்று, அதன் தன்மைக்கேற்ப செயல்படுகிறது. அதே போல, Wi-Charge சிஸ்டம், 500 அடி சுற்றளவில், இன்ப்ரா ரெட் கதிர்களை அனுப்பும். சார்ஜ் செய்யப்பட வேண்டிய, நம் டிஜிட்டல் சாதனங்களில் உள்ளாக இவற்றைப் பெற்று, மீண்டும் மின் சக்தியாக மாற்றக் கூடிய சாதனம் அமைக்கப்படும். இன்ப்ரா ரெட் கதிர்களைப் பெற்று மின்சக்தியாக மாற்றக் கூடிய சாதனம், நம் ஸ்மார்ட் போன், லேப்டாப் ஆகியவற்றுள் அமைக்கப்படாவிட்டால், இப்போது பயன்படுத்தப்படும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்கள் அளவில், மாற்றக் கூடிய சாதனம் பொருத்தப்பட்டு, அவற்றை இணைப்பதன் மூலம் நாம் நம் போன்கள் மற்றும் பிற சாதனங்களை சார்ஜ் செய்திடலாம்.
இதற்கு ஏன் இன்ப்ரா ரெட் கதிர்களை வழியாகத் தேர்ந்தெடுத்தனர். இன்ப்ரா ரெட் கதிர் என்பது, நம் கண்களுக்குப் புலப்படாத குறுகிய ஒளிக் கதிர் ஆகும். வெப்பம் உருவாக்க ஒளிக்கதிர்களைத் தரும் காயில்களைப் போலல்லாமல், வயர்லெஸ் சார்ஜிங் முறையில் பயன்படுத்தப்படும் காந்த மயமான சாதனங்களைப் போல் இல்லாமல், ட்ரான்ஸ்மிட்டரில் உள்ள லேசர் டயோட் ஒன்றைப் பயன்படுத்தி, இன்ப்ரா ரெட் கதிர்கள், நேரடியாகத் தேவைப்படும் சாதனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றைப் பெறும் சாதனங்களில் உள்ள போட்டோ வோல்டிக் செல்கள், இந்த ஒளிக்கற்றையை மின் சக்தியாக மாற்றி, அந்த சாதனத்திற்குத் தருகின்றன.
குறிப்பிட்ட எல்லைப் பகுதியில், இன்ப்ரா ரெட் கதிர்களை அனுப்பும் ட்ரான்ஸ்மிட்டரும், அவற்றைப் பெறும் போட்டோ வோல்டிக் செல்கள் அடங்கிய சாதனமும் அமையும் நிலையில், மின்சக்தி கடத்தப்படுகிறது. இடையே நாம் நம் கைகளை வைத்து, இன்ப்ரா ரெட் கதிர்கள் செல்வதைத் தடுத்தாலோ, அல்லது, இந்த இரண்டு சாதனங்களில் ஒன்றைச் சற்று இடம் மாற்றி, திசை மாற்றி வைத்தாலோ, சார்ஜ் செய்வது தடைப்படும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், இந்த இரு சாதனங்களும் மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் அமைக்கப்பட்டால், மின்சக்தி அனுப்பப்படுவது தொடரும்.
Wi-Charge சிஸ்டம் என்பது எப்போதும் தொடர்ந்து மின் சக்தியை அளிக்கும் சாதனமாக இயங்கும். தானாகவே, தன் எல்லைக்குள் வரும் எந்த டிஜிட்டல் சாதனத்திற்கும் மின் சக்தியை அளிக்கும். இந்த எல்லை என்பது, வீடு போன்ற இடத்தில் 15 முதல் 20 அடிக்குள்ளாக இருக்க வேண்டும். மொபைல் சாதனங்களுக்கு 30 அடி வரை தேவைப்படலாம்.
இன்ப்ரா ரெட் கதிர்களை ஆபத்து இல்லாமல் அமைக்கவேண்டும். பேஸ்மேக்கர்கள் போன்ற சாதனங்களை வைத்துள்ள இதய நோயாளி
களுக்கு இவை இடையூறாக அமையலாம். அதே போல, குறுக்காக வரும் தடைகளையும் மீறி, இன்ப்ரா ரெட் கதிர்களின் பயணத்தை அமைத்துவிட்டால், நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களை சார்ஜ் செய்வது என்பது, நாம் மூச்சுவிடுவது போல, நம்மை அறியாமலேயே நடக்கும் நிகழ்வாக, ஓட்டமாக அமைந்துவிடும். விரைவில் இந்த தொழில் நுட்பம் செம்மைப்படுத்தப்படும் என எதிர்பார்ப்போம்.
இந்த ஆய்வில் ஈடுபட்டு சோதனை சாதனத்தை வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள், தொடந்து இதனைச் செம்மைப் படுத்தி வருகின்றனர். வரும் 2016 ஆம் ஆண்டிற்குள், வர்த்தக ரீதியாக இதனைக் கொண்டு வர முடியும் என நம்புகின்றனர். வீடுகளில் உள்ள மின்சக்தி தரும் ப்ளக் சாக்கெட்டின் இணைத்துப் பயன்படுத்தக் கூடிய ட்ரான்ஸ்மிட்டர்களை, 50 முதல் 100 டாலர் விலையில் தர முடியும் எனத் திட்டமிட்டுள்ளனர்.
முதலில் 2017 ஆம் ஆண்டில், இதனை ஒரு சிறிய ப்ளாஷ் ட்ரைவ் போலத் தர முடியும் என்றும், தொடர்ந்து, இதனை சாதனங்கள் உள்ளாகவே இணைக்கும் வகையில் வடிவமைக்கலாம் என்றும் இலக்கு வைத்துள்ளனர்.
இந்த முழு இயக்கமும் லேசர் ஒளிக் கற்றை அடிப்படையிலானது என்பதால், லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. போன்ற சிறிய அளவிலான மின் சக்தியில் இயங்கும் சாதனங்களை மட்டுமே சார்ஜ் செய்திட முடியும். பேட்டரியில் இயங்கும் கார்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்திட முடியாது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shanmuganathan - mayiladuthurai ,இந்தியா
29-மார்ச்-201513:32:46 IST Report Abuse
shanmuganathan நல்ல தகவல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X