எச்.டி.சி. டிசையர் 820 டூயல் சிம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மார்
2015
00:00

இந்தியாவில், எச்.டி.சி. டிசையர் 820 டூயல் சிம் (HTC Desire 820s) மொபைல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 25,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்தையில் ரூ. 24, 890க்குக் கிடைக்கிறது.
எச்.டி.சி. நிறுவனம் இந்த ஸ்மார்ட் போன் குறித்து, சென்ற ஆண்டே அறிவிப்பு கொடுத்திருந்தது. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்களைக் காணலாம்.
இதன் திரை 5.5. அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு Corning Gorilla Glass 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Octa-Core MediaTek MT6572 64-bit ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கத்தில், இதன் இண்டர்பேஸ் எச்.டி.சி. சென்ஸ் 6 ஆக உள்ளது. பின்புறமாக இயங்கும் கேமரா 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. முன்புறமாக உள்ள வெப் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இதனுடன் எல்.இ.டி.ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. 1080p திறன் கொண்ட வீடியோ பதிவு கிடைக்கிறது. HTC BoomSound ஸ்பீக்கர்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளாக ஆம்ப்ளிபயர் தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்கள் இயங்குகின்றன. 4ஜி இணைப்பு கிடைக்கிறது.ன் நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், 32 ஜி.பி. வரை அதிகரிக்கலாம். 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.
எச்.டி.சி.நிறுவனத்தின் தென் ஆசியப் பிரிவின் தலைவர் பைசல் இதனை வெளியிடுகையில், ”எச்.டி.சி. வாடிக்கையாளர்கள், பெரிய அளவிலான திரைகள், வேகமாக இயங்கும் ப்ராசசர்கள், அதிவேக நெட்வொர்க் மற்றும் பெரிய அளவிலான திறன் கொண்ட பேட்டரியை விரும்புகிறார்கள் என்று தெரிந்து, இந்த ஸ்மார்ட் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளோம்” என்று கூறினார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X