டேட்டா விண்ட் தரும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மார்
2015
00:00

குறைந்த விலையில் டேப்ளட் பி.சி.யினை நாடு முழுவதும் மாணவர்களுக்கு வழங்கிய டேட்டா விண்ட் நிறுவனம், அண்மையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் மூன்று ஸ்மார்ட் போன்களை, ரூ.1,999 முதல் ரூ. 5,499 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவை பாக்கெட் சர்பர் (PocketSurfer) ஸ்மார்ட் போன் என அழைக்கப்படுகின்றன. இவற்றை வாங்குவோருக்கு, ரிலையன்ஸ் மூலமாக ஓர் ஆண்டுக்கு இலவச இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்திய ஜனத்தொகையில் இன்னும் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை. இணையத்திலும் தொடர்பு கொள்வதில்லை. குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் மட்டும் கிடைப்பது இதற்குத் தீர்வாகப் போவதில்லை. எனவே தான், இலவச இணைய இணைப்பினையும், குறைந்த விலை ஸ்மார்ட் போனுடன் வழங்குவதாக, டேட்டாவிண்ட் நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இலவச இணைய இணைப்பு மூலம், ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இயக்கி ரசிக்க முடியாது. தரவிறக்கம் செய்திடவும் முடியாது. அடிப்படை தகவல்களுக்கு இணையப் பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். சமூக இணைய வலைத் தளங்களில் இயங்கலாம். ரிலையன்ஸ் மொபைல் அக்கவுண்ட்டில் பணம் இல்லாத போதும், இணைய இணைப்பு இலவசமாகக் கிடைக்கும். அதற்கான கட்டணத்தினை, ரிலையன்ஸ், டேட்டாவிண்ட் நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ளும்.
டேட்டாவிண்ட் தரும் இந்த ஸ்மார்ட் போன்களில் இரண்டு சிம்களை இயக்கலாம். ரூ.1,999க்குக் கிடைக்கும் ஸ்மார்ட் போன் PocketSurfer 2G4 என அழைக்கப்படுகிறது. இந்த 2ஜி டூயல் சிம் போனில் 3.5 அங்குல அளவில் கெபாசிடிவ் டிஸ்பிளே திரை உள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதன் ராம் நினைவகம் 256 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரியை 32 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பின்புறமாக விஜிஏ கேமரா மட்டும் தரப்பட்டுள்ளது. புளுடூத், எப்.எம். ரேடியோ, வை பி ஆகிய வசதிகள் கிடைக்கின்றன.
இதன் அடுத்த PocketSurfer 3G4 ஸ்மார்ட் போன், 3ஜி போன் ஆகும். இதில், 4 அங்குல கெபாசிடிவ் டிஸ்பிளே திரை உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதிலும் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. ஆக உயர்த்தலாம். இதில் 2ஜி மற்றும் 3ஜி இணைப்பு கிடைக்கிறது. புளுடூத், எப்.எம். ரேடியோ மற்றும் வை பி வசதி உள்ளது. இதன் விலை ரூ.2,999.
ஐந்து அங்குல அளவிலான திரையுடன் கூடிய PocketSurfer 3G5 ஸ்மார்ட் போன் ரூ.5,499 என விலையிடப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 512 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரியையும் 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். ஆண்ட்ராய்ட் 4.4.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 3 எம்.பி. திறன் கொண்ட, ப்ளாஷ் இணைந்த பின்புறக் கேமராவும், முன்புறமாக வி.ஜி.ஏ. கேமராவும் உள்ளன. 3ஜி இணைப்பு தரும் இந்த டூயல் சிம் போனில், புளுடூத், எப்.எம். ரேடியோ மற்றும் வை பி வசதிகள் கிடைக்கின்றன. மார்ச் 17 முதல் இந்த ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X