பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 மார்
2015
00:00

“செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள்” மிக அருமையான கட்டுரை. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகளைச் சந்தித்திருப்பார்கள். என்னைப் போன்ற பலருக்கு, இதனால் ஏற்படும் அச்சத்தைத் தீர்த்து, சமாளிக்கும் வழிகளை மிக நன்றாக விளக்கியுள்ளது இந்தக் கட்டுரை. எழுதியவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.
பேரா. கே.சி.கோகிலா, திருப்பூர்.

மொபைல் போனில் புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். குறித்த வேறுபாட்டினை அறியாமலேயே சாம்சங் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்தி வந்த நான், உங்கள் கட்டுரையைப் படித்த பின்னர், முழுமையாக அறிந்து கொண்ட எண்ணம் ஏற்பட்டது. நன்றி.
எல். அகமது பாட்சா, பழநி.

கடந்த 14 ஆண்டுகளாக நான் தமிழ் எழுதப் பயன்படுத்தி வருவது முரசு அஞ்சலாகும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, தன் தொகுப்பினை மேம்படுத்துவதோடு, அதனை இலவசமாகவும் தரும் இதன் தயாரிப்பாளர் பாராட்டுதல்களுக்குரியவர். உங்கள் கட்டுரை அதனைத்தான் செய்துள்ளது. உங்களுக்கும் அவருக்கும் நன்றி.
த.காசி விசாலாட்சி, சென்னை.

இன்ப்ரா ரெட் கதிர்கள் மூலம் அனைத்து சாதனங்களையும் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்திடும் வசதி வந்தால், அது ஒரு பெரிய புரட்சியாக இருக்கும். நம்முடைய பல சிக்கல்கள் தீரும். விரைவில் அந்த தொழில் நுட்பம் வர வேண்டும்.
என். கிருஷ்ணன், ஆதனக் கோட்டை.

பேஸ்புக்கில் தகவல்களை நாம் விரும்பும் நபருக்கு மட்டும் அனுப்பவும், விரும்பாத நபருக்குத் தடுக்கவும் ஒரு வசதி உள்ளது என்பது இப்போது உங்கள் கட்டுரை மூலம் தான் தெரிய வந்தது. இவ்வாறு பல விஷயங்களை, நீங்கள் புதிது புதிதாய்த் தந்து வருவது, எங்களுக்கு மிகப் பயனுள்ளதாய் உள்ளது. திங்கள் கிழமை தோறும் நாங்கள் கம்ப்யூட்டர் மலர் படித்து, எங்களுக்குள் இது போன்ற வழிகளைப் பரிமாறிக் கொள்கிறோம். எங்களின் மனங்கனிந்த நன்றி.'
ஆர். ராம சுப்பிரமணியன், புதுக்கோட்டை.

ஸ்ப்ரைட் குறித்த என் கேள்விக்கு, தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி. இது போல எங்களால் யாரிடமும் சந்தேகத்தை நிவர்த்தி செய்திட முடியவில்லை. எனவே கேள்வி பதில் பக்கங்களை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். ராதிகா குமார், திருப்பூர்.

மொபைல் போன் சார்ஜ் இன்ப்ரா ரெட் மூலம் ஒரே நேரத்தில் பல சாதனங்களுக்கு ஏற்படுத்த முடியும் என்றால், அதைவிடப் பெரிய புரட்சி மொபைல் போன் சரித்திரத்தில் வேறு எதுவும் இருக்காது. இப்போது சார்ஜ் செய்வது என்பது பல குழப்பங்களின் உருவாக உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு சார்ஜர், ப்ளக் என அனைத்தும் குழப்பமாக அல்லவா இருக்கிறது.
ஏ.பி. மருதநாயகம், பண்ருட்டி.

“ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்” என்ற கட்டுரையை அச்செடுத்து, நகலெடுத்து தெரிந்தவர்களுக்கு வழங்கி வருகிறேன். போன் வாங்குவது பெரிதல்ல. அதிலுள்ள அனைத்து வசதிகளையும், அதன் அமைப்பையும் தெரிந்து பயன்படுத்துவதுதான் முக்கியம். கம்ப்யூட்டர் குறித்து பல நூல்கள் வந்தாலும், போன்கள் குறித்து நூல்கள் வருவது இல்லை. உங்களின் கட்டுரைகள் இந்த இடத்தை நிரப்புகின்றன. எங்களைப் போன்றவர்களுக்குப் பெரும் உதவியாய் இருக்கின்றன. மிக்க நன்றி. இது போல அடிக்கடி
பயனுள்ள கட்டுரைகளைத் தரவும்.
எஸ். கருப்பசாமி, சிவகாசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subbaraman - madurai,இந்தியா
31-மார்ச்-201516:04:55 IST Report Abuse
subbaraman என் கம்ப்யூட்டரில் not responding என அடிக்கடி வருகின்றது. அதை எப்படி நிவர்த்தி செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X