பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2015
00:00

டேட்டா விண்ட் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் தருவது மட்டும் சரியல்ல. அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தீர்த்து வைத்திட வாடிக்கையாளர் மையங்களையும் அமைக்க வேண்டும்.
ஆ. சிவப்பிரகாசம், காரைக்கால்.

விண்டோஸ் 10 டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டிலும், விண் 10 மொபைல் சிஸ்டம் குறித்த விபரங்கள் பல ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளன. குறிப்பாக என்.எப்.சி. தொழில்நுட்பத்தில், அதனுடன் இணைக்கப்படும் எச்.சி.இ. தொழில் நுட்பம் நமக்கு, பணப் பரிமாற்றத்தில் கூடுதல் பாதுகாப்பினைத் தருவதாக அமைந்திருப்பது சிறப்பாகும். மொபைல் பயன்பாடு, இந்த பாதுகாப்புகளோடு இன்னும் பரவலாகும். குறிப்பாக, கிராமப் புறங்களில் இதன் புழக்கம் அதிகமாகும்.
டாக்டர் என். இனியன், மதுரை.

ஒரு காலத்தில், நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் பிரவுசரை வீழ்த்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டில் முந்தியது. மைக்ரோசாப்ட் தந்த விண்டோஸ் சிஸ்டம் நிழலில், இதற்கும் புகழ் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அது தவறு என நீதிமன்றம் வரை சென்று மற்ற நிறுவனங்கள் ஆணை பெற்றன. பின்னர், ஹேக்கர்களால் அதிகம் பாதிக்கப்படும் பிரவுசர் என்ற பெயரையும் பெற்றது. குரோம் பிரவுசர் வாடிக்கையாளர்களிடையே புகழ் பெற்ற பின்னும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நல்ல இடம் பெற்றிருந்தது. இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனமே அதனை முடிக்கப் போகிறது. ஸ்பார்டன் புதிய வசதிகளை முன்னிறுத்தி முதல் இடம் பெறுமா என்பது இனிமேல் தான் தெரியும்.
பேரா. இசக்கிமுத்து, எஸ்., திருப்பூர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வளர்ந்த விதம் குறித்த உங்கள் புள்லி விபரங்கள் மிக அருமை. குரோம் பிரவுசரை மட்டுமே பயன்படுத்தி வரும் இன்றைய தலைமுறையினர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.
பா. ஜெயக்குமார், புதுச்சேரி.

இன்னும் பல அரசு துறைகள், பொதுப் பிரிவில் இயங்கும் அமைப்புகள், தங்களின் இணைய தளத்தினை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே இயங்கும்படி அமைத்து இயக்கி வருகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்கப் போவதால், இவர்கள், பொது மக்கள் நலனை முன்னிட்டு தங்கள் தளங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆர். நன்மாறன், மதுரை.

யு.எஸ்.பி. டைப் சி வகை பயன்பாட்டில், பழைய முறை யு.எஸ்.பி. சாதனங்களும் இயங்கும் என்பது பலருக்கு மன நிறைவைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. பழைய டெலிபோன் மோடம், பேஜர் கருவிகள் திடீரென காலாவதியானது போல, பழைய யு.எஸ்.பி. போர்ட் சாதனங்களும், பழையதாய் வீணாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. அதனைத் தீர்த்து வைத்தமைக்கு நன்றி.
கே. நிறைமதி, தஞ்சாவூர்.

பைரசியாக விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்களுக்கும், விண்டோஸ் 10 இலவசம் என்ற அதிரடி சந்தோஷ அதிர்ச்சி தகவலை மைக்ரோசாப்ட் தந்துள்ளது, அதன் ராஜ தந்திரமா, அல்லது பைரசியைத் தடுக்க இயலாத நிலையா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால், மைக்ரோசாப்ட் எதனையோ திட்டமிட்டுத்தான் இந்த முடிவை எடுத்துள்ளது என்று நினைக்க வேண்டியதுள்ளது.
என். இ. குமரேசன், காரைக்கால்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X