விநாடிக்கு 2 கிகா பிட் வேகத்தில் இணையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
00:00

கூகுள் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக, ”கூகுள் பைபர்” என்ற திட்டத்தின் அடிப்படையில், விநாடிக்கு 1 கிகா பிட் வேகத்தில் இணைய இணைப்பினை அமெரிக்காவில் தேர்ந்தெடுத்த சில நகரங்களில் வழங்கி வருகிறது. 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கான்சஸ் நகரத்தில் அறிமுகமாகி, தற்போது 35 நகரங்களுக்கு மேல் இணைப்பினை வழங்கி வருகிறது. இதன் வேகம் விநாடிக்கு 1 கிகா பிட் அளவாகும். இந்த அளவில், இணைய இணைப்பு மற்றும் இணைய இணைப்பின் வழி டி.வி. ஒளிபரப்பு ஆகியவை தரப்படுகின்றன.
அமெரிக்காவில், இணைய இணைப்பு வழங்கி வரும் காம் காஸ்ட் (Comcast) என்னும் நிறுவனம், தற்போது கூகுள் நிறுவனத்தின் ”கூகுள் பைபர்” போல ”கிகாபிட் ப்ரோ” என்ற பெயரில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதன் முதலில் ஜியார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரில் இது அறிமுகமாகிறது.
இதன் அடிப்படையில், விநாடிக்கு 2 கிகா பிட்ஸ் வேகத்தில், இணைய இணைப்பு வழங்கப்படும். பைபர் இழை மூலம் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்கப்படும். இந்த ஆண்டு முடிவிற்குள், அட்லாண்டா நகரில் 1 கோடியே 80 லட்சம் வீடுகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர, காம் காஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காம்காஸ்ட் இதற்கான கட்டணம் குறித்து எந்த அறிவிப்பும் தரவில்லை.
கூகுள் பைபர் திட்டத்தின் கீழ், மாதம் 70 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது காம் காஸ்ட் நிறுவனம் வழங்கும் இணைய இணைப்பிற்கு 505Mbps வேகத்திற்கு 400 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், புதிய கிகாபிட் ப்ரோ திட்டத்தில் அந்த அளவிற்குக் கட்டணம் இருக்காதென்றும், தற்போது வீடுகளில் இணைப்பு வைத்திருப்பவர்கள், தானாகவே கிகாபிட் ப்ரோ திட்டத்திற்க்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
காம்காஸ்ட் நிறுவனம், ஏற்கனவே, 1,45,000 மைல் தூரத்திற்கு, பைபர் கட்டமைப்பினை ஏற்படுத்தி, 15 லட்சம் நிறுவனங்களுக்கு இணைய இணைப்பினை, 10 கிகா பிட்ஸ் வேகத்தில் வழங்கி வருகிறது. இதனால், இந்த கட்டமைப்பின் அருகே உள்ள வீடுகளுக்கு
முன்னுரிமை கொடுத்து புதிய திட்டத்தில் இணைப்பு வழங்கப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X