டில்லி மெட்ரோ ட்ரெயின்களில் அனைவருக்கும் வை பி இணைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
00:00

டில்லியில் இயங்கும் அனைத்து மெட்ரோ ட்ரெயின்களில் பயணம் செய்வோர் அனைவருக்கும், இலவச வை பி இணைய இணைப்பு விரைவில் கிடைக்க இருக்கிறது. உலகில் மிகப் பெரிய மெட்ரோ ட்ரெயின் கட்டமைப்புகளில், 13 ஆவது இடத்தையும், இந்தியாவில் மூன்றாவது இடத்தையும் கொண்டுள்ள, டில்லி மெட்ரோ ட்ரெயின்களில் பயணிக்கும் அனைவருக்கும் இலவச வை பி இணைப்பு தர, அதன் நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், நான்கில் ஒன்று, தரைக்கு அடியில் பூமிக்குள்ளாக அமைந்துள்ளது. எனவே, மிக நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் வை பி இணைப்பு தான், சரியாகத் திறனுடன் இயங்க முடியும்.
தற்போது, டில்லி மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைந்து இயக்கப்படும், குர்கவான் அதி விரைவு மெட்ரோ ரயில் திட்டத்தில், ஆறு நிலையங்களில், எம்.டி.எஸ். இந்தியா நிறுவனத்துடன் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் அடிப்படையில், வை பி இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் ஒப்பிடுகையில், டில்லி மெட்ரோ அமைப்பு 193 கி.மீ பரப்பளவில், 140 ஸ்டேஷன்களுடன் விரிவடைந்துள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகம். மொபைல் சேவை தரும் நிறுவனங்களிடம் இதற்கான திட்ட மதிப்பீட்டினையும், திட்டத்தினையும் கேட்டுள்ளது.
டில்லியில் நாள் தோறும் ஏறத்தாழ 25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இவர்களில் 70% முதல் 80% பேர் வரை, ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.
நிறுவனங்கள் தரும் செலவினத் திட்டம் அடிப்படையில், மே மாதத்திற்குள், இதனை வழங்கப்போகும் நிறுவனம் அல்லது நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள், வை பி இணைப்பு வழங்கப்படும்.
இதற்கிடையே, அண்மையில், அதிகப் பெரும்பான்மையுடன், டில்லி மாநிலத்தில் பதவி ஏற்றுள்ள ஆம் ஆத்மி அரசு, டில்லி முழுவதும், வை பி இணைப்பினை இலவசமாக வழங்குவதாகக் கூறி இருந்தது. தற்போது, முதல் 30 நிமிடங்களுக்கு மட்டும் இலவசம் என்றும், அதன் பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தன் இலக்கினை மாற்றி அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, இந்த இலவச 30 நிமிட சேவையைப் பயன்படுத்தும் முன்னர், முதல் 30 விநாடிகளுக்குக் கட்டாய விளம்பரம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வடிவமைக்க மூவர் அடங்கிய சிறப்பு குழு ஒன்றினை ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்துடன், டில்லி மாநில அரசின் திட்டம் எந்த வழிகளில் இணைந்து போக்கும் என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஆனால், ஒன்று உறுதி. வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவதில், உலக அளவில் இரண்டாவது இடம் பெற்றுள்ள டில்லி மெட்ரோ நிறுவனம், புதிய சேவை மூலம், முதல் இடத்தைப் பெறும் வாய்ப்பினைப் பெறலாம். டில்லிவாசிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X