பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
00:00

பேஸ்புக் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க எமோட்டிகானை நீக்கியது அதன் சமூகப் பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறது. அதற்கு நாம் அனைவரும் பாராட்டு தெரிவிக்கலாம். இதே போல, பாலியல் சார்ந்த செய்திகளையும் பேஸ்புக் நீக்குவது நல்லது.
ஆர்.கோகிலம், திருச்சி.

ப்ளிப் கார்ட் மற்றும் மிந்த்ரா இணைய தளங்கள் ஆப்ஸ் என்னும் தனி அப்ளிகேஷன்களை அமைப்பது, வாடிக்கையாளர்களை வேறு எங்கும் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அதைத்தான் செய்வார்கள். நாம் அதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
எஸ். வசந்தி ராஜசேகரன், சென்னை.

பவர் பேங்க் குறித்த கேள்விக்கான உங்கள் பதில் விளக்கமாகவும் விரிவாகவும் இருந்தது. தகவலுக்கு நன்றி.
டி. துரைராஜ் சாலமோன், வேடசந்தூர்.

மெனு கீ என்பது எப்படி இயக்கலாம் என கேள்வி -பதில் பகுதியில் தந்த டிப்ஸ் மிக அருமை. நன்றி.
இல. ஜெயராமன், கருமாத்தூர்.

பிழைச் செய்திகளில், சான்றிதழ் குறித்த செய்திகள் சார்ந்து தரப்பட்டுள்ள விளக்கம் நன்றாக உள்ளது. இந்த விளக்கமான தகவல் தெரியாமல், இந்த செய்தி கிடைத்தவுடன், பயந்து போய், அந்த தளம் பக்கமே போகாமல் இருந்தேன். சில வேளைகளில் கூகுள் தேடல் பக்கத்திற்குக் கூட இது போல செய்தி கிடைக்கும். அது எப்படி?
சா.முத்தையா, காரைக்குடி.

விண்டோஸ் 10 இலவசம் என்று அறிவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து சந்தேகம் கொண்டிருந்தேன். மிகத் தெளிவாக, என்ன செய்திட வேண்டும் எனத் தகவல் தந்தமைக்கு நன்றி.
டி.கே. உமையாள், தாம்பரம்.

ஆண்ட்ராய்ட் போனை ஆசைப்பட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். ஆனாலும், கம்ப்யூட்டரைப் போல இதனையும் அவ்வப்போது “சர்வீஸ்” செய்திட வேண்டும் என்பது விந்தையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. தகவல்களுக்கு மிக்க நன்றி. இது பலருக்கு நிச்சயம் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
சி.ஆர். சிவக் கண்ணன், எட்டயபுரம்.

மொபைல் போனில் காப்பி அண்ட் பேஸ்ட் என ஆண்ட்ராய்ட் ட்யூனிங் கட்டுரையில் கொடுத்த தகவல் மிகப் பயனுள்ள தகவல். அதனைப் பயிற்சி செய்து பார்த்து பழகிய பின்னரே, ஒரு ஸ்மார்ட் போனில் இது எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
ஆ.திருமால், தேனி.

பொதுவாக பிரவுசர் காட்டும் பிழைச் செய்திகள் நமக்கு சில மட்டுமே அடிக்கடி வரும். அவையும் 400 தொடங்கிய எண்களையே கொண்டிருக்கும். உங்கள் கட்டுரையில் தெளிவாக, மூன்றுவித பிழைச் செய்திகளை வகைப்படுத்தித் தந்தது பயனுள்ளதாக இருந்தது.
என். அப்துல் வஹாப், காரைக்கால்.

யாஹூ பாஸ்வேர்டினை போனுக்கு அனுப்பும் முறை மிகவும் பாதுகாப்பானதுதான். ஆனால், போன் எண்ணை மாற்றிக் கொள்ளவும் ஒரு வழி முறை தர வேண்டும். நம் வங்கிகள், போனுக்கு குறியீடு அனுப்புகின்றன. ஆனால், போன் எண்ணை மாற்றிக் கொள்ள பல நிலைகளில் விண்ணப்பங்களைக் கேட்கின்றன. இறுதியில் மாற்றத்தையும் ஏற்படுத்த தாமதிக்கின்றன. இது போன்ற சூழ்நிலைகளில், யாஹூ தன் வாடிக்கையாளர்களைத் தவிக்க விடாது என்று எதிர்பார்ப்போம்.
எம். பரமசிவம், சிதம்பரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X