விருப்பப்பட்ட புரோகிராமில் திறக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 நவ
2010
00:00

நாம் திறக்க விரும்பும் புரோகிராம்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கும் புரோகிராம்களில் தான் திறந்து காட்டுகிறது. நாமும், அப்படியே பழகியிருக்கிறோம். ஆனால், ஓப்பன் சோர்ஸ் இயக்கம் வந்த பின்னர், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் என்று சொல்லப்படும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளால் தயாரித்து இலவசமாக வழங்கப்படும் புரோகிராம்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம் இனங்காணும் புரோகிராம்களைக் காட்டிலும், கூடுதல் வசதிகள் கொண்டதாக உள்ளன. எனவே அந்த புரோகிராம்களில், நாம் குறிப்பிடும் பைல்களைத் திறந்து இயக்க நாம் விருப்பப்படுவோம்.
குறிப்பிட்ட வகை பைல்களை அந்த புரோகிராம்களில் தாமாகத் திறக்கப்பட வேண்டும் என எண்ணுவோம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் .txt  பைல்களை தான் கொண்டுள்ள நோட்பேட் புரோகிராமில் தான் திறக்கும். இதற்குப் பதிலாக Notepad ++  போன்ற பல புரோகிராம்கள் இப்போது கிடைக்கின்றன. இவற்றில் திறக்க நாம் விரும்பலாம்.
இதே போல இமேஜ் பைல்கள், பிரசன்டேஷன் பைல்கள், ஆகியவற்றைப் பயன்படுத்த நமக்கென சில விருப்பமான புரோகிராம்கள் இருக்கலாம். நம் விருப்பத்திற்கேற்ப பைல்களைத் திறக்கும் புரோகிராம்களை, நிலையாக அமைத்துக் கொள்வதற்கு விண்டோஸ் இடம் தருகிறது. அதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
திறக்க விரும்பும் பைலை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Open With என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பட்டியலில் Choose Program  என்பதைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும்.
இனி, உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள, இந்த பைல் சார்ந்த புரோகிராம்கள் பட்டியல் கிடைக்கும். இதில் உங்களுக்கு உகந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். அந்த பட்டியலில் நீங்கள் எதிர்பார்க்கும், உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துள்ள குறிப்பிட்ட புரோகிராமின் பெயர் காட்டப்படவில்லை என்றால்,  Browse  என்ற பட்டனில் கிளிக் செய்திடலாம்.  விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். இதில் Program Files என்ற போல்டருக்குச் சென்று, நீங்கள் விரும்பும் .exe  புரோகிராமின் பைலைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
புரோகிராமின் பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர்,  Always use the selected program to open this file  என்பதில் கிளிக் செய்துவிடவும். இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பும் பைல் மீது டபுள் கிளிக் செய்திடுகையில், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம் திறக்கப்பட்டு, அந்த பைல் இயக்கப்படும்.
 இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. My Computer  ஐகான் மீது கிளிக் செய்து திறந்து கொள்ளவும். Tools  செல்லவும். கிடைக்கும் பட்டியலில் Folder Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு தரப்படும் பட்டன்களில் Change   என்னும் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் விரும்பும் பைல் வகையினைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தவுடன், கிடைக்கும்  Choose Program   பட்டியலில், தேர்ந்தெடுத்த பைலுக்கான புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.  மேலே சொன்ன வழிகளை எந்த வகை பைலுக்கும் மாற்றி அமைக்கலாம். எனவே விருப்பப்பட்ட புரோகிராமில் தான், நீங்கள் விரும்பும் பைல், உங்கள் கம்ப்யூட்டரில் திறக்கப்பட வேண்டும் என விரும்பினால், மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றி மாற்றிக் கொள்ளுங்கள். 

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X