நூறு கோடியைத் தொட இருக்கும் மொபைல் பயனாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
00:00

இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்துடன் முடிந்த காலத்திற்கான, மொபைல் பயன்பாடு குறித்த தகவல்களை, தொலை தொடர்பு விவகாரங்களைக் கண்காணித்துவரும் அமைப்பான, ட்ராய் (TRAI) வெளியிட்டுள்ளது. அதே எண்ணைக் கொண்டு, தங்கள் மொபைல் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ள விண்ணப்பம் அளித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மொத்த மொபைல் பயனாளர் எண்ணிக்கை 96 கோடியே, 5 லட்சத்து 80 ஆயிரம். இந்த வேகத்தில் சென்றால், வரும் ஜூலை மாதத்திற்குள், இந்த எண்ணிக்கை நூறு கோடியை எட்டலாம்.
இன்னொரு முக்கிய தகவலும், இதே நேரத்தில் தரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில், நகரங்களில் உயரும் மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கிராமப் புறங்களில் மிக அதிகமாக பயனாளர்கள் உயர்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களாக, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தினர் தங்கள் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றனர். கடந்த 12 மாதங்களில், 1.7 கோடி சந்தாதாரர்கள். இந்நிறுவனத்தை விட்டு விலகியுள்ளனர்.
பொதுவாக, மொபைல் எண்களைத் தொடர்ந்து வைத்திருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை முன்பு 10க்கு 7 பேராக இருந்து வந்தனர். தற்போது அது 10க்கு ஒருவராகக் குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில், 96.5 கோடி சந்தாதாரர்களில், 85.2 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்துபவர்களாக உள்ளனர். தற்போது இது 88.6% ஆக உள்ளது.
ஜனவரியில் 95 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரமாக இருந்த மொபைல் சந்தாதாரர்கள். பிப்ரவரி இறுதியில், 96 கோடியே 5 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நகரப் பகுதிகளில், மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 0.69% உயர்ந்துள்ளது. 38 லட்சத்து 20 ஆயிரம் பேர் புதியதாக மொபைல் இணைப்பு பெற்றுள்ளனர். இதே நேரத்தில், கிராமப் புறங்களில், 1.11% உயர்ந்து 44 லட்சத்து 20 ஆயிரம் புதிய இணைப்புகள் தரப்பட்டுள்ளன. நகர்ப் புறங்களில் 55.72 கோடிப் பேரும், கிராமப்புறங்களில், 40.33 கோடிப் பேரும், மொபைல் பயன்படுத்தி வருகின்றனர்.
விநாடிக்கு 512 கிலோ பிட்ஸ் வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 45 லட்சத்திலிருந்து, 9.73 கோடியாக பிப்ரவரியில் உயர்ந்திருந்தது. கடந்த 12 மாதங்களில், அதிக எண்ணிக்கையில் மொபைல் சந்தாதாரர்களைச் சேர்த்ததில், ஐடியா செல்லுலர் நிறுவனம் முதல் இடத்திலும், வோடபோன் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதே காலத்தில் ஒரு கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. சிஸ்டமா நிறுவனமும் தன் வாடிக்கையாளர்களைக் கணிசமாக இழந்துள்ளது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X