வரையறையற்ற நடுநிலை இணையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
00:00

சில மாதங்களாகப் பல நாடுகளில், இணையம் குறித்த விவாதங்களில், “நெட் நியூட்ராலிட்டி” எனப்படும் 'வரையறையற்ற நடுநிலை இணையம்' என்ற பொருள் அதிகம் இடம் பெற்று வருகிறது. அமெரிக்காவில் இது ஒரு பெரிய விவாதமாகவும், அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப் போர் ஆகவும் உருவெடுத்தது. பின்னர் அமெரிக்க அரசின் 'ஐக்கிய தகவல் தொடர்பு தீர்ப்பாயம்' (Federal Communications Commission) சென்ற பிப்ரவரி 26 அன்று, ஒரு பொதுத் தீர்வினை ஆணையாக, 400 பக்க ஆவணமாகத் தந்தது. “இணைய சேவை நிறுவனங்களை” பொது சேவை நிறுவனங்கள் என அறிவித்தது. இணையப் பயன்பாடு என்பது தொலைபேசிக்கு இணையான ஒரு சாதனமாக மாறிவிட்டது. எனவே அது ஒவ்வொருவருக்கும் எந்தவிதத் தடையுமின்றி கிடைக்க வேண்டும் என அறிவித்தது. தற்போது அதன் மீதும் விவாதம் தொடர்கிறது.
இந்தியாவிலும் இந்தப் பிரச்னை குறித்து பல விவாதங்கள் அரங்கேறியுள்ளன. இங்கு நமக்கு இணைய இணைப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், சில இணைய தளங்களைத் தடை செய்துள்ளன. பலவற்றை இலவசமாக அணுக அனுமதி வழங்குகின்றன. தடை செய்யப்பட்ட தளங்கள், இலவசமாகப் பார்ப்பதற்குத் தடை செய்யப்பட்டவையாக உள்ளன. பயனாளர்கள் கட்டணம் செலுத்தினால், இவற்றைப் பார்க்க அனுமதி வழங்கப்படும்.
இதை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம். இந்தியாவில், வரையறையற்ற நடுநிலையுடன் கூடிய இணைய சேவை குறித்து இதுவரை இன்னும் சட்ட விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. அதனால், சில தகவல் தொடர்பு நிறுவனங்கள், வெளிப்படையாகவே எல்லை மீறி செயல்படும் சூழ்நிலையில், இங்கு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைக் கண்காணிக்கும் ட்ராய் அமைப்பு, அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப் பிரிவுகளைக் கொண்டிருக்கவில்லை.
இணையம் என்பதே ஒரு தனி மனிதருக்கோ, ஒரு நாட்டிற்கோ, அரசுக்கோ சொந்தமானது அல்ல. அது ஒரு உலகளாவிய Internet Society என்னும் அமைப்பினால், அதன் பல்வேறு பிரிவுகளினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, இணையம் அனைவருக்கும் பொதுவானது. யாரும் அவருடைய விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எந்த நிர்வாகமும் தலையிட முடியாது. இருப்பினும், இந்தியாவில் இயங்கும் சில தகவல் தொடர்பு நிறுவனங்கள், ட்ராய் அமைப்பினைத் தங்கள் செல்வாக்கால், கட்டாயப்படுத்தி, அவர்களுக்கேற்ப வளைக்கப் பார்க்கின்றன. சில இணைய தளங்களைத் தனியே பிரித்துத் தடை செய்து, கட்டணம் செலுத்தி மட்டுமே பார்க்கும் வகையில் கொண்டு வர முயற்சிக்கின்றன. இதனால், பயனாளர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிக்க திட்டமிடுகின்றனர். இது “வரையறையற்ற நடுநிலையுடன் கூடிய இணைய சேவைக்கு” எதிரானத் திட்டமிட்ட சதியாகும்.
நடுநிலையான இணைய சேவை என்பது, இணையத்தில் பதியப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெறும் உரிமை, அனைவருக்கும் சமமாகத் தரப்பட வேண்டும் என்பதேயாகும். பயனாளர்கள், தகவல்கள், இணைய தளங்கள், இணைய தளங்களைப் பெறுவதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் அல்லது எந்த வகை இணைப்பு என்பனவற்றின் அடிப்படையில் பாகுபாடு அல்லது கட்டணம் வசூல் செய்யப்படக் கூடாது. ஆனால், அத்தகைய பாகுபாட்டினை ஏற்படுத்த, ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் டாட்டா டொகோமோ ஆகிய நிறுவனங்கள், ட்ராய் அமைப்பினை நெருக்கி வருகின்றன.
அமெரிக்காவிலும் இதே போல இணைய சேவை நிறுவனங்கள் முயற்சித்த போது, பெரும் அளவில் மக்கள் தங்கள் எதிர்ப்பினைக் காட்டி, மக்கள் சார்பான ஆணையைப் பெற்றனர். இன்றைய நிலையில், இணைய தகவல் மற்றும் தளங்களிடையே பாரபட்சம் காட்டுவது அமெரிக்காவில் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பானதாகும்.
வரையறையற்ற நடுநிலையுடன் கூடிய இணைய சேவையினையும் தற்போது சேவை நிறுவனங்கள் மேற்கொள்ளத் திட்டமிடும் நிலைகளையும் ஓர் எடுத்துக் காட்டுடன் விளக்குகிறேன். நாம் அனைவரும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம். விளக்கு, மிக்சி, கிரைண்டர், டிவி, ப்ரிட்ஜ், ஏ.சி. என எதனைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தும் மின்சாரத்திற்கேற்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, பிலிப்ஸ் ட்யூப் லைட் பயன்படுத்தினால் ஒரு கட்டணம், அல்ட்ரா கிரைண்டர் பயன்படுத்தினால் ஒரு கட்டணம், வேறு விளக்கு மற்றும் கிரைண்டர் பயன்படுத்தினால் ஒரு கட்டணம், சாம்சங் டிவிக்கு ஒரு கட்டணம் என்று மின்சாரத்திற்குக் கட்டணம் விதித்தால் அது எவ்வளவு அபத்தமானது என்பது அனைவருக்கும் புரியும். அதே போல் தான், தற்போது இணைய சேவை நிறுவனங்கள் கட்டணம் விதிக்க முற்படுகின்றன.
இணையத்தைப் பயன்படுத்துவதில், அதன் செயல் வேகம். பயன்படுத்தும் டேட்டா அளவு, நாட்கள் வரையறை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள கட்டணத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து நாம் கட்டணம் செலுத்துகிறோம். இதற்குப் பதிலாக, பேஸ்புக் என்றால் இலவசம், ஜிமெயில் என்றால் கட்டணம், ட்விட்டர் என்றால் பாதி சலுகை என்று கட்டணம் விதித்தால் என்னவாகும்? +2 தேர்வு முடிவுகள் பார்க்க, ரூ.20 என வசூலித்தால், யார் தான் சகித்துக் கொள்வார்கள்?
எனவே, தகவல் தொடர்பு இணைய சேவை நிறுவனங்கள் விரும்பும் வகையில் இணைய தளங்களையும், கட்டணத் திட்டங்களையும் வரையறை செய்திட ட்ராய் அனுமதித்தால் என்னவாகும்? 2ஜி இணைப்பிற்கு மாதம் ரூ.250, 3ஜி இணைப்பிற்கு மாதம் ரூ.650, கூடுதலாக பேஸ்புக் பார்க்க ரூ.60, ஜிமெயில் பார்க்க ரூ. 40, யூட்யூப் பார்க்க ரூ.100, ப்ளிப்கார்ட் மற்றும் பிற வர்த்தக தளங்கள் எனில் இலவசம் எனக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படலாம்.
இந்தச் சூழ்நிலையில், “யு ட்யூப் போன்ற தளங்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள பாடல், ஆடல் காணொளி விடியோக்களை, இணையப் பயனாளர்களுக்குத் தொடர்ந்து தர, அதிக செலவிட்டு கட்டமைப்பை உருவாக்கி இயக்கி வருகிறோம். எனவே, அத்தகைய தளங்களைக் காண கூடுதல் கட்டணம் வசூலித்தால் என்ன?” என்று இணைய தள நிர்வாகிகளும், சேவை நிறுவனங்களும் கேட்கின்றன.
பயனாளர்களோ, இந்த செலவினங்கள் மற்றும் நிறுவனத்திற்கான லாபம் ஆகியவற்றைக் கணக்கிட்டுத்தான், இணைய சேவை கட்டணமே விதிக்கப்படுகிறது. பின், ஏன் மீண்டும் தனியே அதிகக் கட்டணம் என்ற வினாவினை எழுப்புகின்றனர்.
இன்னும் ட்ராய் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே, இணைய சேவை நிறுவனங்கள் மறைமுகமாக மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க, இந்திய இணையப் பயனாளர்களும் முயன்று வருகின்றனர்.
ட்ராய் அமைப்பு மக்களிடம் இருந்து இது சார்பாகக் கருத்துகளை கேட்டது. இதனைப் பயன்படுத்தி சில தன்னார்வலர்கள் Savetheinternet.in என்னும் இணைய தளத்தை உருவாக்கி, அதன் மூலம் பயனாளர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மூன்று நாட்களில் 4 லட்சம் மின் அஞ்சல் அனுப்பப்பட்டன. தற்போது நிமிடத்திற்கு 10,000 அஞ்சல்கள் வீதம் ட்ராய் அமைப்பிற்கு இந்த தளம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இவர்களுடன் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், ஊடகத்தில் இயங்குபவர்கள் எனப் பலரும் இதனை மிகத் தீவிரமாகத் தங்கள் கரங்களில் எடுத்துள்ளனர். https://www.youtube.com/watch?v=mfY1NKrzqi0&feature=youtu.be என்ற இணைய தளத்தில் இது குறித்த விடியோ படம் ஒன்று பதியப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் இணைய நிறுவனங்களின் பிரதிநிதியாக இயங்கும் ' இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு' (Internet and Mobile Association of India (IAMAI) “தற்போது உள்ள தகவல் தொடர்பு சட்டத்திற்கும் மேலாக ஏதேனும் விதிமுறைகள் கொண்டு வந்தால், அது புதிய வசதிகளைக் கண்டறியும் திறமையின் கழுத்தை நெறிப்பதற்கு ஒப்பாகும்” என்று அறிவித்துள்ளது. “எழுந்து வரும் நம் பண்பாட்டின் எழுச்சியை இந்த விதிமுறைகள் சிதைத்துவிடும்” என்றும் எச்சரித்துள்ளது.
இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள், அவர்களின் தகவல்கள் பயனாளர்களைச் சென்றடைய, இணைய இணைப்பு தரும் சேவை நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவதை, கூகுள், பேஸ்புக் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
பலமான எதிர்ப்பு காட்டப்பட்டுள்ள நிலையில், ட்ராய் அமைப்பு இணையப் பயனாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X